இந்த பதிவில் வனவிலங்கு பாதுகாப்பு கட்டுரை பதிவை காணலாம்.
அன்றைய காலத்தில் விலங்குகளிடம் இருந்து மனிதனை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை இருந்தது. இன்று மனிதர்களிடம் இருந்து விலங்குகளை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. காடுகள், விலங்குகள் என அனைத்தும் உயிர் வாழ்ந்தால் தான் பூமி சமநிலையுடன் இருக்கும்.
- வனவிலங்கு பாதுகாப்பு
- Vana Vilangu Pathukappu Katturai In Tamil
மனிதநேயம் பற்றிய கட்டுரை
வனவிலங்கு பாதுகாப்பு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வனவிலங்குகள் எனப்படுபவை
- வனவிலங்ககளின் முக்கியத்துவம்
- அழிவடையும் வனவிலங்குகள்
- வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள்
- முடிவுரை
முன்னுரை
மனிதனுடைய வாழ்வில் காடுகள் மிகவும் முக்கியமான ஒரு இடத்தை பெறுகின்றன. காடுகள் வெறுமனே தாவரங்களை மாத்திரம் குறிப்பவையா? என்றால் இல்லை அவை அங்கே வாழ கூடிய விலங்குகளையும் குறிக்கும்.
காடுகளிலே வாழக்கூடிய விலங்குகளை தான் வன வலங்குகள் என்று குறிப்பிடுகிறார்கள். வன விலங்குகள் ஏதோ ஒரு வடிவில் மனித வாழ்வுக்கு பங்களித்த வண்ணமே இருக்கிறது.
இயற்கையின் அழகையும் அதன் நிலைத்திருப்பையும் ஒரு உணவு வட்டத்தையும் வனவிலங்குகள் தீர்மானிக்கின்றன. ஆகவே உயிரியல் அறிஞர்கள் வன விலங்குகளை உயிர்பெருந்திணிவின் முக்கியமான அங்கமாக குறிப்பிடுகின்றனர்.
இவை அழிவடைந்து வருகின்றமை இன்னும் கூடுதல் வருத்தத்தை எமக்கு தோற்றுவிக்கின்றன. இவை தொடர்பாக இக்கட்டுரையில் நோக்க முடியும்.
வனவிலங்குகள் எனப்படுபவை
மனித இனமானது தோற்றம் பெறுவதற்கு முன்பே காடுகளில் விலங்குகள் தோன்றி விட்டன. இந்த குரங்கு இனங்களில் இருந்து மனிதன் கூரப்டைந்து வந்தான் என்பது அறிவியல்.
அது ஒரு புறம் இருக்க வனவிலங்குகள் எனப்படுபவை யாது? இவை காடுகளில் வாழ கூடிய பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன இவற்றினையே குறிப்பிடுகின்றன.
உதாரணமாக பொதுவாக காடுகளில் உள்ள சிங்கம், புலி, கரடி, மான், மரை, சிறுத்தை, முதளை, பாம்புகள், மீன்கள், பல்லிகள், வரிக்குதிரைகள், முயல்கள் போன்ற விலங்குகளை குறிப்பிடுவதாக அமையும்.
இவற்றில் உற்பத்தியாக்கிகளான தாவரங்களை உண்ணும் தாவர உண்ணிகளும் தாவர உண்ணிகளை உண்கின்ற மாமிச உண்ணிகளும் சேர்ந்து உருவாக்கும் உணவு சங்கிலி மற்றும் உணவு வலை என்பன மூலமாக வனவிலங்குகள் கட்டமைக்கபடுகின்றன.
காடுகளை மையமாக கொண்ட உணவுபரிமாற்றம் இக்காடுகளின் சமநிலையை பேணுகின்றன.
வனவிலங்குகளின் முக்கியத்துவம்
வனவிலங்குகள் காடுகளுக்கு மாத்திரமின்றி மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இவை சூழல் சமநிலையை பேணும் மிக முக்கியமான பங்களிப்பை செய்வதுடன் மனிதனுடைய தேவைகளையும் நிறைவேற்றுகின்றன.
ஒரு அருவியானது தோற்றம் பெறுவதற்கும் புலிகளுக்கும் தொடர்புள்ளது நதிகள் ஊற்றெடுக்கும் மலை உச்சிகளில் நீரை தேக்கி வைக்கும் புற்களை மான்கள் அதிகமாக உண்ணும் என்பதனால்
புலிகள் மானை வேட்டையாடி மான்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதனால் அருவிகள் அதிகம் ஊற்றெடுப்பதாக சொல்லப்படுகிறது.
இன்றைக்கு மனிதர்களுக்கு பலவகையில் உணவாகவும் மருந்தாகவும் வனவிலங்குகள் பயன்படுகின்றன. வனவிலங்குகளின் இறைச்சி தோல், உரோமம், பல், என்பு என்பன மருத்துவ மற்றும் பெறுமதி மிக்க பொருட்களாக உள்ளன.
அதுமாத்திரமின்றி மனிதர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் சூழலிலயல் சுற்றுலாவிற்கு வனவிலங்குகளே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு பலவகையிலும் வனவிலங்குகள் முக்கியமான பங்களிப்பை வளங்குகின்றன.
அழிவடையும் வனவிலங்குகள்
இன்றைய நாட்களில் மனிதன் விரைவான முறையில் இலாபம் ஈட்ட காட்டுவிலங்குகளை வேட்டையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
சில வறுமையான நாடுகள் காடுபடு தொழிலையே பிரதான தொழிலாக கொண்டிருக்கின்றன. இறைச்சிக்காக மான், மரை, முயல், பன்றி, பறவைகள், காட்டுக்கோழிகள், புறாக்கள் போன்றன அதிகளில் அழிக்கப்படுகின்றன.
யானைகள் அவற்றின் பெறுமதியான தந்தங்களுக்காக வேட்டையாடபடுகின்றன. ஆபிரக்க மற்றும் ஆசியாவில் அதிகம் யானைகள் கொல்லப்படுகின்றன.
புலி அதனுடைய பல்லிற்காகவும் தோலிற்காகவும் வேட்டையாடப்படுகிறது. மலைப்பாம்பு, முதளை போன்றன தோலிற்காக வேட்டையாடப்படுகின்றன.
இவ்வாறு வனவிலங்குகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டு வருவதனால் அவற்றின் இனங்கள் பெரும் அழிவின் விளிம்பில் காணப்படுகின்றன.
மேலும் இக்காலத்தில் வலுத்துள்ள காடழிப்பு நடவடிக்கைகளால் வனவிலங்குகள் இன்னும் அதிகமாக அழிவடைவது வேதனைக்குரிய விடயமாகும்.
வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள்
வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டியது மனிதர்களான நம் அனைவரின் கடமையாகும்.
இவ்வுலகம் மனிதர்களுக்காக மட்டும் படைக்கப்பட்டதல்ல பல்லாயிரகணக்கான விலங்குகளுக்கும் இப்பூமி சொந்தமானது. வனவிலங்குகள் அழிவடைவதை தடுக்க கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். வனவிலங்கு பாதுகாப்பினை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மார்ச் 03ம் திகதி உலக வனவிலங்குகள் தினமானது கொண்டாடப்படுகிறது.
தாவரங்களும் விலங்குகளும் வாழும் காடுகளை பாதுகாப்பதனால் எமது மனித வாழ்வை எம்மால் பாதுகாக்க முடியும்.
முடிவுரை
இவ்வுலகத்தில் படைக்கப்பட்ட அனைத்துமே அபூர்வமான இயற்கையின் வரமாகும். இவற்றினை அழிக்க நாம் முற்படுவோமே ஆனால் அது எமக்கெதிராய் மாறும்.
எனவே நாமும் வாழ வேண்டும் பிற உயிர்களும் பூமியில் வாழவேண்டும். என்பதை கருத்தில் கொண்டு அண்மை காலங்களில் நிகழும் காடழித்தல் மற்றும் வனவிலங்குகளை அழித்தல்
இது போன்ற சமூக விரோத செயல்களுக்கெதிராய் ஒருமித்து குரல் கொடுப்பதோடு அவற்றை பாதுகாத்து எமது கடமையை சரியாக செய்வோம்.
You May Also Like: