மன அமைதி கவிதைகள் – Amaithi Kavithai

mana amaithi kavithai in tamil

இந்த பதிவில் “மன அமைதி கவிதைகள் – Amaithi Kavithai” பார்க்கலாம்.

  • மன அமைதி கவிதைகள் – Amaithi Kavithai
  • அமைதி கவிதைகள்
  • மன அமைதி கவிதைகள்
  • Mana Amaithi Kavithai In Tamil

மன அமைதி கவிதைகள்

1.பொறுமை கேவலமாகும் போதும்
அன்பு அசிங்கப்படுத்தும் போதும்
அமைதி காப்பது தூக்கி வீசத்
தெரியாமல் அல்ல உணரும் போது
அவர்களுக்கு வலிக்கக் கூடாது
என்பதற்காக.

2. உனக்கு மனஅமைதி வேண்டுமானால்,
யாருடைய குறையும் காணாதே.

3. அமைதி கூட சிலநேரம்
மற்றவர் பார்வைக்கு
“திமிர்” ஆகவே தெரிகிறது.

4. உலகத்திலேயே மனிதன் அதிகமாக
நேசிக்க கூடியது..
அமைதியும் நிம்மதியுமே.!

5. அமைதியின்மைக்கு தான்
மற்றவர்களுடைய அனுமதி தேவை..
அமைதிக்கு நாம் மட்டும் போதும்.!

6. முட்டாளுக்கு அமைதியாக இரு
என்று சொல்வதை விட..
உயர்ந்த அறிவுரை
வேறு எதுவும் இல்லை.

7. உங்கள் மௌனத்தை
புரிந்து கொள்ள முடியாத ஒருவரால்..
அனேகமாக உங்கள் வார்த்தைகளையும்
புரிந்து கொள்ள முடியாது.

8. உடம்பில் பலம் இருப்பவன் ஆ
வேசப்பட்டால் அடிதடி நடக்கும்..
நாக்கில் பலம் இருப்பவன்
ஆவேசப்பட்டால் கலகம் பிறக்கும்..
மூளையில் பலம் இருப்பவன்
மௌனமாக இருந்தால் விவரம் இருக்கும்.

9. அமைதியும், மகிழ்ச்சியும்
இருக்கும் வரை உங்களுக்கு
என்றுமே விடிவு காலம் தான்.

10. பூரண ஓய்வு கிடைக்கும்
தூக்கத்தைப் போன்றது
ஓர் இடத்தின் அமைதி.

11. அனைவரும் அன்றாடம்
அரைமணி நேரமாவது மௌனமாக
இருக்க பழகுவது அவசியம்.

12. அமைதியான வாழ்வே
நிம்மதியான வாழ்வு
அமைதியான இதயமே
மகிழ்ச்சிக் கடலின் எல்லை.

13. இன்ப வாழ்வுக்கு வழி அமைதி.

அமைதி கவிதைகள்

14. அமைதி ஞானத்தின் வடிவு..
அமைதி அன்பின் வடிவு..
அமைதி தெளிவின் தேக்கம்..!

15. நம் வாழ்க்கையில் நடக்கும்
பல விஷயங்கள்
நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை
புரிந்து கொள்ளுங்கள்.!

16. நம்மால் இந்த வாழ்க்கையில்
எல்லா விஷயங்களையும்
மாற்றிவிட முடியாது என்பதை
புரிந்து கொள்ளுங்கள்.

17. நம் வாழ்க்கையில் ஏற்படும்
ஏற்ற தாழ்வுகளும் துயரங்களும்
நமக்கு அனுபவமாக வந்தவை மட்டுமே
என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

18. இந்த வாழ்க்கையில் நாம் விரும்பியபடி
அனைத்தும் நடப்பதில்லை என்பதை
புரிந்து கொள்ளுங்கள்.

19. காரண காரியமின்றி நம் வாழ்க்கையில்
எதுவும் நடக்காது என்பதை
புரிந்து கொள்ளுங்கள்.

20. நம் வாழ்க்கையில் சந்திக்கும்
ஒவ்வொரு தொந்தரவுகளும்
துன்பங்களும் நம்மை மேம்படுத்தும்
ஒரு நல்ல எதிர்காலத்துக்கு
இட்டுச் செல்லும் என்பதை
புரிந்து கொள்ளுங்கள்.

21. கடந்து போன விஷயங்களை
மறந்து விடுங்கள்..
அவை சென்றுவிட்டவை நம்மால்
மாற்ற இயலாதது.

22. எதிர்காலத்தை நினைத்து
பயம் கொள்ளாதீர்கள்..
அவை இன்னும் வரவில்லை
அவற்றின் மீது நமக்கு
எந்த ஆதிக்கமும் கிடையாது.

23. ஆசைகளை அளவோடு
வைத்துக் கொள்ளுங்கள்..
எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ளுங்கள்..
பேராசை படாதீர்கள்.

24. பயம், கவலை,எரிச்சல், கர்வம்,
பொறாமை, துக்கம், ஏக்கம் போன்ற
தீய குணங்களை விட்டுவிடுங்கள்.

25. கண் முன்னே இருக்கும்
வாழ்க்கையை மட்டும் முழுமையாக
வாழுங்கள்.

26. நீங்கள் கவலைப் படுவதாலோ,
வேதனைப் படுவதாலோ உங்கள்
வாழ்க்கையில் எந்த மாற்றமும்
வந்துவிட போவதில்லை.!

மேலும் பதிவுகளை படியுங்கள்..

அவமானம் Quotes: அவமானம் கவிதை

நற்சிந்தனை துளிகள் – Natsinthanai in Tamil