இந்த பதிவில் “மகிழ்ச்சி தத்துவங்கள் – தத்துவம் (Happiness Quotes in Tamil)” காணலாம்.
- மகிழ்ச்சி தத்துவங்கள் – தத்துவம் (Happiness Quotes in Tamil)
- மகிழ்ச்சி தத்துவங்கள்
- Happiness Quotes in Tamil
- Magilchi Kavithaigal in Tamil
- Magilchi Kavithai in Tamil
மகிழ்ச்சி தத்துவங்கள் – தத்துவம் (Happiness Quotes in Tamil)
நேற்றைய மகிழ்ச்சியை இன்று
கொண்டாடாத மனம்.. அதற்கு
முந்தைய கவலைக்காக
இன்றும் வருந்துகின்றது..!
குழந்தைகளை நல்லவர்களாக
வளர்க்க சிறந்த வழி.. அவர்களை
மகிழ்ச்சியாக இருக்க விடுங்கள்..!
விட்டுக் கொடுங்கள்..
அல்லது விட்டு விடுங்கள்
மகிழ்ச்சி நிலைக்கும்..!
தேவையற்ற எண்ணங்களை
சிந்தித்து கவலை அடைவது
சாத்தியம் என்றால்.. தேவையான
எண்ணங்களை சிந்தித்து மகிழ்ச்சி
அடைவதும் சாத்தியமே..!
மகிழ்ச்சி என்பது நல்ல
ஆரோக்கியமும்.. குறைந்த
ஞாபக சக்தியும் தான்..!
மகிழ்ச்சியின் எல்லை
பெரும்பாலும் துன்பத்தின்
வாசலாக அமைகிறது..!
நடப்பதெல்லாம் நன்மைக்கே
என நினைத்து வாழ பழகி விட்டால்..
மகிழ்ச்சியை நாம் தேடிச் செல்ல
வேண்டியதில்லை மகிழ்ச்சி
நம்மை தேடி வரும்..!
உங்களின் உச்சகட்ட பயத்தில் தான்..
உங்களின் உச்சகட்ட மகிழ்ச்சி
ஒளிந்து கொண்டு இருக்கிறது..!
ஒரு எண்ணத்தை சிந்தித்தவுடன்
கவலை வருவது சாத்தியம் என்றால்
வேறு ஒரு எண்ணத்தை சிந்தித்து
மகிழ்ச்சி அடைவதும் சாத்தியமே..!
நீங்கள் இன்னொருவரை மனதார
பாராட்டும் போது உங்கள் இருவரின்
மனமும் மனதார மகிழ்ச்சி அடையும்..!
நீ யாராலும் தேடப்படவில்லை..
உன்னை யாரும் தேடவில்லை
என்றால் சந்தோஷம் கொள்..
ஏனென்றால் யாரும் உன்னை
அவர்கள் சுயநலத்திற்காக
இன்னும் பயன்படுத்திக்கொள்ளவில்லை..!
சோகம்.., கடினம்.., கவலை..,
துக்கம் மிகுந்த நேரங்களில்
அதை சற்றும் அனுபவிக்க
முடியா வண்ணம் இறைவன் தரும்
அந்த சந்தோஷம் மிகவும்
கொடுமையானது..!
சந்தோஷத்தை தேடி அலைவதை
நிறுத்திய போது தான் தெரிந்தது..
எதையும் தேடி அலையாமல்
இருப்பதே சந்தோஷம் தான் என்று..!
அடுத்தவர்களிடம் இருப்பவை
எல்லாம் நம்மிடம் இருக்கிறதா
என்று பார்க்கிறோமே தவிர..
நம்மிடம் இருப்பவை எத்தனை
பேரிடம் இருக்கிறது என்று பார்க்க
தவறி விடுகிறோம்.. நம் சந்தோஷம்
அழியத் தொடங்கும் இடம்
அது தான்..!
வாழ்க்கையில் வசதி சந்தோஷம்
எல்லாம் ஆடம்பரத்தில் இல்லை..
நாம் அமைத்துக் கொள்வதில்
தான் இருக்கிறது..!
வாழ்க்கையில் சந்தோஷம்
வேண்டுமென்றால் இரண்டு பேரைக்
கண்டுக்கவே கூடாது.. ஒன்று
நமக்கு பிடிக்காதவங்க..! மற்றொன்று
நம்மைப் பிடிக்காதவங்க..!
சந்தோஷம் இருந்தால் நிமிடம் கூட
வீணாகாது.. சந்தோஷம் இல்லாவிட்டால்
நிமிடம் என்ன..? வாழ்நாள்
முழுவதும் வீணாகிவிடும்..!
எதுவும் இல்லாதவனுக்கு எது
கிடைத்தாலும் அது சந்தோஷம்..
எல்லாம் இருப்பவனுக்கு
எது கிடைத்தாலும்
அது அலட்சியம்..!
எனக்கு கிடைக்காத ஒன்றை
இன்று வரை தேடிக் கொண்டு தான்
இருக்கின்றேன்.. சந்தோஷம்..!
உயிர் இருக்கும் வரை சந்தோஷமாக
வாழ வேண்டும் என்பதை விட..
நிம்மதியாக வாழ வேண்டும்
என்பதே முக்கியம்..!
இது போன்ற பதிவுகளை மேலும் படியுங்கள்…