இந்தபதிவில் “பேரிடர் மேலாண்மை கட்டுரை” பதிவை காணலாம்.
இடர்களை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும். பேரிடர் என்பது இயற்கை சார்ந்தோ அல்லது இயற்கை சரமலோ ஏற்படக்கூடியது.
பேரிடர் மேலாண்மை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இயற்கையும் பேரிடரும்
- பேரிடரால் ஏற்படும் பேரழிவுகள்
- பேரிடரை எதிர்கொள்ளல்
- தேசிய பேரிடர் மேலாண்மை
- முடிவுரை
முன்னுரை
மனிதன் இயற்கைக்கு மாறாக நடந்து கொள்ளும் போதெல்லாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான அபாயங்களில் ஒன்றே பேரிடர் ஆகும். நாகரீக உலகில் இயற்கையிடமிருந்து தனித்து வாழ ஆரம்பித்து விட்டோம்.
இயற்கையை மறந்து செயற்கை உலகினை உருவாக்க விரும்புகின்றோம். மனிதத் தேவைகளுக்காக இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன
இறுதியில் இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டு உயிர்களுக்கும்⸴ உடமைகளுக்கும் சேதத்தையும்⸴ துயரத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன. இவற்றினைச் சிறப்பாக கையாள பேரிடர் மேலாண்மை அவசியமாகும். இக்கட்டுரையில் பேரிடர் மேலாண்மை பற்றி காண்போம்.
இயற்கையும் பேரிடரும்
இயற்கையையே மனித குலத்தை வாழ வைக்கின்றது. அதனால் தான் நம் முன்னோர்கள் இயற்கையைத் தெய்வமாக மதித்து வணங்கினர். ஆனால் இன்று இயற்கைக்கு புறம்பாக நடந்து கொள்கின்றோம் இதனால் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இயற்கையின் சீற்றம் காரணமாக சுனாமி⸴ சூறாவளி⸴ வெள்ளப்பெருக்கு⸴ நிலநடுக்கம்⸴ மண்சரிவு⸴ மண்ணரிப்பு போன்ற பல பேரிடர்கள் ஏற்ப்படுகின்றன.
இவற்றில் ஏற்படும் சடுதியான மாற்றங்கள் புவியியல் பேரிடர்களாக உணரப்படுகின்றன. இயற்கையுடன் மனிதன் இணைந்து வாழப் பழகும் போது ஓரளவேனும் பேரிடரைத் தவிர்க்க முடியும்.
பேரிடரால் ஏற்படும் பேரழிவுகள்
பேரிடரால் பல பேரழிவுகள் ஏற்படுகின்றன. இவை பல உயிர்களைக் காவு கொள்வதாகவும்⸴ சொத்துக்களை அழிப்பதாகவும் அமைகின்றன. இவை மனித வாழ்வில் தவிர்க்க முடியாத துயரங்களை ஏற்படுத்துகின்றன.
இதனால் மனிதனின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைகின்றன. பெரும் பஞ்சத்தினையும் பட்டினியையும் ஏற்படுத்துகின்றன. பொருளாதாரச் சீர்கேடுகள்⸴ சுற்றுச்சூழல் சீர்கேடுகள் சுகாதாரச் சீர்கேடுகள் போன்றனவும் ஏற்படுகின்றன.
சில சமயங்களில் சிறப்பான பேரிடர் மேலாண்மை கொண்ட நாடுகள் கூடப் பேரழிவினைச் சந்திக்கின்றன.
பேரிடரை எதிர்கொள்ளல்
இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். மற்றும் பேரிடரை எதிர்கொள்ள மனித வளங்களை ஆயத்தப்படுத்துதல் அவசியமானதாகும். தகவல் தொடர்புகளை மேம்படுத்த வேண்டும்.
பேரிடர்க் காலங்களில் உணவுப் பொருட்கள்⸴ முதல் உதவிப் பொருட்கள்⸴ குடிநீர், ஆடைகள் முதலிய அத்தியாவசியமான பொருட்களைச் சேர்த்து வைத்தல் வேண்டும்.
பேரிடரின் தன்மை⸴ தீவிரம்⸴ தாக்கம்⸴ இழப்புகள் போன்றவற்றை அறிதல் அவசியம்.
தேசிய பேரிடர் மேலாண்மை
தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டமானது 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியால் எண்ணற்ற உயிர்ப் பலிகளையும் பொருட் சேதங்களையும் கணக்கில் கொண்டு இந்தியாவில் பேரிடர் காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 2005இல் சட்டங்கள் இயற்றப்பட்டது.
இச்சட்டம் இந்தியா முழுவதிற்கும் ஏற்புடையது. இதன் மூலம் பேரிடர்க் காலங்களில் அனர்த்தங்களை முன்கூட்டியே எதிர்வுகூறல்⸴ தயார் நிலையில் இருத்தல்⸴ பாதிப்புகளிலிருந்து மீண்டு வருதல் போன்றனவற்றை மேற்கொள்ள முடிகின்றது.
முடிவுரை
இயற்கையை மனிதன் புறக்கணிக்கும் போது இயற்கை மனிதனுக்கு பேராபத்தை விளைவிக்கும். மனித வாழ்க்கை என்பது இயற்கையுடன் இரண்டறக் கலந்தது. எனவே முடிந்தவரை இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும்.
இதனைக் கவனத்திற் கொள்ளாமல் விழிப்புணர்வற்ற நிலையில் மனிதன் செயற்படுவானாயின் பேரிடர்களையும் அதனால் ஏற்படும் அழிவுகளையும் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
You May Also Like: