என்றும் அழிக்க முடியாத தலைவனாக பலரது இதயத்தில் வாழும் இந்தியாவின் இரும்பு மனிதன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள்.
- நேதாஜி பொன்மொழிகள்
- Nethaji Subash Chandra Bose Quotes in Tamil
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள்
1.தோழர்களே உங்களது ரத்தத்தை தாருங்கள்.. நான் உங்களுக்கு விடுதலையை தருகிறேன்.
2. சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதில்லை எடுக்கப்படுவது.
3. அதிகாரத்துடன் இணங்கி போவதும் அடிமையாக இருப்பதும் மனித மனதின் சாபக்கேடு..!
4. எத்தனை தியாகங்கள் செய்வதாக இருந்தாலும் அதர்மத்தை எதிர்த்து போர் புரிவது ஒன்றுதான் ஒவ்வொரு மனிதனுடைய தலையாய கடைமையாக இருக்க வேண்டும்.
5. தனது பதினெட்டு வயதில் கையில் வாளேந்தி போர்க்களத்தில் புலியெனப் பாய்ந்த வீரப்பெண்மணி ஜான்சி ராணி அவதரித்த பூமி இது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
6. இரவு நம்மை சூழ்ந்திடும் பொழுதெல்லாம் காலைப் பகலவன் வெளிச்சம் நம்மை நெருங்கி விட்டது என்பதே அர்த்தம்.
7. புரட்சி இயக்கங்கள் அழிக்கப்பட்டாலும் ஆனால் அதன் பாடங்கள் என்றும் அழிவதில்லை.!
8. ஒரு மனிதன் தன் வாழ்நாள் லட்சியத்திற்காக வாழ்ந்து உயிரை விட்டான் என்பதை விட வேறு என்ன பெருமை வேண்டும்.
9. கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரிமையானவர்கள்.
10. இறைவன் நமக்கு செல்வதை கொடுக்கவில்லை என்று கவலைப்படாதே.. உயிர் எனும் பெரிய செல்வதை கொடுத்திருக்கிறார் அதனை கொண்டு எதையும் சாதிக்கலாம்.
11. சோதனைகளும் தியாகங்களும் விளைவிக்காமல் எத்தகைய குறிக்கோளும் உலகத்தில் நிலைத்தது கிடையாது.
12. இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும்.. அதற்கு ஒரே வழி யுத்தம் அதை தவிர வேறு வழியே இல்லை.
13. நாட்டின் உண்மையான சுதந்திரம் என்பது கெஞ்சியும்.. கேட்டும்.. பேரம் பேசியும் பெறுவதல்ல. சுதந்திரம் என்பது போராடி.. இரத்தம் சிந்தி.. உயிர் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர..
14. மாற்றம் என்பது வார்த்தைகளால் விவாதிப்பதாலும் பேசிக் கொண்டிருப்பதாலும் ஏற்பட்டதாக எந்த சரித்திரமும் இல்லை.
15. எந்த செயலும் செய்யாமல் பயனற்று இருக்கும் மனிதர்கள் உயிரற்றவர்கள்.. அவர்கள் வெறும் புழு பூச்சிகள் போன்று இந்த உலகத்தில் இருப்பார்கள் சரித்திரத்தில் இடம் பெறமாட்டார்கள்.
16. சாதிக்க முடியாததை கூட சாதிக்க முடியும் தன்னம்பிக்கை எனும் மனோ சக்தியால்.!
17. தலைவனை தேட முடியாமல் போனாலும் போகட்டும் அதற்காக நீங்கள் உங்கள் செயல்களை நிறுத்தாதீர்கள் காலப்போக்கில் நீங்களே தலைவனாக வந்துவிட முடியும்.
18. அடிமைத்தனம் என்பது வன்முறையை காட்டிலும் மிக மோசமானது.
19. உண்மையும் நேர்மையும் கொண்டவராக இருந்தால் எதற்கும் அஞ்சாநெஞ்சம் கொண்டவராக இருக்கலாம்.
20. தேசபக்தி என்ற பெயரில் சுயமான சிந்தனை இல்லாமல் ஒருவருக்கு பின்னால் ஆதரவாக நின்று செய்வதெல்லாம் சரி என்று வாதிடுவது தான் தேசபக்தி என்றால்.. அந்த தேசபக்தி என்னுடைய செருப்புக்கு சமமானது.
மேலும் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..