இந்த பதிவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை பற்றி பார்க்கலாம்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது என்பது மிகவும் அவசியமான மற்றும் ஒவ்வொரு உயிர்களதும் தலையாய கடமையாகும்
இவற்றை பாதுகாப்பது தான் நம்மை வாழவைக்கும் சுற்றுச்சூழலக்கு நாம் செய்யும் கைமாறு.
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு
- Sutru Sulal Pathukappu Katturai In Tamil
மழைநீர் சேகரிப்பு கட்டுரை
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சூழலும் பூமியின் இயக்கமும்
- சூழலின் முக்கியத்துவம்
- சூழல் மாசடைதலும் அதனால் உருவாகும் பிர்ச்சனைகள்
- சூழலை பாதுகாக்கும் ஏற்பாடுகள்
- முடிவுரை
முன்னுரை
மனிதனுடைய வாழ்க்கை அவன் வாழ்கின்ற சூழலை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. நல்ல சூழல் ஒரு மனிதனை மனிதனாக்குகிறது அதே சமயம் மாசடைந்த சூழல் மனிதனை நோயாளியாகவும் மன அழுத்தம் மிக்கவனாகவும் மாற்றுகிறது.
மனிதன் தான் வாழும் சூழலை பாதுகாத்து வாழும் போது அச்சூழல் அழகாவதோடு அவனுடைய வாழ்க்கையும் அழகாக இருக்கும். இயற்கையின் படைப்பு அவ்வளவு அழகானது. இவற்றை காப்பது எம் தலையாய கடனாகும்.
இக்கட்டுரையில் சுற்று சூழல் பாதுகாப்பு பற்றி பார்க்கலாம்.
சூழலும் பூமியின் இயக்கமும்
நாம் வாழும் பூமி இற்றைக்கு 400 மில்லியன் வருடங்களுக்கு முன் உருவாகியதாக சொல்லப்படுகிறது. பால்வெளியில் ஏற்பட்ட பெரு வெடிப்பினால் பூமி போன்ற பல கோள்கள் உருவாகியதாக சொல்லப்படுகிறது.
நீர், காற்று, ஆகாயம், நிலம், தீ என்ற பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டது இப் பூமியாகும். இங்கு காடுகள், பாலைவனங்கள், சதுப்புநிலங்கள், மலைகள், பாலைவனங்கள், சமுத்திரங்கள், பயிர்நிலங்கள் என பலவகையான சூழல்கள் காணப்படுகின்றன.
தரைச்சூழல் மனிதர்கள் வாழவும் தாவரங்கள் வளரவும் ஆதாரமாய் உள்ளது. காட்டுச்சூழல் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் வாழ்விடமாய் உள்ளது.
காடுகள் சுவாசிக்க ஒட்சிசனையும் வளிமண்ணடலத்திற்கு நீராவியை தந்து மழையையும் தருகிறது. சமுத்திர சூழல் பலகோடி உயிரினங்களின் வாழ்விடம் இப்பூமியின் வெப்பத்தை குறைக்கும்.
இச்சூழல் சரியாக இயங்குவதனால் தான் நீரியல் வட்டம், உணவு வட்டம், காபன் வட்டம் என பல சூழல் சமநிலை செயற்பாடுகள் சீராக இயங்கி கொண்டிருக்கின்றன.
பூமியில் இடம்பெறும் ஒவ்வொரு இயக்கமும் இவ் இயற்கை சூழலை சார்ந்தே இடம்பெறும்.
சூழலின் முக்கியத்துவம்
சூரியன் மிகப்பெரிய சக்தி முதல் இதன் மோசமான வெப்பகதிர்களில் இருந்து வளிமண்டலம் எம்மை பாதுகாக்கிறது. இங்குள்ள ஓசோன் படை தீயகதிர்வீச்சுக்களில் இருந்து பூமியை பாதுகாக்கிறது.
அதனையும் தாண்டி வரும் கடும் வெப்பத்தை சமுத்திரங்கள் தடுக்கின்றன. காற்றுக்களை தரையை நோக்கி வீச செய்வதனால் பூமி பாலைவனமாகவும் பனிக்காடாகவோ மாறாமல் சமுத்திரங்கள் பாதுகாக்கின்றன.
நாம் உண்ண உணவையும் உடுத்த உடையும் இருக்க வீடும் சுவாசிக்க காற்றும் இச் சூழலே தருகின்றது. மரங்கள் இல்லாத பாலைவனங்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தால் இயற்கை சூழலின் முக்கியத்துவம் புலனாகும்.
சூழல் ஏன் முக்கியமானது என்று கேட்டால் ஒரு போர்வீரனை அவனது கவசம் எவ்வாறு காக்கின்றதோ அது போல எம்மையும் இவ்வுலகத்தையும் இயற்கை சூழல் பாதுகாக்கிறது.
மனித வாழ்க்கை நிலைத்திருக்க வேண்டுமாயின் சூழல் மிகவும் அவசியமானதாகும்.
சூழல் மாசடைதலும் அதனால் உருவாகும் பிரச்சனைகளும்
இன்றைக்கு மனிதர்கள் எல்லா துறைகளிலும் அசுர வளர்ச்சி கண்டுள்ளனர். இந்த நாகரகீ வளர்ச்சி சூழலை மாசடைய செய்து வருவதனால் ஏற்படும் அபாயங்களை யாரும் உணர்வதாய் இல்லை.
அதிகரித்து வரும் நகராக்கம் காரணமாக இயற்கை காடுகள் அழிக்கப்படுகின்றன. அதிகரித்து வரும் சனத்தொகையால் வாழ்விடங்களை அமைப்பதற்காக இயற்கை சூழல் அழிக்கப்பட்டு வருகிறது.
வாகனங்களின் அதிகரிப்பால் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் அதிகமாகி வளிமாசடைந்து வருகிறது. முறையற்ற விவசாய நடவடிக்கைகளால் மண் மாசடைகிறது. பிளாஸ்ரிக் போன்ற நஞ்சு உலோகங்கள் மண்ணை மாசுபடுத்துகின்றன.
காடுகளையும் கண்டல் தாவரங்களையும் அழிப்பதனால் நீர் உவராகிறது. அசேதன கழிவுகளும் குப்பைகளும் நீரை மாசடைய செய்கின்றன.
இன்றைக்கு இயற்கை சூழல் மிக மோசமாக மாசடைவதனால் அது மனிதர்களது வாழ்வை பாதிக்க துவங்கி விட்டது. உணவு நஞ்சாகி விட்டது, காற்று மாசடைந்து விட்டது.
இன்றைக்கு பாலைவனமயமாதல் பூகோளவெப்பமயமாதல் ஓசோன் சிதைவடைதல் காலநிலைமாற்றம் போன்ற நிலமைகள் ஏற்பட முக்கிய காரணம் சூழல் மாசடைதலே ஆகும்.
சூழலை பாதுகாக்கும் ஏற்பாடுகள்
இன்றைக்கு உலகநாடுகள் இயற்கை சூழல் அழிவதனால் உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் தீவிரத்தை உணரதுவங்கியுள்ளன.
இயற்கையை மனிதன் பாதுகாக்காமல் போனால் மனித குலமே அழியும் நிலையானது உருவாகி விடும் என ஜக்கிய நாடுகளினுடைய சூழல் பாதுகாப்பு நிதியம் தெரிவிக்கிறது.
சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உச்சி மாநாடுகள் நடாத்தப்பட்டு சூழல்சார் பிரகடனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்றைக்கு பல உயிரின சூழல் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இது எமக்கு பல பாதகமான நிலைகளை உருவாக்கி விடும்.
இவ்வாறுஅபாய நிலையில் உள்ள பூமியை காக்க விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூன் 5 சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
முடிவுரை
நாளுக்கு நாள் வெப்பம் உயர்கிறது. காலநிலை தன்மைகள் மாறிவருகிறது. இயற்கையின் சீற்றம் அனர்த்தங்களாக வெளிப்படுகின்றது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு வருகிறது பூமியில் வாழ்வதே பெரும் சவாலாக மாறி வருகிறது.
எம்முடைய முட்டாள் தனமான சூழலுக்கான செயற்பாடுகள் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பது போல் சூழலை மாசடைய செய்ததன் தாக்கத்தை நாம் ஒவ்வொருவரும் உணர்கிறோம்.
இந்த நிலமை மாறவேண்டுமாயின் மனிதர்கள் மாறவேண்டும் சூழலை பாதுகாக்க வேண்டும் .
You May Also Like :
விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை
உடல் நலம் காப்போம் கட்டுரை