இந்த பதிவில் வாழ்க்கைக்கு தேவையான “ஒரு வரி பொன்மொழிகள்” தொகுப்பை பார்க்கலாம்.
- ஒரு வரி பொன்மொழிகள்
- Oru Vari Ponmozhigal
ஒரு வரி பொன்மொழிகள்
1.உன்னை மட்டும் அறிவாளி என்று எண்ணாதே மற்றவர் கருத்துக்கும் மதிப்பு அளிக்க பழகிக் கொள்.
2. ஒழுக்கம் மகிழ்ச்சியின் திறவுகோல். இளமை முதலே மனிதன் ஒழுக்கத்தைப் பேணிக் காக்க வேண்டும்.
3. உன் கண்களுக்கு அற்பமானது என்று எதுவும் இருக்க வேண்டாம்.
4. அடுத்தவரை நம்பி வாழும் வரை துயரம் உன்னை விட்டு மறையாது.
5. மற்றவர்களின் புகழ்ச்சிக்காக நற்குணத்தைப் பின்பற்ற வேண்டாம்.
6. அஞ்சாமையில் சிங்கத்தைப் போல இரு சகிப்புத்தன்மையில் பசுவைப் போல இரு.
7. உத்தமமான நல்ல செயல்களைச் செய்ய நினைத்தால் இன்றே இப்போதே தொடங்குங்கள்.
8. முதலில் நீ யார் என்று உணர்ந்து கொள் பின்னர் உன் செயலை தொடங்கு.
9. செழிப்பு ஒரு சிறந்த ஆசான்; வறுமை அதைவிட சிறந்த ஆசான்.
10. நம்முடைய ஆற்றல் அதற்கு எதிராகத் தோன்றும் தடைகளின் அளவைப் பொறுத்தது.
11. அழுவதற்கும் சிரிப்பதற்கும் தெரிந்த ஒரே விலங்கு மனிதன் மட்டுமே.
12. அறிவைவிட ஆர்வமே அதிக செயல்களைச் செய்ய வல்லது.
13. பறவைக்கு ஒரு கூடு, சிலந்திக்கு ஒரு வலை, மனிதனுக்கு நட்பு.
14. நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகளை முறையாக பெற்றிருக்க வேண்டும்.
15. இன்று நாம் செய்யக்கூடிய நன்மைதான் நாளை நமக்கு நன்மை தரக்கூடியதாகும்.
16. முரண்பாடுகள் இல்லாமல் முன்னேற்றம் கிடையாது.
17. நம்பிக்கை பயத்தைப் போக்கும் ஒரு சாதனம்.
18. பிறகு எப்படி இருக்கப்போகிறீர்களோ, அதுபோல இருப்பதற்கு இப்பொழுதே தொடங்கி விடுங்கள்.
19. அவநம்பிக்கை பலவீனத்திற்கு வழிவகுக்கிறது; நம்பிக்கை ஆற்றலுக்கு வழிவகுக்கிறது.
20. நான் சுறுசுறுப்பானவன் என்பதை எப்போதும் நினைக்க வேண்டும். மனம் உங்களை வேலை வாங்கிவிடும்.
21. நடந்தவற்றை ஏற்றுக்கொள்வதே துரதிருஷ்டத்தின் விளைவுகளை எதிர்கொள்வதற்கான முதல் படி.
Oru Vari Ponmozhigal
22. உங்கள் நோக்கம் நிலவாக இருக்கட்டும். ஒருவேளை அதில் தோற்றால், நீங்கள் ஒரு நட்சத்திரத்தை வெல்லக்கூடும்.
23. நேரம் ஓடிக்கொண்டேயிருக்கறது. அதை யாரும் திரும்பியழைக்க முடியாது.
24. நேரம் எல்லாவற்றையும் தாங்கியிருக்கின்றது. எமது மனதையும் கூட!
25. சிறந்த உழைப்பாளியே திறமைசாலி.
26. தம்மால் வெல்ல முடியும் என்று நம்புகிறவர்கள்தாம் வெற்றிகளைக் குவிப்பார்கள்.
27. காதல் அனைத்தையும் ஜெயிக்கும் ஆயுதம். அதற்கு நாம் அடிபணிய வேண்டும்.
28. முடியும் என்போர்க்கு எதுவும் முடியும்.
29. அன்பு அரவணைப்பதற்காக மட்டுமல்ல. தண்டிக்கவும் அதையே பயன்படுத்த வேண்டும்.
30. தீய எண்ணங்களை நல்ல எண்ணங்களாக மாற்றுங்கள். தீய சொற்களை நல்ல சொற்களாக மாற்றுங்கள்.
31. செல்வத்தால் பெருமைப்பட்டுக் கொள்ளாதே. புகழ்ச்சியைக் கண்டு மயங்காதே.
32. பெருந்தன்மை இல்லாத மனிதன் இருட்டறையில் உழலும் பூச்சிக்குச் சமமானவன்.
33. ஆயிரம் நூல்களைப் படிப்பதை விட ஒரு நல்ல நூலின் கருத்தை வாழ்வில் பின்பற்றுவது மேலானது.
34. ஒழுக்கமே உயர்வுக்கான ஒரே வழி. உலகெங்கும் ஒழுக்கம் நிலைத்து விட்டால் எல்லாம் நன்மையாக நடக்கும்.
35. ஒழுக்கமற்ற அறிவாளியை விட, ஒழுக்கமுள்ள கல்வியறிவு இல்லாத பாமரனே உயர்ந்தவன்.
36. நன்றி மறந்த கயவரையும் மன்னிப்பவரே சான்றோர்கள்.
37. கோபமே மனிதனுக்கு கொடிய எதிரி. அன்பே அவனது உற்ற தோழன்.
38. பிறரிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் பார்க்கப் பழகுவது உங்களுக்கும் அவருக்கும் நன்மை தரும்.
39. நற்பண்பு இல்லாத மனிதன் உப்பில்லாத பண்டத்திற்குச் சமம்.
40. ஆயிரம் அறிவுரைகளை சொல்வதை விட, ஒரு செயலைச் செய்வது மேலாகும்.
41. மனதில் எழும் ஆசை நியாயமானதா என்று யோசித்து செயல்படுங்கள்.