வீட்டுத்தோட்டத்தின் பயன்கள் கட்டுரை

Veetu Thottam Katturai In Tamil

இந்த பதிவில் “வீட்டுத்தோட்டத்தின் பயன்கள் கட்டுரை” பற்றி காணலாம்.

வீட்டு தோட்டங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.

வீட்டுத்தோட்டத்தின் பயன்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சிறந்த பொழுதுபோக்கு
  3. ஆரோக்கியமான உணவுகள்
  4. வருமானம்
  5. இன்றைய போக்கு
  6. முடிவுரை

முன்னுரை

இன்றைய உலகமானது நாளுக்கு நாள் பலவழிகளிலும் உணவு தட்டுப்பாடுகளை எதிர்கொண்டுவருகின்றது. இன்று கொரோனா என்ற கொடிய நோயின் பாதிப்புக்கள் எதிர்காலத்தில் பாரிய உணவு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

அந்தவகையில் சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப நாம் உணவு உற்ப்த்தியை அதிகரிக்க வேண்டிய தேவையானது உள்ளது.

அதற்கு வீட்டுதோட்ட செய்கை பெரிதும் பங்களிப்பதாக அமையும் என நம்பப்படுகின்றது. இந்த கட்டுரையில் வீட்டுத்தோட்டத்தின் பயன்கள்பற்றி நோக்கலாம்.

சிறந்த பொழுது போக்கு

நாம் வாழ்கின்ற சூழலில் எமக்கு கிடைக்கின்ற ஓய்வு நேரங்களை நாம் வீணடிக்காது பயனுள்ள வகையில் பயன்படுத்தி கொள்ளுதல் வேண்டும். அதற்கு ஒரு சிறந்த வழியாக வீட்டுதோட்டம் செய்தல் காணப்படுகின்றது.

எமது வீட்டை அண்டிய சிறிய நிலப்பரப்பில் எமக்கு தேவையான பயனுள்ள மரக்கறிகள், இலைவகைகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றை நட்டு வளர்த்து அவற்றை பராமரிப்பது ஒரு மனநிறைவான சிறந்த பொழுதுபோக்காக அமைகின்றது.

உலகமெங்கும் அதிகளவான மக்கள் பொழுது போக்கிற்காக வீட்டுதோட்டம் செய்வதனை விரும்புகின்றனர்.

ஆரோக்கியமான உணவுகள்

தற்காலங்களில் சந்தைகளில் விற்கப்படுகின்ற மரக்கறிகள் பழங்கள் போன்ற உணவு பொருட்கள் அதிகம் அசேதன உரங்கள் மற்றும் கிருமிநாசினிகள் விசிறப்பட்டவையாக இருப்பதனால் இதனை உண்கின்ற நமக்கு பல நோய்கள் ஏற்படும் சந்தர்ப்பம் அதிகளவில் காணப்படுகின்றது.

இவற்றை தவிர்க்க வேண்டுமானால் நாங்கள் இயற்கையான முறையில் சேதன முறையிலான பச்சை வீடுகள் அமைத்து அவற்றின் வாயிலாக நஞ்சற்ற தூய்மையான உணவு பொருட்களை நாமே உற்பத்தி செய்து பெற்று கொள்ள முடியும்.

வருமானம்

வீட்டுதோட்டம் செய்வதன் மூலமாக எமது அன்றாட தேவைகளுக்குரிய மரஙக்கறிகளை எமது தோட்டத்தில் இருந்தே பெற்று கொள்வதன் மூலமாக கணிசமான தொகை பணமானது சேமிக்கப்படுகின்றது.

அத்துடன் எமது தேவைகளுக்கு மிஞ்சியவற்றை விற்பனை செய்வதன் மூலமாக சிறியதொகை வருமானத்தையும் ஈட்ட முடிகின்றது.

கத்தரி, வெண்டி, பாகல், கீரைகள் போன்ற மரக்கறிகள் மட்டுமன்றி அலங்கார மலர் வளர்ப்பு, இஞ்சி, மஞ்சள் போன்ற பெறுமதியான பொருட்களை கூட வீட்டுதோட்டங்கள் வாயிலாக உற்பத்தி செய்ய முடியும். இதனை தமது வாழ்வாதாரமாக பல கிராமத்து மக்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய போக்கு

தற்காலங்களில் அதிகளவான மக்கள் விவசாயம் தவிர்ந்த இதர வேலைகளில் அதிகம் ஈடுபடுவதனால் வீட்டுதோட்டங்களில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை இதனால் அவர்கள் மரக்கறிகள் வாங்க அதிகளவான பணத்தை வீணாக செலவழித்து நோய்களையும் வாங்கி கொள்கின்றனர்.

இருப்பினும் சில மக்கள் நகரங்களில் தொடர்மாடிகளில் வாழ்கின்ற போதும் அங்கே ஒரு சிறிய இடத்தில் கூட சாடிகளில் வீட்டுதோட்டம் செய்து வருவதனை அவதானிக்கலாம். இவ்வாறு வீட்டு தோட்டங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.

முடிவுரை

இவ்வாறு பல்வேறு வகையான பயன்களை வீட்டுதோட்டங்கள் செய்வதன் வாயிலாக பெற்று கொள்கின்றனர். இது மட்டுமன்றி மனஅழுத்தங்கள் நிறைந்த வாழ்க்கையில் வீட்டுதோட்டம் செய்கின்ற பொழுது போக்கானது மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது.

இது ஓய்வு நேரங்களை பயனுள்ள வகையில் போக்க உறுதுணையாக இருக்கின்றது. எமது உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை நாம் மேம்படுத்தி கொள்ள வீட்டுதோட்டம் செய்கின்ற பழக்கத்தை தொடர்வது மிகவும் பலனுள்ளதாக அமையும்.

You May Also Like :
மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை
மரம் வளர்ப்போம் கட்டுரை