மருத்துவப் பணி கட்டுரை

Maruthuva Pani Katturai In Tamil

இந்த பதிவில் மருத்துவப் பணி கட்டுரை பதிவை காணலாம்.

உயிர் காக்கும் மருத்துவ பணியை செய்பவர்களை மக்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் பார்க்கிறார்கள்.

மக்களின் உயிர் காக்கும் பணியை செய்பவர்கள் இறைவனுக்கு நிகரானவர்கள்.

  • மருத்துவப் பணி கட்டுரை
  • Maruthuva Pani Katturai In Tamil
அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை

மருத்துவப் பணி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மருத்துவ துறையின் ஆரம்பம்
  3. மருத்துவ துறையின் வளர்ச்சி
  4. முடிவுரை

முன்னுரை

மனித வாழ்க்கையில் மனிதனுடைய உடலானது இறக்கும் வரையில் பல நோய்கள் உபாதைகளுக்கு ஆளாவதனால் அவற்றில் இருந்து மனிதர்களை காக்கும் உயிர்காக்கும் தொழிலே மருத்துவம் ஆகும்.

ஆரம்ப காலங்களில் தொழில்நுட்பம் வளரவில்லை மனிதர்கள் நோய்களுக்கு மருந்தாக இயற்கை மூலிகைகளை கைக்கொண்டனர். இதனால் சித்த வைத்தியம் ஆரம்ப காலங்களில் இருந்து வந்தது.

பின்பு ஜரோப்பாவில் இருந்து ஆங்கில மருத்துவத்துறை சிகிச்சைகள் கொண்டுவரப்பட்டன.

இவற்றின் மூலம் மருத்துவ துறையில் பிரமிக்க தக்க வகையான கண்டுபிடிப்புக்கள் உருவாகி இன்றைக்கு மருத்துவ துறை உச்சம் தொட்டிருக்கிறது.

இக்கட்டுரையில் மருத்துவ துறையின் ஆரம்பம், மருத்துவ துறையின் வளர்ச்சி மற்றும் மருத்துவ துறையின் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.

மருத்துவ துறையின் ஆரம்பம்

ஆரம்ப காலங்கில் மனிதன் காடுகளில் வாழ்ந்து வந்தான். இதனால் உணவில் மாத்திரமே கவனம் செலுத்தினான். அவனுக்க நோய்கள் உருவாகினால் கடவுளின் சீற்றம் என எண்ணினான்.

அதிகளவானவர்கள் சாதாரண நோய்களால் இறந்து போனார்கள். தசாப்தங்களுக்கு ஒரு முறை வரும் தொற்று நோய்கள் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காவுகொண்டது. இவற்றை தடுத்து நிறுத்தவேண்டிய தேவை மனிதர்களுக்கு இருந்தது.

1600 களில் வில்லியம் கார்வே என்பவர் குருதி சுற்றோட்டத்தினை கண்டுபிடித்தார். இதனை தொடர்ந்து மருத்துவ துறையில் பல கண்டுபிடிப்புக்கள் வரத்துவங்கின. 1870 இல் “லூயி பாஸ்டர்” “Anti Bactirea” இனை கண்டுபிடித்தார்.

1928 இல் அலெக்ஸாண்டர் பிளெமிங் பென்சிலீனை கண்டுபிடித்தார். இவ்வாறு நவீன மருத்துவ துறையில் அறுவைசிகிச்சை, தடுப்பூசிகள், மருந்து மாத்திரைகள் என பல கண்டுபிடிப்புக்கள் வரத்துவங்கின.

இன்றைய மருத்துவ துறையில் குணப்படுத்த முடியாத நோய்கள் மிக குறைவு எனும் அளவுக்கு மருத்துவ துறை வளர்ச்சி கண்டுள்ளது.

சமூகத்தில் உயர் அந்தஸ்த்து மருத்துவ துறையில் பணிபுரிபவர்களுக்கு இன்றைய சமூகத்தில் வழங்கப்படுகிறது. இவர்களே மனித உயிர்களை காக்கும் கடவுளுக்கு நிகரான தொழிலை செய்கிறார்கள்.

இதனால் இன்றுவரை மருத்துவ துறைக்கு செல்ல வேண்டும் என பல மாணவர்கள் விரும்புகின்றனர். மருத்துவ துறையில் தாதியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களினதும் பங்கு மிகவும் அதிகமானதாகும்.

மருத்துவ துறையின் வளர்ச்சி

மருத்துவ துறையில் பலவிதமான சிகிச்சை முறைகள் நவீன கருவிகள் என்பன பாவிக்கப்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் மனிதர்களுக்கான நோய் நிலமைகளும் கூடிக்கொண்டு வருவதனால் சிகிச்சை முறைகளும் வளர்ச்சியடைந்து வருகிறது.

“தொற்று நோய்களுக்கான தடுப்பூசிகள் சிறுநீரகம், பல், நுரையீரல், இதயம், மூளை, வயிறு போன்ற உறுப்புக்களுக்கான சிகிச்சை முறைகள், என்பு முறிவு தொடர்பான சிறந்த அறுவை சிகிச்சை, புற்றுநோய்க்கான சிகிச்சை, இதயமாற்று அறுவை சிகிச்சை என பல வகையான சிகிச்சை முறைகள் இன்று மருத்துவத்துறையில் காணப்படுகின்றன.

இன்றைய மருத்துவ துறையில் மனித மரபணு தொடர்பான ஆராய்ச்சிகள் இடம்பெற்றுவருகின்றன. வைத்தியர்களுக்கும் நோயாளிக்கும் இடையில் சிறந்த தொடர்பாடல் முறையானது வளர்ச்சி கண்டிருக்கிறது.

இன்று இதயநோய்களால் இறப்பவர்களது எண்ணிக்கை 40 சதவீதத்தால் குறைவடைந்திருக்கிறது. புற்றுநோயை கட்டுப்படுத்தும் சிகிச்சை முறைகள் கண்டறியப்படுகின்றன.

எய்ட்ஸ்ற்கான மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியானது இடம்பெற்று வருகின்றன. அது மாத்திரமல்லாது இயந்திர மனிதர்களை பயன்படுத்தி அறுவை சிகிச்சைகளை மெற்கொள்ளவும் முயற்சி நடந்து வருகிறது.

மேலும் இன்றைய நாளில் கொரோனா வைரஸ் இற்கு எதிரான மருந்துகள் சிகிச்சைகளை மேற்கொண்டு மருத்துவ உலகம் போராடி வருகிறது.

பல பேரின் உயிரை காப்பாற்றியும் வருகிறது. மனித உயிர்காக்கும் மருத்துவ பணி போற்றுதலுக்குரியது.

முடிவுரை

இன்றைய காலத்தில் மருத்துவம் மிக அவசியமான துறையாகும். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று கூறுவார்கள். மனிதர்கள் இன்றைக்கு மிகவும் ஆபத்தான சூழலில் வாழ்கின்றனர்.

உலகமே இயற்கை மாசடைவுகள், போதைப்பாவனைகள், தொற்றுநோய்கள், விபத்துக்கள், யுத்தம், முரண்பாடுகள் என்ற நிலையற்ற அபாயத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்இக்கட்டான சூழலில் நம் உயிரை காக்கும் மருத்துவ பணி போற்றுதலுக்குரியதாகும் மருத்துவர்கள் உண்மையான “Super Heroes” என்றால் அது மிகையல்ல.

You May Also Like:

போதைப்பொருள் பாவனை கட்டுரை

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை