நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை

Noyatra Valve Kurai Vatra Selvam Katturai Tamil

இந்த பதிவில் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை” பதிவை காணலாம்.

அதிக செல்வம் கொண்டவராக இருந்தாலும் அவர் நோயுற்று இருந்தால் அவரின் செல்வங்கள் அனைத்தும் வீணாகி விடும்.

ஆரோக்கியமான நோயற்ற வாழ்வு இருந்தால் தான் எம்மால் மற்றைய செல்வங்களை அடைந்து அனுபவித்திட முடியும்.

  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
  • Noyatra Valve Kurai Vatra Selvam Katturai Tamil
ஊட்டச்சத்து பற்றிய கட்டுரை

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நோயற்ற வாழ்வின் அவசியம்
  3. நோயற்ற வாழ்வு வாழ செய்ய வேண்டியவை
  4. நோய்கள் உருவாகுவதற்கான காரணங்கள்
  5. முடிவுரை

முன்னுரை

“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனிலும் அரிது நோய் நொடிகள் இன்றி வாழ்தல்” மனித வாழ்வில் பல்வேறு வகையில் மனிதன் பல செல்வங்களை ஈட்டி கொள்ள முடியும்.

ஆனாலும் அவையெல்லாம் நோய்கள் இல்லாத ஆரோக்கியமான வாழ்விற்கு முன்னால் ஒன்றுமே இல்லை.

ஏனென்றால் எவ்வளவு செல்வமிகுதியோடு ஒருவர் இருந்தாலும் ஒருவர் நோயுற்று விட்டால் அவை அனைத்தும் வீண் ஆகும். ஆகவே தான் இறைவனிடம் மனிதன் யாசித்து பெற வேண்டியதெல்லாம் நோயற்ற வாழ்வை தான்.

அதுவும் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் மனிதன் பலவகையிலும் இலகுவாக நோய் வாய்ப்படுகின்றான். இவை இன்றைக்கு மனிதன் பெற்ற சாபம் எனலாம்.

இக்கட்டுரையில் நோயற்ற வாழ்வின் அவசியம், நோயற்ற வாழ்வு எவ்வகையில் சாத்தியம் மற்றும் நோய்கள் உருவாகும் காரணங்கள் போன்றன நோக்கப்படுகின்றன.

நோயற்ற வாழ்வின் அவசியம்

மனித வாழ்வு மிகவும் குறுகியது என்பார்கள் பிறந்தவர்கள் வளர்ந்து முதுமை அடைந்து இறந்து போவது இயற்கையின் நியதி ஆகும்.

ஆனால் இந்த குறுகிய கால மனித வாழ்க்கையில் மனிதன் நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தால் தான் தானும் தன்னை சூழ உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். ஆரோக்கியமின்றி நோய்வாய்ப்பட்டவர்களுடைய வாழ்வானது இருள் மயமானது.

மகிழ்ச்சியான வாழ்வு என்பதன் ரகசியம் நோயற்ற வாழ்வாக தான் இருக்க முடியும். “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும்” ஆகையால் மனித உடலை திடமாக வைத்து கொள்வது மிகவும் அவசியம் ஆகின்றது.

நோயற்ற வாழ்வு வாழ செய்ய வேண்டியவை

நோயற்ற வாழ்வு வாழ என்ன செய்ய வேண்டும்? எமது உணவுகள், குடிக்கின்ற நீர், வாழ்விடம், வாழும் சுற்றுசூழல் என்பனவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நிறை உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். நம்மை சுற்றி உள்ளவர்கள் உளவியல் ரீதியாக நல்ல சூழலில் வாழவேண்டும்.

தினமும் உடற்பயிற்சிகளான நடத்தல், ஓடுதல், நீந்துதல் மற்றும் அப்பியாசங்களை முறையாக செய்ய வேண்டும்.

நோய் எதிர்ப்பு நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதனால் உடல் பலமாக இருக்கும்.

எமது உணவு உற்பத்தியான விவசாய முறைகள் தவறாக இருப்பதனால் தான் இன்று அதிகளவான நோய்கள் உருவாகின்றன. இவற்றை இயற்கை முறைகளுக்கு மாற்றினால் மனிதர்கள் நோயற்ற வாழ்வினை வாழ முடியும்.

நோய்கள் உருவாகுவதற்கான காரணங்கள்

இன்றைக்கு நோய்கள் அதிகம் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன.

சூழல் மாசடைதல் பல நோய்நிலைகளை இன்று உருவாக்கி வருகின்றது.

வழி மாசடைதலினால் சுவாசம் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன.

மற்றும் நீர் மாசடைதலினால் சிறுநீரக நோய்கள், கொலரா, வாந்திபேதி, டெங்கு, மலேரியா, யானைக்கால் போன்ற நோய்கள் உருவாகின்றன.

நிலம் மாசடைவதனால் விவசாய பொருட்கள் நஞ்சாகின்றன. இவற்றை உண்பதனால் மனிதனுக்கு சமிபாட்டு தொகுதி சார்ந்த நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் உருவாகின்றன.

மற்றும் துரித உணவுகளை அதிகமாக உண்பதனால் “கொலஸ்ரோல், உயர்குருதி அமுக்கம்” போன்ற நோய்கள் உருவாகின்றன.

மனிதர்களின் உணவும் அவர்களின் செயற்பாடுகளும் பழக்க வழக்கங்களுமே நோய்கள் உருவாக காரணமாக இருக்கின்றன.

முடிவுரை

இன்றைக்கு மனிதர்கள் மிக வேகமாக அபிவருத்தி எனும் பெயரில் கட்டடங்களையும் வாகனங்களையும் இயந்திரங்களையும் உருவாக்கி விட்டு அவற்றையே பெரும் சாதனைகளாக எண்ணி கொள்கின்றனர்.

ஆனால் அவர்கள் தமது சூழலையும் மாசுபடுத்தி தமது ஆரோக்கியத்தை இழந்து நோயாளிகளாக தாம் மாறுவதை அவர்கள் காலப்போக்கிலேயே உணர்கின்றார்கள்.

இன்றாவது நாம் நோய்கள் இல்லாத வாழ்வே உயர்ந்த செல்வம் என்பதனை உணர்ந்து அதற்கமைய நோயற்ற வாழ்வு வாழ இனி ஒரு விதி செய்வோம்.

You May Also Like:

துரித உணவு துரித முடிவு கட்டுரை

உடல் நலம் காப்போம் கட்டுரை