இந்த பதிவில் “நான் ஒரு கதைப்புத்தகம் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டமைந்துள்ளன.
நான் ஒரு கதைப்புத்தகம் கட்டுரை – 1
கதை கேட்பது என்பது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. அம்மா சொன்ன கதை, பாட்டி சொன்ன கதை, அப்பா சொன்ன கதை என்று நாம் பல கதைகளை கேட்டிருப்போம் இன்றுவரை எமக்கு அந்த கதைகள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் அவ்வாறு வாழ்வை அழகாக்கும் கதைகள் ஏராளம்.
ஆம் நான் ஒரு கதைப்புத்தகம் நானும் பல கதைகளை என்னுள் சுமந்து உங்களுக்காக சொல்லுவேன். வரலாற்று கதைகள் அவை உங்களுக்கு வரலாற்றை கற்று கொடுக்கும் அது போல எதிர்காலத்தை எதிர்கொள்ளவும் உதவும்.
புதிர் கதைகள் அவை உங்களுக்கு புத்தி சாதுரியத்தை வழங்கும். நகைச்சுவை கதைகள் அவை உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இவ்வாறு நான் பல வகையான கதைகளை என்னை வாசிப்பவர்களுக்கு கூறி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவேன்.
இந்த கதைகள் உங்கள் வாழ்வை மாற்ற வல்லது உங்களுக்கு பல புதிய அனுபவங்களை தரவல்லது. வாழ்வின் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இந்த கதைகள் உங்கள் ஞாபகத்துக்கு வரும் என நான் நம்புகின்றேன்.
என்னை வாசிக்க பலருக்கு ஆர்வம் இருக்கின்றது. குழந்தைகளுக்கென்றால் சொல்லவே தேவையில்லை மிகுந்த ஆர்வம் கதைகளை வாசிப்பதன் மூலம் அவர்கள் கற்பனை வளம் பெறுவார்கள் எதிர்காலத்தில் அவர்கள் ஒரு சிறந்த படைப்பாளிகளாக வருவார்கள்.
ஒரு கதைப்புத்தகமாகிய நான் என்னை வாசிப்பவர்களை மகிழ்ச்சியடைய செய்வதோடு அவர்களது வாழ்க்கைக்கும் உதவும் படியாக இருப்பேன்.
இதனால் அவர்களது வாழ்வும் ஒரு நல்ல கதையாக மாறும். ஒரு கதைப்புத்தகத்துக்கு இதனை விட பெருமை வேறு என்ன இருந்து விட போகின்றது.
நான் ஒரு கதைப்புத்தகம் கட்டுரை – 2
நான் ஒரு கதைபுத்தகம் என்னை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் அன்றொரு நாள் நான் ஒரு சிறந்த எழுத்தாளரின் கைவண்ணத்தில் உருவாகி அழகாக வடிவமைக்கப்பட்டு என்னை போன்ற பல நண்பர்களுடன் ஒரு சிறுவர் நூலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டோம்.
அங்கு பல சிறுவர்கள் ஆர்வத்துடன் எங்களை வாசிப்பதற்காக வருவார்கள் மணி கணக்காக அமர்ந்து அவர்கள் என்னை வாசிப்பார்கள். என்னை யார் வாசித்து முடிப்பது என்ற போட்டி கூட அவர்களுக்குள் எழுவதுண்டு.
இவ்வாறு ஒரு சிறுவர் நூலகத்தில் எனது கதை ஆரம்பித்தது. காலம் செல்ல செல்ல அந்த சிறுவர்கள் அனைவரும் வளர்ந்து பெரியவர்களாகி உயர் கல்வியை தொடர சென்று விட்டார்கள்.
அத்துடன் நாகரீக மாற்றம் காரணமாக இன்றுள்ள குழந்தைகள் யாரும் இங்கே வருவதில்லை. அது மட்டுமன்றி எங்களை போன்ற புத்தகங்களை ஆர்வத்துடன் வாசிப்பதும் இல்லை. நான் தனித்துவிடப்பட்டதனை போல உணர்கின்றேன். எம்மை சுற்றி தூசு படிந்து கவனிப்பாரற்று கிடக்கின்றோம்.
இந்த சமுதாய மாற்றம் எங்களை கவனிப்பாரற்று கிடக்க வைத்து விட்டது. இது நெடு நாளிற்கில்லை நிச்சயம் ஒரு நாள் இந்த மனிதர்கள் வாசிப்பின் அவசியத்தை உணர்வார்கள் எம் போன்ற புத்தகங்களை தேடி வருவார்கள் என்று நாங்களும் காத்து கொண்டிருக்கின்றோம்.
எம்மை போன்ற சிறந்த பொழுது போக்குகளை விட்டு விட்டு இக்கால குழந்தைகள் கைத்தொலைபேசிகளிலும் மடி கனிணிகளிலும் தமது பொழுதை கழித்து தமது மன அழுத்தத்தை கூட்டி கொண்டிருக்கின்றார்கள்.
இது இந்த சமுதாயத்துக்கு பல பாதகங்களை ஏற்படுத்தும் இது எம்மை போன்ற புத்தகங்களை கவனிக்காமல் விட்டதன் சாபம் என்றே நான் கருதுகின்றேன்.
You May Also Like: