இந்த பதிவில் “நான் ஒரு எறும்பு ஆனால் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டமைந்துள்ளன.
கடின உழைப்புக்கும் ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக எறும்புகளே விளங்குகின்றன. மனிதர்கள் சுறுசுறுப்பு என்பதை எறும்புகளை பார்த்து கற்றுக் கொள்ளலாம்.
நான் ஒரு எறும்பு ஆனால் கட்டுரை – 1
நான் ஒரு எறும்பு ஆனால் சுறுசுறுப்பாக ஒவ்வொரு நாட்களையும் ஆரம்பிப்பேன். சலிப்பே இல்லாது எனது வாழ்க்கையை நான் வாழ்வேன். இந்த இயற்கையின் மடியிலே நான் ஆனந்தமாக ஊர்ந்து செல்வேன்.
மரக்கிளைகளிலும் இந்த புல்வெளிகளிலும் பூமிக்கு உள்ளேயும் வெளியேயும் நான் சுதந்திரமாக சென்று வருவேன். எனக்கு பல்லாயிரக்கணக்கான நல்ல நண்பர்கள் உறவினர்கள் இருக்கின்றார்கள்.
அவர்களோடு சேர்ந்து பகல் முழுவதும் மகிழ்ச்சியாக உணவு தேடிய படியே எனது பொழுதை கழிப்பேன். மனிதர்கள் எங்களை பார்த்து தான் ஒற்றுமையினை கற்று கொள்ள வேண்டும். நாங்கள் அனைவரும் ஒன்றாக வாழ்வதனால் தான் எந்த கடினமான வேலைகளையும் இலகுவாக செய்கின்றோம்.
நான் ஒரு பொழுதும் சோர்வடையமாட்டேன். மிகவும் உற்சாகமாக வாழ்வேன். எனக்கு உணர்திறன் அதிகமாகும். உணர்திறன் மூலமாகவே எனது சுற்றத்தாரை கண்டுபிடித்து ஒரு வரிசையாக போர்வீரர்களை போல நாங்கள் பயணிப்போம்.
எங்களுடைய ஒற்றுமையினையும் கடின உழைப்பையும் கண்டு மனிதர்களே வியப்படைவார்கள் இதனால் தான் “எறும்பூர கற்குழியும்” என்று சிறப்பாக கூறுவார்கள்.
காலையில் எழுந்தவுடன் நான் எனக்கு பிடித்தமான உணவு பொருட்களை மோப்பம் பிடித்து அவற்றை தேடி செல்வேன். தானியங்கள், பழங்கள், வெல்லம் போன்ற இனிப்பான உணவுகள் எனக்கு மிகவும் பிடித்தமானவையாகும் அவற்றினை தேடி சென்று உண்பதில் எனக்கு அலாதி பிரியம்.
இந்த மனிதர்களுக்கு நான் சிறந்த முன்னுதாரணமாக இருப்பேன். ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் எவ்வாறு வாழவேண்டும் என்பதனை அவர்கள் என்னை பார்த்து கற்று கொள்ளவேண்டும்.
இவ்வாறு நான் ஒரு எறும்பு ஆனால் எனக்கு கிடைத்த இந்த வாழ்வை மகிழ்ச்சியோடு வாழ்ந்து முடிப்பேன்.
நான் ஒரு எறும்பு ஆனால் கட்டுரை – 2
நான் ஒரு எறும்பு ஆனால் இந்த காட்டிலும் மேட்டிலும் வயல்களிலும் இந்த புல் பூண்டுகள் அனைத்திலும் தவழ்ந்து மகிழ்கின்ற வாழ்வை யாரால் வெறுத்து விட முடியும்.
என்னிடத்தில் எந்த கவலைகளும் இருக்காது நான் யாரையும் சார்ந்தும் இருக்க வேண்டியதில்லை எங்களுக்கு தேவையானவற்றை இறைவன் இயற்கை என்பதை வரமாக தந்துள்ளார். நாங்கள் அவற்றை பயன்படுத்தி மிகவும் மகிழ்ச்சியாக எமது வாழ்க்கையை வாழ்வோம்.
வெறும் மண்ணையே பயன்படுத்தி எங்களுடைய கூட்டு முயற்சியினால் மிகப்பெரிய புற்றுக்களை நாங்கள் உருவாக்கவோம். அவை தான் எங்களுடைய அழகான வீடாகும்.
மழையிலும் வெய்யிலிலும் இருந்து எங்களை பாதுகாக்கும். ஆபத்தான மிருகங்களிடம் இருந்து அது எமக்கு அரனாக இருக்கின்றது.
நாள் முழுவதும் சென்று தேடி சேர்த்து உண்டு எஞ்சியவற்றை ஒரு தானிய கழஞ்சியம் போல நாங்கள் சேமித்து வைப்போம். இது எங்களுக்கு உணவு தேட முடியாத மழைக்காலங்களில் எங்களுடைய பசியினை போக்கும்.
இவ்வாறு நாங்கள் சேமிப்பு, கடின உழைப்பு, ஒற்றுமை என பல நல்ல பழக்கவழக்கங்களை மனிதர்களுக்கு கற்பிக்கின்றோம்.
நாங்கள் இருப்பதனால் தான் இங்கே சூழல் சமநிலையாக இருக்கின்றது. இந்த பூமியில் கைவிடப்படும் கழிவுகளை உக்கலடைய செய்கின்றோம் இதனால் தான் இந்த இயற்கை தூய்மையாக இருக்கின்றது.
மண்ணை குடைந்து உள்ளே சென்று மண்ணுக்கு தேவையான ஒட்சிசனை அங்கே பதிப்பதற்கு நாங்கள் துணைபுரிகின்றோம் இதனால் தான் விவசாயம் சிறப்பாக இடம்பெற முடிகின்றது.
ஆனால் இன்று மனிதர்களோ எம்மை நஞ்சு கலந்த உரங்கள் கிருமிநாசினிகளை நிலத்திலே விசிறி எங்களை அழித்து விடுகின்றார்கள் இதனால் தான் இன்று எமது இயற்கை மாசடைந்து வருகின்றது. எனவே இவற்றை கவனத்தில் கொண்டு எங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் வேண்டுகின்றேன்.
You May Also Like: