இந்த பதிவில் “சிறந்த உலகத்தை உருவாக்குவதில் அறிவியலின் பங்கு கட்டுரை” பதிவை காணலாம்.
மனிதன் தனது அறிவியல் வளர்ச்சியால் இன்றைக்கு பெரும் சாதனைகளை செய்து கொண்டிருக்கிறான்.
சிறந்த உலகத்தை உருவாக்குவதில் அறிவியலின் பங்கு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- அறிவியல் என்பது
- நவீன அறிவியல் உலகம்
- எதிர்கால உலகில் அறிவியல் வளர்ச்சி
- அறிவியலின் பயன்கள்
- முடிவுரை
முன்னுரை
இன்றைய உலகில் அறிவியல் இன்றியமையாததாக உள்ளது. உலகின் வளர்ச்சிப் போக்கிலும், உலக இருப்புக்கும் அறிவியலின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
இவ்வுலகில் எம்மைச் சுற்றி பல உயிர்கள் மற்றும் பலவித விசித்திர நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இவற்றின் பின்னணியில் பல அறிவியல் சார்ந்த உண்மைகள் மறைந்துள்ளன.
விண்ணைத் தொடும் அளவிற்கு இன்றைய அறிவியல் வளர்ந்து விட்டது. இத்தகைய அறிவியல் சிறந்ததொரு உலகை உருவாக்குவதில் பங்காற்றி வருகின்றது என்றால் அது மிகையல்ல.
அறிவியல் என்பது
அறிவியல் என்பது ஒவ்வொரு செயல்களிலும் ஆழமாக பொதிந்திருக்கின்ற அர்த்தப்பாடுகளை விஞ்ஞான ரீதியாக பார்ப்பதாகும்.
அறிவியல் என்பது சுருக்கமாக கூறின் அறிந்துகொள்ளுதல் எனப்பொருள்படும். ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு முறையான வழிமுறையைப் பின்பற்றி இயற்கை மற்றும் சமூக உலகத்தைப் பற்றிய அறிவு மற்றும் புரிதலைப் பெற்றுத்தரும்.
நவீன அறிவியல் உலகம்
அறிவியல் உலகம் அதிவேகமாக முன்னேறி வருகின்றது. பௌதிக இயற்கையின் அடிப்படை பற்றியும், அதன் உள்ளே இருக்கும் உலகம் குறித்தும் தெளிவுபடுத்தியது அறிவியலே.
கடந்த காலத்தை நம்மால் மாற்றியமைக்க முடியாது. எனினும் கூட கடந்த கால நினைவுகளை மீட்டிப் பார்க்க அறிவியல் துணைபுரிகின்றது. அது புகைப்படமாகவோ அல்லது காணொளி மூலமாக பார்க்க முடியும்.
நவீன மனித வளர்ச்சி என்பது அறிவியல் வளர்ச்சியுடன் இணைந்ததாகவே பயணிக்கின்றது எனலாம்.
எதிர்கால உலகில் அறிவியல் வளர்ச்சி
எதிர்கால உலகில்அறிவியலது வளர்ச்சியானது மிகவும் அபரிவிதமான வளர்ச்சியாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒளியை விட வேகமாகப் பயணம் செய்யக்கூடிய வகையில் பல கண்டுபிடிப்பு ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
இவை எதிர்காலத்தில் உலகத்திற்கு வரும்போது மனித வாழ்வியலிலும் புதிய வடிவம் பெறும். மேலும் மனிதனின் மூளையின் திறனை சிப் மூலமாக அதிகரிக்கச் செய்யும் வகையில் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் மூலம் அவயவங்களை இழந்தவர்களுக்குச் செயற்கை அவயவங்கள் பொருத்தப்பட்டு அவையவங்கள் செய்ய வேண்டிய வேலைகளை மூளைக்கு அனுப்பி இயங்கச் செய்வதற்கான முயற்சியாக இது உள்ளது. இது மனித வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டுவரும்.
அறிவியலின் பயன்கள்
உலகிற்கு அறிவியல் தந்துள்ள பயன்கள் ஏராளம். இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிந்து மனித உயிர்கள் உட்பட புவியில் வாழும் உயிரினங்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு அறிவியலே துணை புரிகின்றது.
அன்றாட வாழ்வில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அறிவியல் உதவுகிறது. அறிவியல் வளர்ச்சியால் வேலை இலகுவாக்கப்படுகின்றன.
முடிவுரை
மனிதன் தனது அறிவியல் வளர்ச்சியால் இன்றைக்கு பெரும் சாதனைகளை செய்து கொண்டிருக்கிறான். இவை சிறந்த உலகை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
மனித உயிர்களைப் பாதுகாக்கும் மருத்துவ வசதிகள் யாவும் அறிவியல் தந்ததே! காட்டுமிராண்டியாக வாழ்ந்த மனிதன் இன்று நாகரீகமான பண்புகளுடன் வாழ அறிவியலின் பங்களிப்பே காரணமாகும்.
அறிவியல் உலகில் எதிர்மறையான தாக்கத்தைச் செலுத்துகின்றது என்ற விமர்சனங்கள் எழுந்தாலும், அறிவியலின் பங்களிப்பு இல்லாமல் உலகம் இல்லை. எனவே ஆக்கபூர்வமான அறிவியல் மூலம் சிறந்த உலகை உருவாக்க முடியும் என்பதில் ஐயமில்லை.