அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை

Ariviyal Katturai In Tamil

இந்த பதிவில் அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை தொகுப்பை காணலாம்.

நம் அன்றாட வாழ்வின் செயல்பாடுகளை அறிவியல் வளர்ச்சி மிக எளிமை ஆக்கியுள்ளன.

அறிவியல் வளர்ச்சியில் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் இருக்கவே செய்கின்றன.

  • அன்றாட வாழ்வில் அறிவியல்
  • Ariviyal Katturai In Tamil
கல்வியின் சிறப்பு கட்டுரை

அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இன்றைய வாழ்க்கை முறையும் அறிவியலும்
  3. அறிவியல் வளர்ச்சியும் வேலை இலகுவாக்கலும்
  4. முடிவுரை

முன்னுரை

அறிவியல் என்பது ஒவ்வொரு செயல்களிலும் ஆழமாக பொதிந்திருக்கின்ற அர்த்தப்பாடுகளை விஞ்ஞான ரீதியாக பார்ப்பதாகும். அறிவியல் இன்றைக்கு பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறது.

மனிதனுடைய ஒவ்வொரு செயற்பாடுகளிலும் ஆழமான அறிவியல் பொதிந்திருக்கிறது.

மனிதன் அன்றாடம் ஏராளமான செயற்பாடுகளை ஆற்றுகிறான். வாழ்நாள் முழுவதும் மனிதன் இயங்கி கொண்டிருக்கிறான் மனிதனுடைய இயக்கம் தொழிற்பாடு அவர்கள் ஆற்றுகின்ற செயற்பாடுகள் என்பன தொடர்பாக அறிவியல் பல விளக்கங்களை தருகின்றது.

நமது அன்றாட வாழ்வில் பல அறிவியல் உண்மைகள் காணப்படுகின்றன அவை தொடர்பாக நோக்குவது இக்கட்டுரையாகும்.

இன்றைய வாழ்க்கையும் அறிவியலும்

மனிதன் அன்றாடம் ஆற்றும் தொழில்கள் என்ன? அவை ஏன் இடம்பெறுகின்றன? இவை ஏன் தவிர்க்க முடியாத செயற்பாடுகள் என விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது.

மனிதன் சுவாசிக்கின்றான் என்றால் மனிதன் சுவாசிப்பதன் மூலமே உடல் இயக்கம் பெறுகிறது. குருதி சுற்றோட்டம் இடம்பெறுகிறது உடலின் எல்லா பாகங்களிற்கும் குருதி கொண்டு செல்லப்படுகிறது மனித உடலே ஒரு பாரிய அறிவியல் அதிசயம்.

மனிதனுக்கு பசிக்கிறது உணவை எடுத்து கொண்டால் தான் சக்தி கிடைக்கிறது. இதனால் தான் உடல் உறுப்புக்கள் இயங்குகிறது. தாகம் எடுக்கிறது உடலின் நீர் மூலமே கலங்கள் இயங்கி கொண்டிருக்கின்றன. இதனால் தான் நீர் தாகம் எடுக்கிறது.

தூக்கம் வருகிறது மனிதனுடைய உடல் தொடர்ச்சியாக இயங்க முடியாமல் களைப்பானது ஏற்படுகிறது இதனால் அவசியமாக தூங்கவேண்டி ஏற்படுகிறது.

மனிதனுடைய உடல் இயக்கம் சூழலுக்கேற்ப தன்னை இசைவாக்கம் அடைய செய்வதுடன் தன்னை பாதுகாக்கவும் நோய் நிலமைகளின் போது எதிர்ப்பு சக்தியை தானே உருவாக்கி கொள்கிறது.

மனிதன் உணவை சமைத்து உண்கிறான் அதற்கு நெருப்பை கண்டுபிடித்தான் ஏனென்றால் பச்சையாக உணவை உண்பதனால் கிருமிகள் உடலினுள் சென்று நோயை உண்டாக்கி விடும் என்பதனால் உணவை சமைத்து உண்டனர்.

இயற்கை சக்திகளில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள பாதுகாப்பான வாழ்விடங்களை அமைத்து கொள்கின்றனர் மேலும் அன்றாட வாழ்வில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் அறிவியல் உதவுகிறது.

அறிவியல் வளர்ச்சியும் வேலை இலகுவாக்கலும்

மனிதன் தனது அறிவியல் வளர்ச்சியால் இன்றைக்கு பெரும் சாதனைகளை செய்துகொண்டிருக்கிறான். சாத்தியமாகாத விடயங்களை கூட இலகுவாக செய்து விடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

இந்த அறிவியல் வளர்ச்சி மனித தேவைகளை இலகுவாக பூர்த்தி செய்வதுடன் மனிதனுடைய உழைப்பை வெகுவாக குறைத்துள்ளது.

முன்பெல்லாம் கஸ்ரப்பட்டு உடலுழைப்பை வெளிப்படுத்திய மனிதன் இன்று இலகுவாக வேலைகளை முடிக்கிறான். நீண்ட தூரம் நடந்து சென்ற மனிதன் இன்று காரிலும் பேருந்திலும் புகையிரதத்திலும் விமானத்திலும் பறக்கிறான்.

முன்பு கஸ்ரப்பட்டு கிணற்றில் நீர் அள்ளிய மனிதன் இன்று நீர் பம்பிகள் மூலம் இலகுவாக நீரை பெறுகிறான். மாடுகளாலும் உடல் உழைப்பாலும் பாடுபட்டு விவசாயம் செய்த மனிதன் இன்று இயந்திரங்களை பயன்படுத்தி இலகுவாக பயிர்ச்செய்ககையில் ஈடுபடுகிறான்.

தீர்க்க முடியாத நோய்களுக்கெல்லாம் நவீன முறையில் சிகிச்சைகளும் மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவத்துறை பெரும் வளர்ச்சி கண்டிருக்கின்றது. குணப்படுத்த முடியாத நோய்களுக்கு கூட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

பொறியியல் துறையில் கட்டடங்கள் இன்றைக்கு வானத்தை தொடுகின்ற அளவுக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து விட்டன.

கணினி அதனோடு இணைந்த இணையம் கையடக்க தொலைபேசிகள் சமூக வலைத்தளங்கள் தகவல் தொடர்பாடலில் ஆகச்சிறந்த அறிவியல் பரிணாமத்தை கொண்டிருக்கின்றன.

விவசாயம் பொருளாதாரம் கல்வி, போக்குவரத்து, விளையாட்டு, பொழுதுபோக்கு என எல்லா துறைகளிலும் அறிவியல் மனிதனுடைய பணிகளை இலகுவாக்கி கொண்டு தான் இருக்கிறது.

முடிவுரை

இன்றைக்கு அறிவியலால் சாத்தியமாகாத விடயங்கள் அரிதென்றே கூறலாம். அறிவியல் எப்பொழுதும் மனித நலன்களை பாதுகாப்பது உசிதமானது மாறாக மனித நலன்களை கெடுக்கும் வகையிலும் இன்றைக்கு அறிவியல் வளர்ச்சி போய்க்கொண்டிருக்கிறது.

வேலைகள் குறைவடைவதனால் மனிதன் இலகுவாக உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதனால் சோர்வு, உடல்நலம் குறைவடைதல், அதிக எடை மற்றும் பல நோய்நிலைகளும் தொழில்நுட்ப சாதனங்களின் பாவனையால் மனிதன் தூங்கும் காலம் குறைவடைவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வகையான நிலைகளால் மனிதன் ஆரோக்கியம் பல வழிகளிலும் கெடுகிறது என்பது வெளிப்படையாகும். இந்த அறிவியல் வளர்ச்சியால் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் இருக்கதான் செய்கின்றது.

You May Also Like:

எனது கனவு நூலகம் கட்டுரை

தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் கட்டுரை