சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று சாதியை எதிர்த்து போராடிய புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள்.
- அம்பேத்கர் தத்துவம்
- புரட்சியாளர் அம்பேத்கர் பொன்மொழிகள்
- டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள்
- Ambedkar Quotes in Tamil
அம்பேத்கர் பொன்மொழிகள்
1.நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது.. உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை.
2. மற்றவர்களின் எல்லா தேவைகளையும் நிவர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்த பெயர் ஒருபோதும் தேவையில்லை.
3. வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கவலை வேண்டாம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கடமையை செய்வோம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது எதிரியும் நம்மை மதிக்க தொடங்குவான்.
4. எவனொருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின் விருப்பபடி செயல்படாமல். அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ அவனே சுதந்திர மனிதன்.
5. அறிவு நன்னடத்தை சுயமரியாதை இவையே நான் வணங்கும் தெய்வங்கள் இவற்றை தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.
6. ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
7. அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தை குழிதோண்டிப் புதையுங்கள்.
8. உலகில் யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளை பொறுத்து தான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது.
9. மகாத்மாக்கள் வந்தார்கள் மகாத்மாக்கள் மறைந்தார்கள் ஆனால் தீண்டாமை இன்னும் அப்படியே தான் இருக்கிறது.
10. தலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போக செய்கின்றது.
11. கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளையின் கல்விக்கு செலுத்து அது உனக்கு பயன் தரும்.
12. சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தற்போதைய இன்பங்களை தியாகம் செய்து பாடுபடுங்கள் குறிக்கோளை எட்டும் வரை தீ போல் சுடும் கடும் துன்பங்களை ஏற்று தியாகம் செய்யுங்கள்.
Ambedkar Quotes in Tamil
13. எப்போதோ சொன்ன ஒரே கருத்தை சிந்தனையுள்ள எந்த மனிதனும் பிடித்துக் கொண்டிருக்கமாட்டான்.
14. அறிவை தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும்.
15. ஆடுகளை தான் கோயில்களின் முன் வெட்டுகிறார்களே தவிர சிங்கங்களை அல்ல.. ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களாக வீறு கொண்டு எழுங்கள்.
16. நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று
- முதல் தெய்வம் அறிவு.
- இரண்டாவது சுயமரியாதை.
- மூன்றாவது நன்னடத்தை.
இவற்றை தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.
17. ஒருவன் அடிமைப்பட்டு இருந்தால் அவன் அடிமைபட்டு இருப்பதை உணர்த்தினாலே போதும் பிறகு அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
18. நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமை இல்லை.
19. சாதி அமைப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பெண்களே ஆவர். ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு சாதியை கடத்துவது அவர்கள் மீது விதிக்கப்பட்டிருக்கிறது.
20. சாதிகள் அனைத்துமே தேசவிரோத சக்திகள்.
21. இந்த சமூகம் உங்களுக்கு சுதந்திரமான உணர்வைத் தராத வரை.. சட்டம் எத்தகைய விடுதலையை உங்களுக்கு அளித்தாலும் அதனால் பயன் இல்லை.
22. சமுதாய சிந்தனைகளை விட வகுப்பைப் பற்றிய எண்ணமே மேலோங்கி ஆட்சி செலுத்தும் ஓர் அமைப்பு இந்து சமுதாய அமைப்பு.
23. சாதிய அமைப்பு முறை என்பது ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களை சமூகங்களாக பிரித்து வைத்திருக்கின்றது.
24. குழந்தைப் பேறு சமயத்தில் பெண்கள் பட வேண்டியுள்ள வேதனைகளை ஆண்கள் பட வேண்டியிருந்தால் அவர்களில் யாரும் வாழ்நாளில் ஒரு முறைக்குமேல் குழந்தை பெற இணங்க மாட்டார்கள்.
அம்பேத்கர் தத்துவம்
25. சாதி அமைப்பு புனிதமாக கட்டப்பட்டிருக்கிறது இந்த புனிதத்தன்மையை முதலீடாக கொண்டு இயங்கும் மதத்தையும் சாஸ்திரங்கள் மீதான நம்பிக்கையும் ஒழிக்க வேண்டும்.
26. பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக போராடவில்லை எனில் அந்த சமூகத்தின் முதல் சாபக்கேடு நீ தான்.
27. ஜாதியை ஒழிக்க நினைப்பவர்கள் ஜாதித் தலைவராக மாற்றப்படுவது மாறாதவரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை.
28. கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கையை விட ஏழைகளுக்கு கொடுக்கும் கல்வி மேலானது.
29. ஒரு மதம் விலங்குகளை தொடுவதை புனிதமாகவும் சக மனிதர்களை தொடுவதை தீட்டாகவும் கருத்துமாயின் அது மதம் அல்ல. அது கேலிக்கூத்து.!
30. சிந்தனை விடுதலையே அனைத்து விடுதலைக்கும் அடிப்படையானது.
31. ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுயமரியாதை. இதை இழந்து வாழ்வது தான் பெரிய அவமானம்.
32. எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதனை நான் புரிந்து கொள்ளவில்லை என்றால் நான் மனிதனே இல்லை.
33. சாதி எனும் கீழ்த்தனத்தினால் தான் பெரும்பாலான மக்கள் மனிதத்தன்மை இல்லாமல் வாழ்கிறார்கள்.
34. இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இது பல இனக்குழுக்களின் தேசம். அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வ குடியான தமிழர்களே கொண்டாட முடியும்.