வள்ளலாரின் தத்துவ கருத்துக்கள்

Vallalar Quotes in Tamil

இதில் வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் அவர்கள் உதித்த வள்ளலாரின் தத்துவ கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளது.

  • வள்ளலார் தத்துவங்கள்
  • வள்ளலார் தத்துவம்
  • Vallalar Quotes in Tamil

வள்ளலாரின் தத்துவ கருத்துக்கள்

பெரியவர்களை கண்டால்
பணிவுடன் நடந்து கொள்ளுங்கள்
தவறு செய்தால் அதைத்
திருத்திக் கொள்ளுங்கள்.
நல்ல பழக்க வழக்கங்களை
பின்பற்றி நல்லவராக
இருங்கள்.

உங்கள் திறமை என்பது
கடவுளால் கொடுக்கப்பட்டது
அடக்கத்துடன் இருங்கள்..

பல்லாயிரம் சொற்களை
உபசாரமாக பேசுவதை விட..
முகமலர்ச்சியுடன் ஒருவரை
பார்த்தாலே போதும் நம்மை
சந்திப்பவர் மகிழ்ச்சி அடைவார்.

பொய் மற்றும் புறம் சொல்லுதல்
போன்ற செயல்களால்
முன்னேறலாம் என
நினைக்க கூடாது. அது
ஒரு நாள் மிகப்பெரிய அழிவில்
கொண்டு போய் விடும்.

சூரியன் உதிக்கும் முன்
எழுவது. அதிகாலையில்
தியானம் செய்வது.
இளம் வெயிலில் உடல்பயிற்சி
செய்வது ஆரோக்கியமாகும்.

உயிர் இரக்கமே பேரின்ப
வீட்டின் திறவு கோல்.

நரகமும் சொர்க்க்கமும்
உன் ஒழுக்கத்திலும்
நல்ல பழக்கத்திலும்
இருக்கிறது.

அன்பும் இரக்கமுமே
வாழ்க்கையின்
அடிப்படை.

உண்மையை சொல்
அது உனது வார்த்தைகளை
பாதுகாக்கும்.
நல்ல எண்ணத்தோடு இரு
அது உன் நடத்தையை
பாதுகாக்கும்.

யாரிடத்தில் இரக்கம் அதிகம்
இருக்கிறதோ அவரிடத்தில்
கடவுள் இருக்கிறார்.

எனக்கு சித்திகள் தருகின்ற
தெய்வமாக விளங்குவது
சத்தியமே.

ஏதும் இல்லாத ஏழைகளுக்கு
இரக்கப்பட்டு மனது உவந்து
கொடுப்பதே ஜீவகாருண்யம்.!

சோதனைகள் தான்
ஒரு மனிதனை அவனுக்கு
அறிமுகப்படுத்துகின்றன.

பாவ செயல்களை செய்யாமலும்..
தீயவர்கள் கூட்டத்தில் பழகாமலும்..
திருவருளை சிந்தித்து கடவுளை
நினைத்து கொண்டிருந்தால்
கவலைகள் உங்களை
விட்டு நீங்கும்.

எய்தவனுக்கு பதிலாக
அம்பையோ..
அம்பை செய்து கொடுத்தவரையோ
பழித்தால் எந்த பயனும் கிடையாது.

ஒரு உடல் என்பது அந்த உயிர்
குடியிருக்கும் வீடு என்பதை
மறந்துவிட கூடாது.

புண்ணியம் மற்றும் பாவம்
என்பன மனம்.. சொல்..
செயல்.. ஆகிய இம்மூன்று
வழிகளில் தான் நம்மை
வந்தடைகின்றன.

பஞ்ச மகா பாவங்கள்
( கள், காமம், கொலை,
களவு, பொய் )
இந்த ஐந்தும் கொடிய துக்கத்தை
உண்டுபண்ணும்.

தெய்வத்தின் பெயரால்
உயிர் பலி கூடாது.

ஒருவர் செய்கிற
நன்மை தீமைகள் எங்கும்
போவதில்லை.. என்பதை
உணர்ந்து அனைவரும்
ஒழுக்கத்துடன் நடந்து
கொள்ள வேண்டும்.

பக்தி என்பது
மன நெகிழ்ச்சி
மன உருக்கம்.

அன்பு என்பது
ஆன்ம நெகிழ்ச்சி
ஆன்ம உருக்கம்.

எல்லா உயிர்களிடத்திலும்
கடவுள் வியாபித்திருக்கிறார்
என்பதை அறிதலே
கடவுள் பக்தியாகும்.

ஈஸ்வர பக்தி என்பது
எல்லா உயிர்களிடத்திலும்
கடவுள் வியாபித்து
இருப்பதை உணர்தல்.

மனிதன் அஞ்சுவது
மரணத்திற்கு அல்ல..
மரண அவஸ்தைக்கு தான்.!

அரை வயிறு உணவு..
கால் வயிறு தண்ணீர்..
கால்பாகம் காலியாக
உணவு உண்ணும் முறையை
பின்பற்றினால் எந்த வகை
நோய் நொடியும்
மனிதனை தாக்காது.

மேலும் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.