இந்த தொகுப்பு “லெனின் பொன்மொழிகள் தத்துவங்கள் (Lenin Ponmozhigal in Tamil)” உள்ளடக்கியுள்ளது.
- லெனின் பொன்மொழிகள் தத்துவங்கள்
- லெனின் பொன்மொழிகள்
- தமிழ் லெனின் தத்துவங்கள்
- Lenin Ponmozhigal in Tamil
லெனின் பொன்மொழிகள் தத்துவங்கள்
அனைவரையும் நேசி..
சிலரை மட்டும் நம்பு..
ஒருவரைப் பின்பற்று
ஆனால் ஒவ்வொருவரிடமும்
இருந்து கற்றுக்கொள்..!
நீ கவலைகளை சுமந்து
கண்ணீர் சிந்துவதை விட..
இலட்சியங்களை சுமந்து
ரத்தம் சிந்து.. உலகம்
உன்னைப் போற்றும்..!
அடிக்கடி சொல்லப்படும்
ஒரு பொய் உண்மை
ஆகி விடும்..!
மனம் சுத்தமாக இருந்தால்
செயல் நல்ல வழியில் செல்லும்..!
எல்லோரையும் திருப்திப்பட
வைக்க நினைப்பவனால்
வாழ்க்கையில் வெற்றி
பெற முடியாது..!
அச்சத்தை விட ஆபத்தை
ஒரு முறையாவது சந்திப்பது
மேலானது..!
போராட்டம் இல்லையேல்
வாழ்க்கை இல்லை..!
புரட்சிப் பாதையில்
கை துப்பாக்கிகளை விட
பெரிய ஆயுதங்கள்
புத்தகங்களே..!
பெண்ணுரிமை இல்லாத நாடு
காற்றில்லாத வீடு..!
நீ விரும்பாததை யார் சொன்னாலும்
செய்யாதே.. நீ விரும்புவதை
உலகமே எதிர்த்து நின்றாலும்
செய்து முடி..!
உழைத்து உழைத்து
உருக்குலைந்து போன மக்களை
மேல் எழும்பிவிடாமல்
அழுத்தி வைக்கும் ஆபத்தான
ஆயுதங்களே மதமும் கடவுளும்..!
மக்கள் புரட்சி எப்படி உருவாகும்..?
மக்கள் இனி வாழ வழியில்லை
என்று எண்ணும் போது
புரட்சி வெடிக்கும்..!
பிறரிடம் நீ எந்த குணத்தை
வெறுக்கிறாயோ.. அந்தக்
குணத்தை உன்னிடம்
வைத்துக் கொள்ளாதே..!
காண்பது அனைத்தையும்
சந்தேகம் கொண்டு பார்..!
தவறுகளை ஒத்துக் கொள்ளும்
தைரியமும்.. அவற்றை
விரைவில் திருத்தி
கொள்வதற்கான வலிமையையும்
தான் வெற்றி பெறுவதற்கான
குணங்களாகும்..!
நூலகம் இல்லாத ஒரு ஊரை
நான் ஒரு ஊராகவே
மதிப்பது இல்லை..!
நீ ஏழையாக பிறக்க
நீ காரணமில்லை.. நீ
ஏழையாக இருக்க வேண்டும்
என்கின்ற அவசியமும் இல்லை..!
அன்பை இழப்பது என்பது
கொடிய நோய்..!
குழந்தைகளிடம் எதையும்
திணிக்காதீர்கள்.. அவர்களின்
அறிவை தூண்டி
பிரகாசிக்க வையுங்கள்..!
சுதந்திரம் விலை மதிப்பற்றது..
ஆனால் அதை கவனமாக
பயன்படுத்த வேண்டும்..!
நாம் ஒற்றுமையுடனும்
ஒருமைப்பாட்டுடனும்
செயல்பட்டால் தான் நமது
போராட்டத்தில் நம்மால்
வெல்ல முடியும்..!
மத ஒழுக்கநெறி என்ற
சொற்தொடர் தான் மக்களை
இன்னும் ஏமாற்றிக் கொண்டு
ஏமாளிகளாக வைத்திருக்கிறது..!
புரட்சிகர தத்துவம் இல்லாமல்
புரட்சிகர இயக்கம்
சாத்தியமல்ல..!
உன்னதமான ஒவ்வொரு
வேலையும் முதலில்
முடியாததாகவே தோன்றும்..!
கற்றறிதல்.. ஒழுங்கமைத்தல்..
ஒன்றுபடச் செய்தல்..
போராடுதல் ஆகியவற்றின் மூலம்
இளைஞர்கள் தம்மையும்
பயிற்றுவித்துக் கொண்டு..
இளைஞர் சமூகத்திற்கும்
பயிற்றுவிக்க வேண்டும்..!
நச்சரிக்கும் வீட்டு வேளைகளில்
இருந்து பெண்கள் விடுதலை
பெறாமல் மனிதகுல விடுதலை
சாத்தியமே இல்லை..!
புரட்சிக்கான சூழல் அமையாமல்
புரட்சி சாத்தியமில்லை.. மேலும்
எல்லா புரட்சிகர சூழலும்
புரட்சி ஏற்படுத்துவதில்லை..!
முடிந்து போனவை என்று
உதாசீனம் செய்யாதீர்கள்..
நினைத்து பார்க்கவோ
நெகிழ்ந்து போகவோ
இறந்த காலத்தில் தான்
எல்லாம் இருக்கிறது..!
மேலும் பொன்மொழிகள் படியுங்கள்…