அயர்லாந்து நாட்டில் தீவிர சமூகவாதியாக இருந்த “பெர்னாட்ஷா பொன்மொழிகள்” ஒரு பார்வை.
- ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
- Bernard Shaw Quotes In Tamil
பெர்னாட்ஷா பொன்மொழிகள்
1.மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது; எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களால் வேறு எதையும் மாற்ற முடியாது.
2. மனிதர்களுள் இருவகையினர் உண்டு. திறமையானவர்கள் ஒருவகை மற்றவர்கள் திறமையைப் பயன்படுத்தாதவர்கள்.
3. பணப் பற்றாக்குறை அனைத்துத் தீமைகளுக்கும் வேர்.
4. மிருகங்கள் எனது நண்பர்கள், நான் எனது நண்பர்களை உண்பதில்லை.
5. நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும்.
6. பிறரை சீர்திருத்தும் கடமையைவிடத் தன்னைச் சீர்திருத்துவதே முதல் கடமை.
7. அதிகமான பொருள்களைப் பெறுவதை வெட்கமானதாகக் கருதும் மனிதனே மரியாதைக்குரியவன் ஆகிவிடுகிறான்.
8. உயிருள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன். உழைக்க உழைக்க எனக்கு உயிர் வாழும் விருப்பம் அதிகமாகிறது.
9. அனுபவம் ஒரு கடுமையானஆசிரியர், அது வலிகளை தந்த பிறகுதான் பாடத்தை கற்பிக்கிறது.
10. சந்தேகத்தை வெற்றி கொள்ளுங்கள், தோல்வியைத் தவிர்த்திடலாம்.
11. இன்ப வாழ்க்கை வாழ்வது என்பது ஒரு கலை. இன்பமா இல்லையா என்று நினைத்துப் பார்க்க நேரமில்லாமல் விரும்புவதை ஓயாமல் செய்து உழைத்து வாழ்வதே இன்ப வாழ்கைக்கு வழியாகும்.
12. இன்பமும் துன்பமும் பணத்தைச் சார்ந்தவை அல்ல. மனதைச் சார்ந்தவை.
13. நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக் கொள்ளும் நன்மதிப்பாகும்.
14. மனிதன் புலியைக் கொன்றால் அது வேட்டை, புலி மனிதனைக் கொன்றால் அது மிருகத்தனம். குற்றத்திற்கும் நீதிக்குமிடையே உள்ள தொடர்பு இதனைப் போன்றதுதான்.
15. பணம் பசியைத்தான் போக்கும். துன்ப உணர்ச்சியைப் போக்காது.
16. வாழ்க்கை அனுபவம் இல்லாத எவரும் கல்வி கற்றவராக இருக்க முடியாது.
17. நம்மவர்கள் சிரிப்பதற்கு மூலகாரணமே அரசாங்கம் தான். அரசாங்கம் மட்டும் இல்லையென்றால் நம் நாட்டில் சிரிப்பதற்கு ஒன்றுமே இல்லை.
18. செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
Bernard Shaw Quotes In Tamil
19. சந்தர்ப்பம் வரும் என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். தங்களுக்குத் தேவையான சந்தர்ப்பங்களைத் தேடித் பெறுபவர்தான் வாழ்வில் முன்னேற்றம் காண்கிறார்.
20. முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல். புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல்.
21. அறிவற்ற சிநேகிதனிடம் சேர்வதைவிட புத்திசாலியான எதிரியிடம் சேர்வது மேல்.
22. தவறான வழிதான் எப்பொழுதுமே பொருத்தமான வழியைப் போன்ற தோற்றம் அளிக்கிறது.
23. சந்தர்ப்பத்தை உருவாக்குபவர்கள் வெற்றியடைகிறார்கள்
24. எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எங்கே செய்ய வேண்டும் என அறிந்திருப்பவரே நல்ல தலைவர்.
25. பெண்ணை ஒரு பொருள்போல நடத்துவதால்தான் எல்லா இன்னல்களும் வருகின்றன.
26. மற்றவர்கள் யாரையும் வெறுப்பது கொடுமையானது. மேலும் மற்றவர்கள் இருப்பதைக்கூட கவனிக்காமல் இருப்பது அதைவிடக் கொடுமையானது.
27. நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை பெறுவதில் கவனமாக இருங்கள். இல்லையென்றால் எதை பெறுகிறீர்களோ அதை விரும்பும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவீர்கள்.
28. உங்கள் குழந்தைகளை நல்லவர்களாக்க சிறந்த வழி, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கச் செய்வதே.
29. நல்ல புத்தகமே சிறந்த நண்பன். உதவி தேவையான போதெல்லாம் நண்பர்களை நாடிச் செல்வது போல துணை வேண்டும்போதெல்லாம் புத்தகங்களை நாடிச் செல்ல வேண்டும்.
30. செல்வத்தை சம்பாதிக்காமல் அனுபவிக்க உரிமை கிடையாது. அதுபோலவே இன்பத்தையும் உண்டாக்காமல் நுகரமுடியது
31. அடிப்பட்டவன் உன்னைத் திருப்பி அடிக்காவிட்டால் அவனிடம் எச்சரிக்கையாயிரு. ஏனெனில் அவன் மன்னிப்பதுமில்லை, மறப்பதுமில்லை.
32. வாழ்க்கை என்பது உங்களைக் கண்டுபிடிப்பதல்ல,
33. வாழ்க்கை என்பது உங்களை உருவாக்குவதே!