தமிழ் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பொன்மொழிகள் சிலவற்றை பார்க்கலாம்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட செல்வாக்கு மிக்க ஒரு தலைவராக இன்றுவரை மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
- பசும்பொன் தேவர் பொன்மொழிகள்
- முத்துராமலிங்க தேவர் பொன்மொழிகள்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பொன்மொழிகள்
தமிழனை யாராலும்
வெல்ல முடியாது நம்மிடையே
உள்ள வஞ்சகம்.. சூழ்ச்சி..
பொறாமை.. பதவி..
பணத்தாசை.. இவை தான்
நம்மை அடிமையாக்கியதே தவிர
வீரமோ ஆயுதமோ கிடையாது.
ஓடுகிற தண்ணீர் ஆன்மீகம்
அது மண்ணையும் மனிதனையும்
வளமாக்கும்.. தேங்கி கிடைக்கும்
குட்டை நீர் நாத்திகம்
அதில் புழுப் பூச்சிகள் உண்டாகி
மண்ணையும் மனிதனையும்
அழித்து விடும்.
மனிதனுக்கு துணிச்சலை
போன்ற உண்மையான
நண்பன் உலகில் வேறு
யாருமில்லை.. பிரச்சனைகளை
சந்திக்காமல் வாழ நினைப்பவன்
வாழ தகுதி இல்லாதவன்.
யாவரும் வாழ்க என்று
சொல்லுங்கள்..
ஒழிக என்று சொல்லாதீர்கள்..
நல்லவைகள் வாழ்க என்று
சொன்னால் நீங்கள்
நினைக்கின்ற கெட்டவைகள்
ஒழிய தானே செய்யும்.
நான் எந்த ஜாதியோ அல்லது
மதமோ கிடையாது
நான் வெறும்
ஆன்மா மட்டுமே.
இறைவனை வெளியில்
தேடாதே.. இறைவனை
உனக்குள் தேடு.
கடவுளை உணர
கற்றுக்கொள்ளுங்கள்
அதன் பின்பு எல்லாமே
வெற்றி தான்.
உன்னுடைய வீரம் தான்
எதிரியும் புகழும் படியான
நிலையை உருவாக்கும்..
கோழைத்தனம் அவ்வாறு
செய்யாது.
பிரச்சனைகளை சந்திக்காமல்
வாழ நினைப்பவன் வாழ
தகுதியற்றவன்.
பூவின் நறுமணம் எவ்வாறு
இருக்கும் என்று கேட்டால்
அதை விளக்கவா முடியும்.?
அதை நுகர்ந்து உணரத்தான்
முடியும். அதுபோலவே
கடவுள் இருப்பதை நம்மால்
உணர மட்டுமே முடியும்.
பொறுப்புள்ள பெரிய
மனிதர்களை மதித்து
மரியாதை செய்யலாம்..
ஆனால் அவர்கள் பெரியவர்கள்
என்பதற்காக உங்கள் உயிருக்கு
நிகரான கொள்கைகளை
அவர்களுக்கு தியாகம்
செய்யாதீர்கள்.
பகலில் நட்சத்திரங்கள்
கண்ணனுக்கு தெரிவதில்லை
அதற்காக நட்சத்திரங்கள்
இல்லை என்று வாதிட முடியாது..
நம்மால் நம் கண்ணை
பார்க்க முடிவதில்லை அதனால்
கண் இல்லை என்று
அர்த்தம் கிடையாது.
சாதியும் நிறமும்
ஆன்மீகத்துக்கு இல்லை.
அரசியல்
நான் பேசுவது.. எழுதுவது..
சிந்திப்பது.. சேவை செய்வது
எல்லாமே என் தேசத்திற்காகவே
எனக்காக அல்ல.
தான் வாழ பதவி தேவை என்று
கருத்துபவர்களிடம் உண்மைக்கு
எதிரானவற்றை தான்
எதிர்பார்க்க முடியும்.
பதவியை ஒரு சேவையாக
கருத்துபவர்களிடமே ஆட்சி
இருக்க வேண்டும்..
அப்படி இல்லாமல் போனால்
மக்களுக்கு நலன் என்பது
வெறும் கனவு தான்.
எவன் ஒருவன் தன் சாதி
பெயரை முன்னிலைப்படுத்தி
அரசியல் செய்கின்றானோ
அவனே சமுதாயத்தின்
முதல் எதிரி.
சாத்திய சிந்தனை கொண்டவன்
அரசியலுக்கு வந்தால்
நாடு நாசமாகி விடும்..
அவன் பாவி.. சாதிய எண்ணம்
கொண்டவன் இறைவனை
வழிபடவே தகுதியற்றவன்.
பணம் கொடுத்து ஓட்டு
கேட்பவன் பாவி..
பணம் பெற்று ஓட்டு போடுபவன்
நாட்டுத் துரோகி.!