உணவை வீணாக்காமல் உண்ணுதல் கட்டுரை

unavu katturai in tamil

இந்த பதிவில் “உணவை வீணாக்காமல் உண்ணுதல் கட்டுரை” பதிவை காணலாம்.

ஒவ்வொரு நாளும் பல்லாயிர கணக்கான மக்கள் உணவின்றி உலகமெங்கும் தவிக்கின்றனர்.

உணவை வீணாக்காமல் உண்ணுதல் கட்டுரை

உணவை வீணாக்காமல் உண்ணுதல் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • உணவுக்கான போராட்டம்
  • பசியும் பட்டினியம்
  • உணவை விரயம் செய்யும் இன்றைய உலகம்
  • அதன் விளைவுகள்
  • முடிவுரை

முன்னுரை

உண்ண உணவின்றி ஒரு சில நாட்கள் பசியோடு இருக்க நேர்ந்தால் எமக்கு உணவின் அருமை புரிந்துவிடும். இந்த உலகில் மனிதர்களோ பிற உயிர்களோ உணவில்லாமல் வாழ முடியாது.

ஒவ்வொரு நாளும் பல்லாயிர கணக்கான மக்கள் உணவின்றி உலகமெங்கும் தவிக்கின்றனர். இவற்றினை கருத்தில் கொண்டு நாம் உணவினை வீணாக்கமல் பாதுகாக்க வேண்டிய தலையாய கட்டாயம் எழுந்துள்ளது.

இக்கட்டுரையில் உணவின் முக்கியத்துவமும் அதனை பாதுக்கும் வழிகள் பற்றியும் நோக்குவோம்.

உணவு போராட்டம்

முன்னொரு நாளில் மனித இனம் தனக்கான உணவை தேடுவதில் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. பல நாட்களை பட்டினியோடும் கழிக்க வேண்டியிருந்தது.

ஆனால் இன்று பசுமை புரட்சியின் விளைவால் உணவு உற்பத்தி அதிகரித்து உணவு பொருட்கள் இலகுவாக கிடைப்பதனால் மனிதர்கள் பழமையை மறந்து உணவை வீணாக்கும் முறையற்ற கலாச்சாரம் உருவாகியுள்ளது.

வளர்ந்த நாடுகள் உணவை வீணாக்குவதும் வறுமையான ஆபிரிக்க நாடுகள் உணவின்றி இறந்து போவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

பசியும் பட்டினியும்

உலகளாவிய சனத்தொகை அதிகரிப்பு உணவுக்கான தேவையினை இரட்டிப்படைய செய்துள்ளது.

காலநிலை மாற்றம் பெருமளவான தாக்கத்தினை விவசாய நடவடிக்கையின் மீது ஏற்படுத்தியமையாலும் பயிர்ச்செய்கையின் இடைவிடாத தன்மையினால் மண் வளமிழந்து போவதனால் பாரியளவான உணவு நெருக்கடியானது உலகமெங்கும் தோன்றியுள்ளது.

இதன் விளைவாக வறுமையான நாடுகள் மேலும் வறுமையினை எதிர்கொள்கின்றனர். பலநாடுகள் இன்று உணவு பஞ்சத்தினை எதிர்கொள்கின்றமை இன்றைய அண்மைக்கால போக்காக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் இந்த நிலமை மேலும் மோசமடையும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

உணவை விரயம் செய்யும் இன்றைய உலகம்

இதற்கிடையில் இன்றைய தலைமுறையினர் உணவை அதிகம் வீணடிக்கின்றனர். உணவகங்கள் களியாட்ட நிகழ்வுகள், பெருவிருந்துகள் போன்றவற்றில் அளவுக்கதிகமான உணவுகளை சமைத்து அவற்றை வீணாக கொட்டுகின்றமை மிகவும் வேதனைக்குரியது.

வசதிபடைத்தவர்கள் உணவை விரயமாக்குகையில் ஏழைகள் உணவின்றி இறந்து போகின்றார்கள். ஒவ்வொரு உணவு பருக்கையினையும் உற்பத்தி செய்ய பலரின் கடின உழைப்பானது தேவைப்படுகிறது.

எனவே உணவை விரயம் செய்வதனை நாம் நிறுத்துவதோடு அதனை பாதுகாக்க வேண்டும். இன்றைய தலை முறை குழந்தைகளுக்கு உணவின் மகத்துவத்தை எடுத்து கூறவும் வேண்டும்.

அதன் விளைவுகள்

உலகத்தின் மிகவும் கொடுமையான விடயம் உணவின்றி பசியினால் வாடுவதாகும். ஒரு சில வசதி படைத்த மனிதநேயம் அற்ற பண்புகளை உடைய மக்கள் உணவை விரயம் செய்வதால் பல ஏழை குழந்தைகள் இறந்து போகின்றார்கள் நோய்வாய்ப்படுகின்றார்கள்.

மனரீதியாகுவும் உடல்ரீதியாகவும் பலவீனமாக ஒரு மோசமான வாழ்வினை வாழும் நிலையானது உருவாக காரணமாயுள்ளது. இத்தகைய ஆபத்ததான விளைவுகளை தடுக்க உணவை சிரத்தையோடு பேணி உண்ண வேண்டும்.

முடிவுரை

மனித சமுதாயம் இன்று பலவகையிலும் கற்பனைக்கு எட்டாத தொழில்நுட்ப வளர்ச்சியை அடைந்திருந்தாலும்.

உணவு என்பது மண்ணையும் விவசாயத்தையும் சார்ந்துள்ளது என்பதனால் விவசாயத்தை மேம்படுத்தி உணவு பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது மனித சமுதாயத்தின் முதலாவது கடமையாக இன்று உள்ளது.

இதனால் தான் அக்டோபர் 16ம் திகதி சர்வதேச உணவு தினம் கொண்டாடப்படுவதன் மூலம் உணவின் அவசியம் அனைவருக்கும் உணரத்தப்படுகிறது.

You May Also Like:
மாணவர் ஒழுக்கம் கட்டுரை
ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரை