இந்த பதிவில் “அரிஸ்டாட்டில் பொன்மொழிகள்” காணலாம்.
- அரிஸ்டாட்டில் தத்துவங்கள்
- அரிஸ்டாட்டில் சிந்தனைகள்
- Aristotle Quotes In Tamil
Aristotle Quotes In Tamil
அரிஸ்டாட்டில் பொன்மொழிகள்
1. அவனவனுக்கு உரித்தானதை
அவனவனுக்கு வழங்குவது தான் நீதி.!
2. குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவோர்
பெற்றோர்களை விட
பெருமதிப்புக்கு உரியவர்கள்..
பெற்றோர்கள் உயிர் மட்டுமே அளிக்கிறார்கள்..
ஆசிரியர்கள் தான்
நல்வாழ்வு வாழும் கலையை
கற்றுத் தருகிறார்கள்.!
3. கல்வியின் வேர்கள் மிகவும்
கடினமானது.. ஆனால்
அதன் பழம் இனிமையானது.!
4. கடினமான உழைப்பிற்கு ஆதாயம்
என்ற தூண்டுதல் தேவைப்படுகிறது..
ஆதாயம் இல்லை என்றால்
கடின உழைப்பும் வீண் தான்.!
5. முனிவரின் மூளையில் கூட
முட்டாள்தனம்
ஒரு மூலையில் இருக்கும்.!
6. பகைவனை அடக்குபவனை விட..
ஆசைகளை அடக்குபவனே வீரன்.!
7. இரண்டு உடல்கள் வசிக்கும்
ஒரு ஆன்மாவிற்காக உருவானதே
அன்பு.!
8. கட்டளையிட விரும்புபவன் முதலில்
பணிவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.!
9. விமர்சனம் செய்பவனே நண்பன்..
பிழைக்கும் கும்பிடு போடுபவனே
முதல் எதிரி.!
10. அழகு உலகிலுள்ள எல்லா சிபாரிசு
கடிதங்களையும் விட மேலானது.!
அரிஸ்டாட்டில் தத்துவங்கள்
11. கலையின் நோக்கம் வெளிப்புற
விஷயங்களை பிரதிபலிப்பதல்ல
உள்ளத்தின் முக்கியத்துவத்தை
உணர்த்துவது.!
12. உயிரினங்களில் மனிதனே சிறந்தவன்..
அவனது சிந்தனை திறன்தான்
அந்த சிறப்பினை அவனுக்கு
அளிக்கிறது.!
13. தைரியம் இல்லாமல் உங்களால்
இந்த உலகில் எதுவும் செய்ய முடியாது..
மரியாதைக்கு அடுத்து மனதின்
சிறந்த பண்பு இதுவே.!
14. நல்ல விஷயங்களை கிரகித்து
அவற்றை நம்மிடையே
நிலை பெற்றிருக்க செய்வது தான்
நற்பண்பு.!
15. அனைவருக்கும் நண்பராக இருப்பது
என்பது உண்மையில் ஒருவருக்கும்
நண்பராக இல்லாததை போன்றது.!
16. உண்மையை கடைப்பிடிக்கும் மனிதன்
அதிஷ்டம் இல்லாதவனாக இருந்தாலும்
வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான்.!
17. தேவையில்லாமல் நிறைய நண்பர்களை
வைத்திருப்பவனுக்கு உண்மையில்
நண்பர்கள் இல்லை.!
18. பைத்தியக்காரத்தனத்தின் கலவை
இல்லாத ஒரு சிறந்த மேதை
எவருமில்லை.!
19. வாழ்க்கையின் முற்பகுதியில் வெற்றி
பெற சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை..
இறுதியில் வெற்றி பெற பொறுமையும்
தன்னடக்கமும் தேவை.!
20. பெருந்தன்மையான குணம்
எல்லா நற்குணங்களுக்கும்
ஆபரணம் போன்றது.!
அரிஸ்டாட்டில் சிந்தனைகள்
21. கனவு என்பது தூக்க
நிலையில் சிந்தனை.!
22. மகிழ்ச்சியானது நம்மை பொறுத்தே
அமைகின்றது.!
23. செயல்பாட்டில் ஏற்படும் மகிழ்ச்சியானது
அந்த செயலை முழுமைபெற
வைக்கிறது.!
24. நம் எண்ணங்களுக்கு ஏற்றபடி
வசதிகளை பெருக்குவதை விட..
நம் வசதிகளுக்கு ஏற்றபடி
எண்ணங்களை குறைக்க
முயல்வது நல்லது.!
25. முதுமையை முன்னிட்டு முன்னதாக
செய்து வைக்கும் பாதுகாப்புகளில்
சிறந்தது கல்வி.!
26. நல்ல மனிதர்களை கட்டுப்படுத்தும்
சக்தி அன்புக்கே உண்டு.!
27. தனித்திறன் என்பது செயல் அல்ல..
அது ஒரு பழக்கம்.!
28. தன் பயங்களில் இருந்து
மீண்டு வருபவன் தான்
உண்மையில் சுதந்திரம் அடைகிறான்.!
29. தாய் மொழியை செம்மையாக
பயன்படுத்த தெரியாத எவருக்கும்
பிறமொழியில் நல்ல புலமை வராது.!
30. நல்ல ஆரம்பம் வேலையை
பாதி ஆக்கி விடும்.!
31. அறிவாளிகளுக்கு மட்டுமே
வாக்குசீட்டு என்றிருக்க வேண்டும்..
கல்வி கேள்வி அறிவின் புலமைகளை
கொண்டவர்களால் மட்டுமே
ஒரு சரியான தேர்தலை
அமைக்க முடியும்.!
32. ஒரு நகரம் நல்ல சட்டங்களால்
ஆளப்பெறுவதை காட்டிலும்..
ஒரு நல்ல மனிதனால்
ஆளப்பெறுதல் மேலாகும்.!