மகாத்மா காந்தி தத்துவங்கள்

Mahatma Gandhi Quotes In Tamil

இந்த பதிவில் “மகாத்மா காந்தி தத்துவங்கள்” காணலாம்.

  • மகாத்மா காந்தி தத்துவங்கள்
  • மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்
  • Mahatma Gandhi Quotes In Tamil

Mahatma Gandhi Quotes In Tamil

மகாத்மா காந்தி தத்துவங்கள்

1. நோயால் மரணமடைபவர்களை விட..
அச்சத்தால் மரணம் அடைபவர்களின்
எண்ணிக்கை அதிகம்..
எனவே யாரும் அச்சம்
கொள்ள வேண்டாம்.

2. வலிமை உடலினில் இன்றி வருவதில்லை
அசைக்க முடியாத மனஉறுதிகளில்
இருந்து வருகிறது.. நமது மனதின்
தூய்மை அதிகமாக இருந்தால்..
நமது வலிமையையும்
அதிகமாக இருக்கும்.

3. சீருடன் கச்சிதமாகவும்
கண்ணியமாகவும் இருப்பதற்கு
பணம் அதிகம் தேவைப்படாது.

4. ஒருவனிடம் துக்கமும் தூக்கமும்
எப்போது குறையுதோ..
அப்போது அவன் மேதையாகிறான்.!

5. கடமையை முன்னிட்டு செய்த
செயலுக்கு வெகுமதியை
எதிர்பார்க்க கூடாது.

6. செல்லும் பாதை சரியாக இருந்தால்
அதன் முடிவும் சரியாக இருக்கும்.
அதனால் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும் கண்ணியமானதாக
இருக்க வேண்டும்.

7. ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய
கடுமையான தண்டனை அவனால்
புரிந்து கொள்ள இயலாத காரியத்தை
கட்டாயப்படுத்தி செய்யச் சொல்வதுதான்.!

8. உடலின் வீரத்தை விட..
உள்ளத்தின் வீரம் மிகவும்
உயர்வானது.

9. தவறுகளை ஒப்புக் கொள்ள
மறுப்பதை விட பெரிய
அவமானம் எதுவுமில்லை.

10. தீயதைப் பார்க்காதே..
தீயதைக் கேட்காதே..
தீயதைப் பேசாதே.

11. தோல்வி மனச்சோர்வை
தருவதில்லை.. மாறாக
ஊக்கத்தையே தருகிறது.

12. தவறு செய்வதில் பிழையில்லை..
ஆனால் தவறு செய்வதை
அறிந்த பின்னர் அதை
திருத்திக் கொள்ளாமல் இருப்பதுதான்
பெரிய தவறு.

13. நம்மை அறிமுகப்படுத்துபவை
நம் வார்த்தைகள் அல்ல..
நமது வாழ்க்கையே.!

14. வீரர்களின் லட்சணம்
அகிம்சை.

15. அகிம்சையைப் பின்பற்றும் போது
நாம் துன்பத்தை மகிழ்ச்சியோடு
ஏற்றுக் கொள்கிறோம்.

16. மற்றவர்களை வெல்ல என்னிடம்
அன்பை தவிர வேறொரு
ஆயுதம் இல்லை.

17. எப்போதும் உண்மையை மறைக்காது
சொல்லக்கூடிய மனத்திடம் வேண்டும்.

18. வாய்மை வரலாற்றையும்
கடந்து நிற்கும்.

19. வீரம் உடலின் ஆற்றல் அல்ல
உள்ளத்தின் பண்பு.

20. சந்தேகம் எனும் காயத்தை
விவாதங்களினாலும் விளக்கங்களினாலும்
குணப்படுத்த முடியாது.

21. இதயம் என்னும் சாணைக்கல்லில்
கூரேற்றிய போர்வாளின்
கூர்மையான முனை அகிம்சை.

22. பொறுமையும் விடாமுயற்சியும்
மலைகளை கூட தகர்த்து விடும்.

23. நான் போதிப்பது கோழைகளின்
அகிம்சையை அல்ல.

24. தவறை மன்னிக்கும் குணம்
ஒருவனின் உயர்ந்த
பண்பாட்டைக் காட்டுகிறது.

மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்

25. மிருகங்களை போல்
நடந்து கொள்பவன்
சுதந்திர மனிதனாக
இருக்க முடியாது.

26. செயலில் கெட்டவனை விட..
மனதில் கெட்டவனே
மிகவும் கெட்டவன்.

27. மகிழ்ச்சி என்பது பெறுவதில் இல்லை..
பிறருக்கு கொடுப்பதில்தான்
இருக்கிறது.

28. உண்மை மற்றும் வன்முறை
அற்ற செயல்களால் தான்
கடவுளைக் கொஞ்சமாவது
பார்க்க முடியும்.
அவை இரண்டும்தான் என் கடவுள்.
அவை ஒரு நாணயத்தின்
இருபக்கங்கள் போன்றவை.

29. நான் சிரித்து.. மகிழ்ச்சியுடன்
இருக்காவிட்டால் எப்போதோ
இறந்திருப்பேன்.

30. இந்த உலகத்தில் பலர் பசியுடன்
இருக்கின்றனர். அவர்கள் முன்
கடவுள் ரொட்டித் துண்டாக
மாற மாட்டார்.

31. உழைப்பின்றி உண்ணுபவர்களை
திருடர்கள் என்று தான்
சொல்ல வேண்டும்.

32. லட்சியத்தில் சுயநலமின்றி ஈடுபட்டால்
எல்லோருடைய கவனத்தையும்
கவர்வீர்கள்.

33. அன்பின் வழியாக செய்கிற
ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியைக்
கொடுத்துக்கொண்டே இருக்கும்.

34. எப்படி வேண்டுமானாலும் பணத்தை
சம்பாதித்து கொள்ளலாம்..
ஆனால் அதை ஒரு அறிவாளியால்
மட்டுமே காப்பாற்ற முடியும்.

35. சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை..
காலம் சோம்பேறியை
மதிப்பதில்லை.

36. கோழையால் யாரையும்
மன்னிக்க முடியாது.
மனஉறுதி கொண்டவர்களே
மன்னிக்கும் மாபெரும்
குணத்தைப் பெற்று இருப்பார்கள்.

37. எவன் தனக்குத் தானே கட்டுப்பாடுகளை
ஏற்படுத்திக் கொள்கிறானோ
அவனே சுதந்திரமானவன்.

38. அழகிய அன்பின் இல்லத்திற்கு
இணையான பள்ளிக்கூடமே
இல்லை.

39. சோம்பலை உங்கள் செயல்
ஊக்கத்தால் வெல்லுங்கள்.

40. தற்பெருமை எங்கு முடிவடைகின்றதோ
அங்குதான் ஒழுக்கம் தொடங்குகிறது.

41. ஒரு நல்ல இலட்சியத்தை
நிறைவேற்ற வேண்டுமானால்
நேர்மையான நல்ல வழிமுறைகளைதான்
கைக்கொள்ள வேண்டும்.

42. நிறைய அறிவுரைகளை விட
சிறிதளவாக இருந்தாலும்
கடைப்பிடித்தல் என்பது சிறந்தது.

43. தியாகம் செய்துவிட்டு வருந்துபவன்
தியாகி அல்ல.

44. சில அறங்களில் ஆண்களை விட
பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர்.
அந்த அறங்களில் அகிம்சையும் ஒன்று.

45. நல்ல நண்பனை விரும்பினால்..
நல்ல நண்பனாக இரு.

46. ஒவ்வொருவரும் தன்நெற்றி வியர்வை
சிந்தி உழைத்துப் பிழைத்தால்
மண்ணுலகம் விண்ணுலகமாகிவிடும்.

47. பெண்களே.. ஆசைகளுக்கும்
ஆண்களுக்கும் அடிமையாய்
இருக்க மறந்து விடுங்கள்.

48. உழைப்பவர்களின் கையில்தான்
உலகம் இருக்கிறது.
பிறர் உழைப்பில் வாழ்பவன்
ஒருநாளும் முன்னேற முடியாது.

49. நல்ல இருளிற்கு பிறகே
ஒளி பிரகாசிக்கிறது..
துக்கத்தை அனுபவித்த
பிறகே சுகம் தெரிகிறது.

மேலும் பதிவுகளை படியுங்கள்..

அரிஸ்டாட்டில் பொன்மொழிகள்

ஜவஹர்லால் நேருவின் பொன்மொழிகள்

பகத்சிங் பொன்மொழிகள்