மனக் கவலை கவிதைகள் வரிகள்

Kavalai Kavithaigal in Tamil

இந்த தொகுப்பு “மனக் கவலை கவிதைகள் வரிகள்” உள்ளடக்கியுள்ளது.

  • மனக் கவலை கவிதைகள் வரிகள்
  • கவலை கவிதை வரிகள்
  • கவலை கவிதைகள்
  • Kavalai Kavithaigal in Tamil
  • Kavalai Kavithai in Tamil

மனக் கவலை கவிதைகள் வரிகள்

கண்ணீர் சிந்தும் போது
துடைக்க யாரும் வருவதில்லை..
கவலை கொள்ளும் போது
சிரிக்க வைக்க எவரும்
வருவதில்லை.. அறியாமல்
ஒரு தவறு செய்து பார்..
உன்னை விமர்சிக்க
இந்த உலகமே கூடி வரும்..!

நம்மை பற்றி கவலை
படாதவர்களுக்கு நாம்
சிந்தும் கண்ணீர்
அர்த்தமற்றது..!

உன்னை வெறுப்பவர்களை
நினைத்து கவலை கொள்ளாதே..
அவர்களுக்கு உன் அன்பை
பெற தகுதி இல்லை என
நினைத்துக்கொள்..!

கவலைகளின் அளவு
கையளவாக இருக்கும்
வரை தான் கண்ணீருக்கும்
வேலை.. கவலை
மலையளவு ஆகும் போது
மனமும் மரத்துப் போகும்..!

கடலளவு கண்ணீரை வடித்தாலும்…
நம் மனம் விரும்பாமல் எந்த
கவலைகளையும்
சரி செய்ய முடியாது..!

கவலையை மறைக்க அழுதேன்..
அழுகையை மறைக்க
மௌனமானேன்.. மௌனத்தை
மறைக்க தனிமையானேன்..!
தனிமை தீரா வலியை
ரணமாக்கிச் சென்றது..!

ஒரு வினாடியில் செய்த தவறு
வாழ்நாள் முழுவதும்
கவலை தருகிறது..!

என்னை பற்றி கவலை
கொள்ள யாருமில்லை..
நான் ஏன் மற்றவங்களை
பற்றி கவலைபடனும்..?

உங்கள் கவலைகளை விளம்பரம்
செய்து எந்த பயனுமில்லை..
ஏனெனில் அவற்றை யாரும்
வாங்க மாட்டார்கள்..!

கவலை இல்லாதவர்கள்
இருவர் தான்.. ஒருவன்
கருவறையில்..! மற்றொருவன்
கல்லறையில்..!

நாளைய கவலை உங்களுக்கு
வேண்டாம்.. முடிந்த சம்பவங்களை
யோசிக்க வேண்டாம்.. இன்றைய
வாழ்க்கையை சிறப்பாக
வாழுங்கள்..!

பொய்யான அன்பு..
பொழுதுபோக்கான பேச்சு..
தேவைப்படும் போது தேடல்..
இது தான் இங்கே
பலரது வாழ்க்கை..!

யாரும் பேசவில்லை
என கவலை எனக்கு
எப்போதுமில்லை.. மாறாக
என்னை புரிந்து கொள்ள
இந்த உலகில் யாரும்
பிறக்கவில்லை என்ற செருக்கு
நிறையவே இருக்கு எனக்கு..!

இரவை பெரிதும் விரும்புகிறேன்..
கவலை மறந்த உறக்கத்திற்காக..!

ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும்
எந்தன் கவலை தீர்க்கும் ஓருயிர் நீ..
அதனால் தான் என்னை விட
உன்னையே அதிகம்
நேசிக்கிறேன்..!

இறுதி வரை வாழ்க்கை இப்படியே
இருக்க வேண்டும் என்ற
கவலை சிலருக்கு.. இப்படியே
இருந்துவிடுமோ என்ற
கவலை சிலருக்கு..!

கவலைகளை நிரந்தரமாக்கினால்
நீ நோயாளி.. தற்காலிகமாக
ஆக்கினால் நீ புத்திசாலி..
கவலையே இல்லாமல்
வாழ்ந்தால் நீ ஞானி..!

அன்பானவர்கள் கோபப்பட்டால்
அமைதியாக இரு.. ஒரு நாள்
உண்மையை உணர்ந்து வரும் போது
பேச வார்த்தைகள் தேவைப்படும்..!

வாழ்க்கை எப்போதும் இருட்டாகவே
உள்ளது என நினைத்து
கவலை கொள்ளாதே.. இருளான
நேரங்களில் தான் கனவுகள்
பிறக்கும்..!

நடந்து முடிந்தவை பற்றி நினைத்து
கவலை கொள்ளாதீர்கள்.. அது
எதிர்காலத்தையும்
இருளாக்கிவிடும்..!

இது போன்ற பதிவுகளை மேலும் வாசிப்பதற்கு…