சர்வதேச ரீதியாக பல தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன அதில் முக்கியமான ஒன்றான “மகளிர் தினம் கட்டுரை” பதிவை இதில் காணலாம்.
மார்ச் 8ம் திகதி பாலின சமத்துவத்தை வலியுறுத்துவற்தாக வருடம் தோறும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
மகளிர் தினம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சமத்துவத்தின் வெளிப்பாடு
- மகளிரின் அதிகாரங்கள்
- சமூக வளர்ச்சியில் மகளிரின் பங்களிப்பு
- சர்வதேச அங்கீகாரம்
- முடிவுரை
முன்னுரை
சர்வதேச ரீதியாக பல தினங்கள் ஒவ்வொரு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு அனுஸ்டிக்கப்படுகின்றன.
அந்தவகையில் சர்வதேச மகளிர் தினமானது பெண்களின் அடிப்படை உரிமைகள், அவர்களது சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை வலியுறுத்தி ஐக்கியநாடுகள் சபையின் வழிகாட்டுதலில் உலகமெங்கும் கொண்டாடப்படுகின்றன.
இத்தினத்தில் பெண்கள் தமக்காக புதிய பாதையில் தைரியமாக முன்னேறி செல்வது தான் இதன் நோக்கமாக உள்ளது. இது ஒவ்வொரு பெண்களுக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை அங்கீகாரம் என்றே கூறலாம். இக்கட்டுரையில் மகளிர் தினம் பற்றி நோக்கலாம்.
சமத்துவத்தின் அடிப்படை
இந்த சமுதாயத்தில் பல மோசமான வழக்கங்கள் இருந்து வந்துள்ளன. நிறவேறுபாடுகள், பிரதேச வாதம், இனவாதம், மதவாதம் போன்றே ஆணாதிக்க கோட்பாடுகள் இவை பெண்களை அடிமைகள் போல நடாத்தி வந்தன.
இதனால் பெண்கள் பல அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் இந்த சமூகத்திலே எதிர்கொண்டு வந்தார்கள். இந்த நடைமுறையானது இன்று பெருமளவு மாறியுள்ளது.
பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் அவர்களது சுதந்திரம் அவர்களுக்கு கிடைக்கும் படியாக சட்டநடைமுறைகள் இன்று அமுல்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் இந்த சமுதாயம் சரியான பாதையில் பயணிக்க துவங்கியுள்ளது எனலாம்.
மகளிரின் அதிகாரங்கள்
பெண்களுக்கு சுதந்திரமாக விரும்பிய இடத்தில் வாழவும், அவர்கள் விரும்பிய துறையை தெரிவு செய்து கல்வி கற்கவும், அத்தோடு தமக்கு விரும்பிய துறையில் வேலை செய்யவும், ஆண்களுக்கு நிகராக சம்பாதிக்கவும் உயர்வான அங்கீகாரம் இன்று வழங்கப்பட்டுள்ளது.
ஆண்களுக்கு கிடைக்க கூடிய அத்தனை அதிகாரங்களும் இன்று பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பழமையான கோட்பாடுகள் மற்றும் சமூக வழக்கங்களை காரணமாக கொண்டு பெண்களை அடக்குமுறை செய்வது இன்று வெகுவாக குறைந்துள்ளது.
சமூக வளர்ச்சியில் மகளிரின் பங்கு
இத்தகைய முற்போக்கான சமூகநல குறிகாட்டிகள் இன்றைய சமூக மட்டங்களில் அதிகரித்துள்ளமையால் பெண்கள் தங்கள் திறமைகளை அனைத்து துறைகளிலும் வெளிப்படுத்துகின்றனர்.
கல்வியில் உயர்வான இடங்களுக்கு செல்கின்றனர். விளையாட்டிலும் சாதனை படைக்கின்றனர். குடும்பங்களை தலைமைதாங்கி நடாத்துகின்றனர்.
நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு இன்று பல மடங்காக அதிகரித்துள்ளது. இவ்வாறு ஒரு மிக பெரிய சமூக மாற்றமானது இன்று உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சர்வதேச அங்கீகாரம்
எவ்வாறாக இருப்பினும் இன்றுவரை சில நாடுகளில் சில இடங்களில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு எதிராக பெண்கள் இன்று குரல் கொடுத்து வருகின்றனர்.
இவ்வாறான மகளிர் சமத்துவத்தை முழு உலகுக்கும் தெரியப்படுத்துவதாக உலக பெண் தலைவர்கள் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர்.
இதன் வெளிப்பாடாகவே மார்ச் 8ம் திகதி உலகமெங்கும் மகளிர் தினமானது கொண்டாடப்படுகின்றது. இது பாலின சமத்துவத்தை வலியுறுத்துவதாக வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
முடிவுரை
ஒரு முற்போக்கான சமூகம் அல்லது ஒரு நாடானது பெண்களுக்கான சிறந்த பாதுகாப்பு மற்றும் வள வாய்ப்புக்களை வழங்கி அவர்களை பாதுகாக்கின்றது.
அந்த வகையில் உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மகளிர் உரிமைகளை அதிகம் பாதுகாத்து வருகின்றன.
அதேசமயம் அபிவிருத்தி அடைந்து வருகின்ற மற்றும் அடையாத நாடுகள் பெண்கள் விவகாரங்களில் சற்று ஆபத்தான குறிகாட்டிகளை கொண்டு காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெளிவுபடுத்துகின்றன.
You May Also Like: