இன உணர்வற்று புழுக்கலாய் திராவிடத்துக்கு அடிமையாய் இருந்த தமிழ் இளம் பிள்ளைகளை தனது புரட்சி வரிகளால் தமிழ் தேசிய புலிகளாய் மாற்றிய “பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்” தொகுப்பை பார்க்கலாம்.
‘கனகசுப்புரத்தினம்’ என்ற இயற்பெயரினை கொண்ட இவர் ‘சுப்பிரமணிய பாரதியார்’ மீது கொண்ட பற்று காரணமாக தன்னுடைய பெயரினை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக்கொண்டார்.
தன் புரட்சி மிக்க எழுத்துக்களால் ‘புரட்சிக் கவிஞர்’ மற்றும் ‘பாவேந்தர்’ என்றும் பரவலாக அழைக்கப்பட்டார்.
- பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
- பாரதிதாசன் கவிதைகள்
- புரட்சி பாவலர் கவிதைகள்
- Pavendar Bharathidasan Kavithaigal
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
திராவிடர்கள் என்போர் தெலுங்கர்கள்
( தமிழர்கள் திராவிடர்கள் அல்ல )
ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம்
ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில்
வாழ்ந்தவர்களான “திரி-வடுகர்களே”
திராவிடர்கள்.
தூங்கும் புலியைப்
பறை கொண்டெழுப்பினோம்
தூய தமிழரைத்
தமிழ் கொண்டெழுப்பினோம்
தீங்குறு பகைவரை இவணின்றி
நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி
வேல்கொண்டு தாக்குவோம்.!
பண்ணப் பழகடா
பச்சைப் படுகொலை
பைந்தமிழர்க்கெல்லாம்
உயிரடா விடுதலை.
நறுக்குவோம் பகையின்வேர்
சிறுத்தைப் பெருங்கூட்டம்
நாம் தமிழர்.. நாம் தமிழர் என்று
முரசறைவாய் குறுக்கில் முளைத்திட்ட
அயலார் ஆட்சி கூண்டோடு
போயிற்றுக் கொட்டடா முரசம்.!
நறுமலர்ச் சோலையில் நரிபுக
விடமாட்டோம்
நாம் தமிழர்.. நாம் தமிழர் என்று
முரசறைவாய் வெறிகொண்டு புகுந்த
அயலார் ஆட்சி வேரற்றுப் போயிற்றுக்
கொட்டடா முரசம்.
அலைமா கடல் நிலம் வானிலுன்
அணிமாளிகை ரதமே அவை ஏறிடும்
விதமேயுன ததிகாரம் நிறுவுவாய்..
கொலைவாளினை எடடா
மிகு கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே
உயர் குணமேவிய தமிழா.!
பண்டைப்பெரும் புகழ் உடையாமோ?
இல்லையா?
பாருக்கு வீரத்தை சொன்னோமோ
இல்லையா..
எண்டிசை வாய்மையால்
ஆண்டோமோ இல்லையா?
எங்கட்கும் இங்குற்ற நரிகளால்
தொல்லையா?
நித்திரையில் இருக்கும் தமிழா..
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம்
கற்பித்ததே அறிவுக்கொவ்வா
அறுபது ஆண்டுகள்..
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு..
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே..
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடு மங்குதல்
கடல் வற்றோடும் பிறந்த
தமிழுடன் பிறந்தோம்
நாங்கள் ஆண்மைச் சிங்கத்தின்
கூட்டமென்றும் சிறியோர்க்கு
ஞாபகம் செய் முழங்கு சங்கே..
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு.!
Pavendar Bharathidasan Kavithaigal
புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை
வேரோடு சாய்ப்போம்
பொதுவுடமைக் கொள்கை
திசை எட்டும் சேர்ப்போம்.
தமிழ் உயர்ந்தால்
தமிழன் உயர்வான்.
தமிழ் தாழ்ந்தால்
தமிழன் வீழ்வான்.
உன் தாயை பழித்தவனை
தாய் தடுத்தால் விட்டுவிடு,
தமிழை பழித்தவனை
உன் தாய் தடுத்தாலும் விடாதே.
எங்கள் தமிழ் உயர்வென்று
நாம் சொல்லிச் சொல்லி
தலைமுறைகள் பலகழித்தோம்
குறைகளைந்தோ மில்லை.!
செய்யத் துணிபவனுக்கு,
எண்ணத் துணிபவனுக்குத்தான்
வெற்றி கிட்டுகிறது.
மழை என்பது இயற்கையின் கொடை.
அது விரும்பி அழைத்தாலும் வாராது.
புலம்பிப் போவென்றாலும் போகாது.