சிறுவர் உரிமைகள் கட்டுரை

siruvar urimai katturai in tamil

இந்த பதிவில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் “சிறுவர் உரிமைகள் கட்டுரை” பதிவை காணலாம்.

இன்றைய சமூகத்தில் பல முறையான உரிமை மீறல்கள் சிறுவர்களுக்கு எதிராக அரங்கேறுகின்றன.

சிறுவர் உரிமைகள் கட்டுரை

சிறுவர் உரிமைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சிறுவர்கள் என்போர்
  3. நாளைய தலைவர்கள்
  4. சிறுவர் உரிமை மீறல்கள்
  5. பாதுகாக்கும் நடைமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

சிறுவர்கள் என்பவர்கள் இந்த சமுதாயத்தினுடைய பெறுமதி வாய்ந்த சொத்துக்களாகும். இன்றைய சிறுவர்கள் தான் நாளை நாட்டின் தூண்களாக விளங்குவார்கள்.

எதிர்கால இந்தியாவை சிறுவர்களே வளமாக்குவார்கள் என்று கனவுகளின் நாயகன் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் குறிப்பிட்டார். சிறுவர்களுடைய முக்கியம் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சிறுவர்கள் என்போர்

சிறுவர்கள் எனப்படுபவர்கள் சட்டப்படி 18 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரையும் சிறுவர்கள் என்று அழைக்கலாம். இந்த பருவத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பாகவும் அன்பாகவும் பெற்றோர்களாலும் பாதுகாவலர்களாலும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய முறையான கல்வியானது வழங்கப்பட வேண்டும்.

நாளைய தலைவர்கள்

எமது சமூகத்தில் குழந்தைகளாக கள்ளங்கபடமற்று வெள்ளை மனதோடு விளையாடித்திரியும் குழந்தைகள் தான் இந்த தேசத்தை ஆளப்போகும் நாளைய தலைவர்களாக வருவார்கள்.

எனவே அவர்களை சரியான முறையில் பாதுகாத்து வளர்க்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களதும் ஆசிரியர்களதும் கடமையாகும்.

உலகின் தலைசிறந்த நாடுகள் தங்கள் நாட்டின் குழந்தைகளை மிகவும் சிறப்பாக பராமரிக்க பல வசதிகள் திட்டங்களை உருவாக்கி வைத்துள்ளன. அந்த குழந்தைகளின் கல்வி செலுவுகளை அரசே பொறுப்பேற்கின்றன.

சிறுவர் உரிமை மீறல்கள்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, பாதுகாப்பான வாழ்விடம், அன்பான குடும்பம், சிறந்த கல்வி மற்றும் பாதுகாப்பு மற்றும் மனதை மகிழ்விக்க கூடிய விளையாட்டு, அறிவை வளர்க்க கூடிய வாசிப்பு, கலை மற்றும் கலாச்சார விழுமியங்களை பின்பற்றும் உரிமைகள் என்பன சிறுவர்களுக்கு உண்டு.

இவற்றினை மீறி சிறுவர்களை தண்டித்தல், துன்புறுத்துதல், வேலைக்கு அமர்த்தல் போன்ற காரியங்கள் சிறுவர் உரிமை மீறல்களாக கருதப்பட்டு சட்ட ரீதியாக கடுமையான தண்டனைகள் நிறைவேற்றும் அதிகாரமானது நீதி துறைக்கு உள்ளது.

பாதுகாக்கும் நடைமுறைகள்

இன்றைய சமூகத்தில் பல முறையான உரிமை மீறல்கள் சிறுவர்களுக்கு எதிராக அரங்கேறுகின்றன. குடும்பங்களில் ஏற்படும் பிளவுகளால் குழந்தைகளை சரியாக கவனிக்காத பெற்றோர்கள் அவர்களது கல்வி மற்றும் எதிர்கால கனவுகளை பாழாக்கி விடுகின்றனர்.

போதை பொருட்கள் மற்றும் குற்ற செயல்கள் நிறைந்த ஒரு சமூகத்தினால் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துதல், போதை பொருள் பாவனைக்கு உட்படுத்துதல், பாலியல் துஷ்பிரயோகம் செய்தல், யுத்தங்களில் ஈடுபடுத்தல் இவை போன்ற கீழ்த்தரமான வேலைகளால் சிறுவர் உரிமைகள் மோசமாக பாதிக்கப்படுகின்றன.

இவற்றை தடுக்க வேண்டுமாயின் சட்டம் மிகவும் பலமாக நடைமுறைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

முடிவுரை

இன்றைய கால கட்டத்தில் சமூக மற்றும் குடும்ப பிரச்சனைகள் பல விதமாக அதிகரித்து வருகின்றன. இந்த பிரச்சனைகளில் அதிகம் பாதிக்கபடுவதும் சிறுவர்கள் தான் இதனால் தான் எமது நாட்டின் எதிர்காலமும் கேள்விக் குறியாக மாறிவருகின்றது.

இவற்றினை தடுக்க வேண்டுமானால் பெற்றோர்கள் தமது குழந்தைகளை ஒழுக்கம் நிறைந்த நல்ல பிரஜைகளாக வளர்க்கவும் அவர்களது உரிமைகளை பாதுகாக்கவும் வேண்டும் இல்லாவிட்டால் பாரிய சமூக பிரச்சனைகள் உருவாகும்.

You May Also Like:
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்
குடி குடியை கெடுக்கும் கட்டுரை