இந்த பதிவில் சிறந்த “ஆன்மீக பொன்மொழிகள்” பார்க்கலாம்.
இவை உங்கள் மனதில் சிறந்த எண்ணங்களை வளர்த்து மனதை தூய்மையான வழிகளில் சிந்தனை செய்ய வைக்கும்.
- ஆன்மீக பொன்மொழிகள்
- Aanmeega Ponmozhigal
- Aanmeega Quotes In Tamil
ஆன்மீக பொன்மொழிகள்
Aanmeega Ponmozhigal
1. தர்மம் வகுத்த வழியில் பணம் சம்பாதியுங்கள். வேதம் விதித்த வழியில் வாழ்க்கை நடத்துங்கள்.
2. தர்மத்தின் மீது சிறிதும் சந்தேகம் கொள்வது கூடாது. அதுவே ஒரு மனிதன் கல்வி கற்றதன் அடையாளம்.
3. பக்தி ஒளி இருக்கும் மனதில் அறியாமை என்னும் இருள் இருப்பதில்லை. பதவி சாதிக்க முடியாததைக் கூட பக்தியால் சாதிக்க முடியும்.
4. பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதே உண்மையான விரதம். பிறருக்குத் தீமை செய்யாத எந்தத் தொழிலும் உயர்வானதாகும்.
5. கடவுளுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்ப கட்டம். ஞானம் முதிரும் போது பயம் அன்பாக மாறுகிறது. பூரண அன்பு நம் மனதில் பரிணமிக்கும் போது, பயம் முற்றிலுமாக நம்மை விட்டு நீங்கிவிடுகிறது.
6. புலன்களின் ஆதிக்கத்தில் அடங்கி நடக்கும் வாழ்க்கை உலக சம்பந்தமானது. புலன்களை நம் ஆதிக்கத்தில் கொண்டுவந்து அடக்கி வாழும் வாழ்க்கை ஆன்மிக சம்பந்தமானது.
7. நல்ல எண்ணங்கள் நல்ல மனிதனை உருவாக்குகின்றன. கெட்ட எண்ணங்கள் மனிதனையே அழித்து விடுகின்றன. தர்மம் இருக்குமிடத்தில் எல்லா நன்மையும் உண்டாகும்.
8. கடவுளுக்கு படைத்த உணவை உண்பதால் மனத்தூய்மை ஏற்படும்.
Aanmeega Quotes In Tamil
9. பற்றற்றவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். உள்ளப்பற்றுகளை எல்லாம் துறந்துவிடுவதற்கு அப்பற்றைப்பற்ற வேண்டும்.
10. மக்கள் அனைவருமே நாராயணர்களே என்பதை அனுபவம் மூலம் உணர்ந்து கொள்வது தான் ஆன்மிகம்.
11. மக்களுக்கு நியாயத்தை உணர்த்துதல், அவர்களை நியாயத்திற்கு கட்டுப்படச் செய்தல் சத்தியாகிரகத்தின் ஓர் அங்கமாகும்.
12. பகவத்கீதை மற்றும் பாகவதத்தில் கூறியபடி, பக்தர்களான சாது- மகாத்மாக்கள் அனுஷ்டித்துக் காட்டிய பக்தி தருமமே பக்தி மார்க்கம்.
13. பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்யக்கூடாது. பிறர் நன்மைக்காகவே உழைக்கும் தன்மை நம்மிடையே பரவ வேண்டும்.
14. மனிதர்களுக்குள் சமத்துவம் மிக அவசியம். ஆனால், அன்பில்லாத சமத்துவத்தால் பகைதான் மிஞ்சும். இவ்வுலகில் ஆசையில்லாதவன் இறைவன் மட்டுமே. எனவே, அவனை நீங்கள் பின்தொடருங்கள். உள்ளத்திலுள்ள ஆசைகளைக் களைவதற்கு அவன் ஒருவனால் மட்டுமே முடியும்.
15. அராஜகச் செயல்கள் பெருகுவதற்கு காரணமே மன உறுதியின்மைதான். அஹிம்சை நெறியுடைய நாட்டிற்கு காவல்துறை தேவையில்லை. தொண்டர் படையே போதுமானது.
16. கொடுப்பதால் தான் செல்வம் பெருகுகிறது. ஈவதில் தான் மனிதனுக்கு இன்பம் பிறக்கிறது. தன்னுடையது என்ற உரிமையும் எண்ணமும் இதற்கு பாதகம் செய்கிறது.
17. சூரியன் எத்தகைய வேற்றுமையுமின்றி எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஒளி தருகிறது. அதுபோல் நாமும் யாரிடமும் வித்தியாசம் இல்லாமல் பழக வேண்டும்.
18. விலங்கு போல இழிவாக நடந்து கொள்ளாதே. மனிதப்பிறவியை முன்னேறுவதற்கான கருவியாக பயன்படுத்து.
19. கடவுளை நிச்சயமாகக் காணமுடியும். அதற்கு தேவை நம்பிக்கை.