ஆன்மீக சிந்தனைகள் தமிழ்

Aanmeega Sinthanaigal In Tamil

இந்த பதிவில் “ஆன்மீக சிந்தனைகள் தமிழ்” பார்க்கலாம்.

  • ஆன்மீக சிந்தனைகள் தமிழ்
  • ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்
  • Aanmeega Sinthanaigal In Tamil

ஆன்மீக சிந்தனைகள்

ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்

1. முதலில் கடவுளைத் தேடு. அதன்பின், உலகப் பொருட்களை தேடி செல்லலாம்.

2. எல்லா மனிதர்களிடத்திலும் கடவுள் இருக்கிறார். ஆனால், கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இருப்பதில்லை.

3. மனிதப்பிறவி கிடைப்பதற்கு அரிதானது. இதை பயன்படுத்தி கடவுளை அறிய முற்படுங்கள்.

4. பொறுமை மனிதர்கள் அனைவருக்கும் அவசியமானது. பொறுமையுள்ளவனுக்கு என்றுமே அழிவு உண்டாகாது.

5. அக்கறை உள்ளவனுக்கு அனைத்தும் எளிதாக கிடைக்கும்.

6. நம்பிக்கை ஆழமானால் கடலையும் தாண்டலாம்.

7. என் பணம், என் படிப்பு என்று சிறிதும் எண்ணாதே. நான் மக்களின் சேவகன், நான் பக்தன் என்று எண்ணிக் கொள்.

8. கண்களே உள்ளத்தின் வாசல். அதன் மூலம் உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

9. அவித்த நெல் முளைப்பதில்லை. பக்குவம் பெற்றவனுக்கு மறுபிறவி உண்டாவதில்லை.

10. விதியை வெல்லவும் அதன் பிடியிலிருந்து விலகி நிற்கவும் இரு வழிகளே உண்டு. ஆன்மா விதியால் கட்டுப்படுவதில்லை என அறிதல் ஒரு வழி. இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்து நிற்பது மற்றொருவழி.

11. கல்லைக் கட்டிக்கொண்டு கடலுக்குள் மூழ்கி முத்தை எடுத்து மகிழ்வதைப்போல, வைராக்கியத்தைக் கொண்டு இதயக்கடலுள் மூழ்கி ஆத்மா என்னும் முத்தை அடைதல் வேண்டும்.

ரமண மகரிஷியின் பொன்மொழிகள்

12. விதி என்பதென்ன? இறைவனைச் சரணடையுங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும். எனவே எல்லாப் பொறுப்புகளையும் இறைவனிடமே விட்டுவிடுங்கள். பின்னர் விதி உங்களை என்ன செய்யும்?

13. நீ உன்னை அறிந்துகொள். உலகவினை தன்னாலே நடைபெறும். நடத்துவோன் நடத்துகிறான். நீ சாட்சியாக இரு. நான் என்று கூறிக்கொண்டு எதிலும் முன் நிற்காதே.

14. உலகம் மெய் என்ற அபிப்ராயத்தை விட்டொழிக்காவிட்டால் மனம் எப்பொழுதும் உலகத்தையே நாடி நிற்கும்.

15. மகிழ்ச்சி என்பது மனிதனுக்குள்ளேயே இருப்பதுதானேயன்றி, வெளியேயுள்ள வேறெவ்விதப் புறக்காரணங்களாலும் வருவதன்று.

16. பிறருக்கு நன்மை செய்வதில் ஒருவர் ஈடுபட்டாலே போதும். அவர்களின் இதயத்தில் நன்மை வளரும். நன்மை, அன்பு, கடவுள் ஆகிய எல்லாம் ஒன்றே.

17. கடல் பொங்கினால் அற்ப ஜந்து தலையெடுக்க முடியாது. அதுபோல ஞான வெள்ளம் பொங்கினால் அற்பமான அகந்தை தோன்றாது.

18. நிராசையே ஞானம், நிராசை வேறு ஞானம் வேறன்று.

19. ஞானி உலகத்தைக் காண்கிறான். அஞ்ஞானி தான் உலகத்தை வெறுக்கிறான்.

20. மரணத்திற்கு பிறகு என்ன என்பதற்கு விடை தேட வேண்டாம். நிகழ்காலத்தில் வாழ்வோம். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும்.

Aanmeega Sinthanaigal In Tamil

21. கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற பிரச்னையைப் பற்றிச் சிந்திப்பது மனிதன் செய்யக்கூடாத ஒன்று. நாம் இந்த உலகத்தில் தோன்றியிருப்பதன் இலட்சியம், வாழ வேண்டுமென்பதற்காகவே யொழிய, கடவுள் இருக்கிறார் என்று வாதிடவோ, இல்லையென்று போராடவோ அன்று.

22. மதங்கள் உலகத்தில் இருக்க வேண்டியவதைதான். மதங்களால் தான் மக்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்க முடியும்.

23. அனைவரது ஆழ்மனங்களிலும் கடவுள் ஒரு பெருமைக்குரிய தந்தையாகவே போற்றி மதிக்கப்படுகிறார்.

24. கனவுகள் தெய்வீகச் செயல்பாடாகக் கருதப்பட்டதால் கனவுகளை உண்டாக்கும் காரணிகளைப் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக அறியும் அவசியம் ஏற்படவில்லை.

25. மனிதர்களுக்கு நன்மை செய்வதில் மனிதர்கள் அநேகமாகத் தெய்வங்களுக்கு இணையாக ஆகின்றனர். வேறு எதிலும் இப்படி ஆக முடியாது.

Read More Tamil Quotes.

கடவுள் பற்றிய பொன்மொழிகள்

தாயுமானவர் பொன்மொழிகள்