இந்த பதிவில் “பணம் தத்துவம் மற்றும் பொன்மொழிகள்” பார்க்கலாம்.
பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என பலராலும் கூறப்பட்டாலும் பணம் இல்லாவிட்டால் வாழ்வே இல்லை என்பது தான் இன்றைய நிலை.
- Panam Quotes In Tamil
- பணம் தத்துவம் மற்றும் பொன்மொழிகள்
பணம் தத்துவம் (தத்துவங்கள்)
இங்கே பணம் ஒன்றே வாழ்வின்
இலட்சியம் என்றால் அது
தவறான வழியில்தான்
தேடப்படும்.
பணத்திற்கு கடல் நீரின்
குணம் ஒன்று உண்டு.
கடல் நீரைக் குடிக்க குடிக்க
தாகம் அதிகமாகும்.
சிலர் பணத்தை வெறுப்பதாக
கூறுவார்கள். ஆனால்
அவர்கள் வெறுப்பது
பிறரிடம் உள்ள பணத்தை.
பணம் தலைகுனிந்து
பணியாற்றும் அல்லது
தலைக்கீழாக தள்ளிவிடும்.
பணத்தை சம்பாதிக்க வேண்டும்
என்பதற்காக ஒழுக்கத்தை
விற்று விடாதே.
பணத்தால் புத்தகத்தை வாங்கிவிட
முடியும் ஆனால்
அறிவை வாங்கிட முடியாது.
பணத்தின் உண்மையான
மதிப்பு பிறரிடம் கடன்
கேட்கும் போதுதான் தெரியும்.
பணத்தை அடிக்கடி குறை
கூறுவார்கள். ஆனால்
அதை யாரும் மறுப்பதில்லை.
பணத்தை வைத்திருப்பவனுக்கு
பயம். அது இல்லாதவனுக்கு
கவலை.
பணமும் சந்தோஷமும்
பரம விரோதிகள் ஒன்று இருக்கும்
இடத்தில் மற்றொன்று
இருப்பதில்லை.
பணக்காரனாய் சாக வேண்டும்
என்பதற்காக வறுமையில்
வாழ்வது வடிகட்டிய
முட்டாள்தனம்.
பணம் என்ற மூன்று எழுத்து
ஒற்றை வார்த்தையில் தான்
மனித வாழ்க்கை உருண்டு
கொண்டிருக்கிறது. உலகில்
உள்ள ஒவ்வொரு மனிதனும்
பணத்தை நோக்கிய
பயணத்தையே தொடர்கிறான்.
பிரசவம் முதல் வாழ்ந்து முடித்து
பிணமாகும் வரை பணம் தான்
நம்மையெல்லாம் ஆளும் அரசன்.
செல்வம் மிகுந்த ஒருவனை
மதிக்கின்ற இந்த உலகம்..
ஏழை மனிதன் வயிற்றில்
மிதிக்கிறது.
மனிதனின் மனித தன்மை
பணத்தில் கரைந்து
ஒன்றிப்போய்விட்டது.
மனிதனை தவிர மற்ற உயிர்கள்
எல்லாம் பசிக்காக மட்டும்
இரைதேடி உண்டு
வாழும் வாழ்க்கையை
மகிழ்ச்சியாக வாழ்கின்றன.
இந்த மனித இனம் மட்டும் தான்
பணம் தான் வாழ்க்கை என்று
பைத்தியம் பிடித்து அலைகின்றான்
அந்த பைத்தியக்கார கூட்டத்தில்
சிக்கி தவிப்போரில் நானும் ஒருவன்.
சூரியனும் நிலவும் உதிக்காமல்
போனால் கூட மண்ணில்
மனித இனம் வாழ்ந்திட வாய்ப்புண்டு.
ஆனால் பணமின்றி ஓரணுவும்
அசையாது என்பதே ஏற்கமுடியாத
உண்மை.
பணம் பற்றிய பொன்மொழிகள்
பலரின் ஆறாத காயங்களுக்கு
காரணம் மனங்கள் மட்டுமல்ல
பணமும் தான்.!
உயிர் இருக்கும் உறவுகளும்
நட்புகளும் கூட உயிரற்று
போகிறது உயிரில்லாத
இந்த பணத்தால்.
இந்த உலகில் உறவுகளை
பார்க்க மட்டுமல்ல..
கடவுளை பார்க்க கூட
பணம் தேவைப்படுகின்றது.
பயணம் இல்லாமல் கூட
வாழ்க்கை இருக்கலாம்
ஆனால்
பணம் இல்லாமல்
வாழ்க்கை இல்லை.
பணத்தால் கடிகாரத்தை
வாங்கி விட முடியும் ஆனால்
நேரத்தை வாங்க முடியாது
என்பதை என்றும் நினைவில்
வைத்திருங்கள்.
பணத்தால் மெத்தை கட்டில்களை
வாங்கி விட முடியும் ஆனால்
நிம்மதியான தூக்கத்தை வாங்கிவிட
முடியாது என்பதை நினைவில்
கொள்ளுங்கள்.
தாயின் கருவறையில் இருந்து
வெளிவரவும் பணம் இறுதியில்
கல்லறைக்கு போகவும் பணம்.
இந்த பணத்தால் அழிந்தது
மனிதர்களின் நல்ல குணம்.
வாழ்க்கையில் ஒருவித
மகிழ்ச்சிக்கு பணம்
ஒரு தேவை வாழ்க்கையின்
மகிழ்ச்சிக்கு பணம் மட்டுமே
தேவையில்லை.
பணம் சில சமயம் நண்பனை
எதிரியாகும்.. எதிரியை
நண்பனாக்கும்.
பெற்றுக்கொள்ள இரு கைகள்
நீண்டிருக்க
கொடுத்துச்செல்ல ஒரு கையும்
நீள்வதில்லை.
குணம் இல்லாதவருக்கு
இவ்வுலகில் இடமில்லை
என்பது சென்று..
பணமில்லாதவருக்கு இவ்வுலகில்
இடமில்லை என்றாகிவிட்டது.
பிறரை கெடுத்து வாழ்வதை விடுத்து..
பிறருக்கு கொடுத்து வாழ்வோம்
உயிருள்ள வரை.!
இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..
நல்ல சிந்தனைகள் – Sinthanai Thuligal