இந்த பதிவில் “நான் ஒரு ஆசிரியர் ஆனால் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டு அமைந்துள்ளன.
நான் ஒரு ஆசிரியர் ஆனால் கட்டுரை – 1
நான் ஒரு ஆசரியரானால் என்னை நம்பி வருகின்ற மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய அவர்களுக்கு கற்பிப்பேன். ஒரு மனிதனுடைய தலை எழுத்தை மாற்ற கூடியது கல்வி ஆகும். அதனை கற்பிக்கின்ற ஆசிரியர் தெய்வத்துக்கு நிகரானவர் ஆவார்.
ஆகவே நான் இந்த ஆசிரிய தொழிலுக்கு பெருமை சேர்க்கின்ற ஒரு ஆசிரியனாக மாணவர்களுக்கு கல்வி போதிப்பேன். பணம் சம்பாதிக்கின்ற ஒரு தொழிலாக ஆசிரிய தொழிலை பார்க்கின்ற இந்த காலகட்டத்தில் நான் ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்று கருதுகின்றேன்.
ஒரு ஏழை மாணவனுக்கு கல்வியை வழங்குவது ஒரு பாலைவனத்துக்கு மழை கிடைத்து பசுமை நிலமாகுவதற்கு சமனாகும் என்பதை நான் அறிவேன். என்னிடம் வருகின்ற மாணவர்களுடைய அறியாமை எனும் இருளை விரட்டி அவர்களுக்க நல்லறிவினை புகட்டி அவர்களை நல்வழிப்படுத்துவேன்.
தவறு செய்கின்ற மாணவர்களை கண்டித்து அவர்களை திருத்துவேன். மாணவர்களுக்கு கல்வியை விடவும் நான் ஒழுக்கத்தை அதிகம் போதிப்பேன். அவர்களிடத்து உண்மை, நேர்மை, கருணை, விட்டுக்கொடுப்பு, சகோதரத்துவம் போன்ற நற்பண்புகளை வளர்க்க உதவுவேன்.
மாணவர்களுக்கு தேவையான கல்வியினை பல வழிகளிலும் தேடி சேர்த்து அவர்களுக்கு நான் வழங்குவேன். என்னால் முடிந்த வரைக்கும் அவர்களுக்கு கல்வியை மட்டுமன்றி அவர்களுது வாழ்க்கைக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்குவேன்.
ஏன் எனில் இன்றைய உலகம் வெறுமனே கல்வியை மட்டும் சார்ந்தது அல்ல. தொழில்முறை, தொழில்நுட்பம் என வளர்ச்சி அடைந்து விட்டதனால் இந்த போட்டி மிகுந்த உலகில் எனது மாணவர்கள் வெற்றி அடையும் படியாக நான் அவர்களுக்கு கற்பிப்பேன்.
நான் ஒரு ஆசிரியர் ஆனால் கட்டுரை – 2
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கூறுவார்கள். அவ்வாறு வணக்கத்துக்கரிய இந்த சமூகத்தில் உயர்வாக மதிக்க கூடிய ஒரு ஆசிரியனாக நான் வந்தால் இந்த சமூகத்துக்கு தேவையான ஒழுக்கமுள்ள ஆளுமை நிறைந்த நேர்மையான நல்ல பிரஜைகளை நான் உருவாக்க முயல்வேன்.
என்னுடைய வாழ்வில் நான் அனுபவித்த துன்பங்கள் நிறைந்த சூழ்நிலைகள் போன்றவற்றை அவர்களும் அனுபவிக்காமல் இருக்க எனது அனுபவங்களை கொண்டு நான் அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன்.
எனது வாழ்வில் நான் எனது மாணவர்களுக்காக அவர்களை கரை சேர்க்கும் கலங்கரை விளக்கமாக நான் சேவை செய்வேன். ஒரு நல்ல ஆசிரியனாக அவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பேன்.
சமூகத்தில் தவறான மனிதர்கள் உருவாக காரணம் தவறான வழிநடத்தல்களும் கல்வி முறைகளும் தான் என்பதை நான் நன்கறிவேன். ஆகவே எனது மாணவர்கள் விருப்பத்துடன் கற்கும் வகையில் நான் இரசனையோடு அவர்களுக்கு கற்பிப்பேன்.
அவர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான உதாரணங்களை காட்டி கற்பிப்பதன் ஊடாக அவர்களை உத்வேகபடுத்த முடியும் என நான் நம்புகின்றேன்.
ஒரு மனிதன் வாழ்வில் பின் தங்குவதற்கு அவர்களது எதிர்மறையான எண்ணங்களும் தவறான பழக்க வழக்கங்களுமே காரணமாகும். அவற்றினை இல்லாமல் செய்து அவர்களை உற்சாகமடைய செய்யும் நல்ல கற்பித்தல் முறைகளை பயன்படுத்தி நான் அவர்களுக்கு கல்வி கற்பிப்பேன்.
எனது மாணவர்களுக்கு வாழ்வனைத்தும் கடமை உணர்வு, கடின உழைப்பு, மனவலிமை போன்ற விடயங்களது அவசியத்தை நான் அவர்களுக்கு கற்பிப்பேன். அவை தான் அவர்களை வாழ்வில் வெற்றி பெற செய்ய உதவும். இவ்வாறு என்னால் முடிந்த வரையில் ஒரு நல்ல ஆசிரயனாக எனது பணியை நான் செய்வேன்.
You May Also Like: