இந்த தொகுப்பு ‘நம்பிக்கை துரோகம் கவிதைகள் வரிகள்’ உள்ளடக்கியுள்ளது.
- நம்பிக்கை துரோகம் கவிதை வரிகள்
- தமிழ் நம்பிக்கை துரோகம் கவிதைகள்
- Nambikkai Throgam Quotes in Tamil
- Nambikkai Drogam Quotes in Tamil
நம்பிக்கை துரோகம் கவிதைகள் வரிகள்
இந்த உலகில் உன்னை அழிக்க
இன்னொருவருக்கு நீயே
கொடுக்கும் ஆயுதம் அன்பு..!
இந்த உலகில் உன்னை நீயே
ஏமாற்றிக் கொள்வது இன்னொருவர்
மீது வைக்கும் நம்பிக்கை..!
ஒரு பொய்யின் ஆழமே..
சிலரின் மேல் கொண்ட
நம்பிக்கையை அழிக்க
காரணம் ஆகின்றது..!
பாம்பு தன் தோலை எத்தனை
தடவை உரித்தாலும் அது
எப்போதுமே பாம்பு தான்..
சில மனிதர்களை உங்கள்
வாழ்க்கையில் அனுமதிக்கும்
முன் இதை நினைவில் கொள்ளுங்கள்..!
வாழ்க்கையில் அடிபட்ட
பின்பு தான் சிலரின் உண்மையான
முகத்தை புரிந்து கொள்ள முடிகிறது..!
மன்னித்து விடுங்கள் உங்களை
ஏமாற்றியவர்களை ஆனால்
மறந்தும் கூட நம்பி விடாதீர்கள்
மறுபடியும் அவர்களை..!
ஒரு முறை ஏமாற்றிய ஒருவர்
மறுமுறை ஏமாற்றாத போதும்
மனம் ஏனோ அவரை
உண்மை என ஏற்க மறுக்கின்றது..!
ஏமாற்றியவர்களுக்கு
நன்றி சொல்..! அவர்கள்
ஏமாற்றத்தை சொல்லி தரவில்லை
இனி ஏமாறாமல் இருக்க
அனுபவத்தை கற்று தந்து
இருக்கிறார்கள்..!
எத்தனை முறை நீ
ஏமாற்றப்பட்டாலும் ஒரு போதும்
அடுத்தவரை ஏமாற்ற
கற்றுக்கொள்ளாதே அவரவர்
பலன் அவரவர் அனுபவிப்பர்..
நேர்மைக்கு என்றுமே மரணமில்லை.
கவலையை விடு..!
தூரோகிகள் யார் தெரியுமா..?
துரோகத்தை செய்து விட்டு..
அந்த குற்ற உணர்வு சற்றும்
இல்லாமல் திரிபவர்கள் தான்..
மிகச் சிறந்த துரோகிகள்..!
துரோகத்தால் பலர் வீழ்ந்ததாய்
வரலாறுண்டு.. ஆனால்..
துரோகித்தவர் ஒருவர் கூட
நல்லா வாழ்ந்ததாய் எந்த
சரித்திரமும் இல்லை..!
வாழ்விற்கும் மரணத்திற்குமான
இடைவெளியை நிரப்ப
சில அன்பானவர்களும்..
பல அன்பற்றவர்களும்..
சில துரோகிகளும்..
பல எதிரிகளும்..
தேவைப்படுகிறார்கள்..!
இந்த உலகில் பல பேர் தோல்விக்கு
காரணம் அவர்களின்
நம்பிக்கைக்கு உரியவர்களால்
முதுகில் குத்தப்பட்டதே காரணம்..
நான் தோல்வியை
வெறுப்பவன் இல்லை..
துரோகத்தை வெறுப்பவன்..!
எவ்வளவு நம்பிக்கை வைத்தாலும்
துரோகம் முளைக்காத இடங்கள்
இரண்டு தான்.. ஒன்று தாயின் மடி..
இரண்டு இறைவன் அடி..!
யாரையும் நம்பி வாழாதே..!
தன் தேவைக்காக மட்டுமே
உன்னுடன் உறவு வைத்துக் கொள்ளும்
உலகம்..! தேவைகள் முடிந்ததும்
கண்டிப்பாக தூக்கி
எறியப்படுவாய்..!
இங்க கேட்டு அங்கு சொல்வதும்
அங்கு கேட்டு இங்கு சொல்வதும்
உறவுகளின் இயற்கை..!
பிறரை வேதனைப்படுத்தி
காணும் இன்பம் பிணத்தை
பார்த்து சிரிப்பதற்கு சமம்..!
ஒரு சில உறவுகளின் உண்மை
சுயரூபம் தெரிய வரும் போது தான்
புரிகிறது இவர்களையா உயிருக்கு
மேல் நம்பினோம் என்று..!
யாரையும் நம்ப முடியவில்லை
என்ற வார்த்தையில்
மறைந்திருக்கின்றது நெருங்கிய
உறவு ஒன்றின் துரோகம்..!
நம்மில் பலருக்கு எதிரிகளை
எதிர்க்கும் துணிவு கூட துரோகிகளை
எதிர்க்க இருப்பதில்லை..!
மேலும்