ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை

Jawaharlal Nehru Katturai In Tamil

இந்த பதிவில் இந்திய மண்ணின் மக்களால் பெரிதும் கொண்டாடப்படும் “ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. பிறப்பு
  3. நேருவின் படைப்புகள்
  4. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்
  5. நேருவின் இறப்பு
  6. முடிவுரை

முன்னுரை

இந்திய போராட்ட வரலாற்றிலே பல முன்னணித் தலைவர்கள் உள்ளார்கள். இவர்களுள் ஜவகர்லால் நேருவும் ஒருவராவர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமை இவரையே சாரும்.

நவீன இந்தியாவின் சிற்பி எனக் கருதப்படும் ஜவஹர்லால் நேரு இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல திட்டங்களை நிறைவேற்றினார். இவர் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பிறப்பு

ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் நவம்பர் 14 1889 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவரது தந்தை மோதிலால் நேரு ஆவார். தாயார் சுபருராணி அம்மையார். இவர்களுக்கு மூத்த மகனாக ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இங்கிலாந்தில் உள்ள ஹெரோவில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். 1907 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை எழுதி திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார்.

1910ல் இன்னர் டெம்பில் சட்டம் பயில பதிவு செய்து கொண்டார். 1912ல் தனது சட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.

நேருவின் படைப்புகள்

9 வருடங்கள் சிறையில் இருந்த நேரு சிறையில் இருந்த போதே நூல்களை எழுதினார். அதாவது 1934ல் “உலக வரலாற்றின் காட்சிகள்” என்னும் நூலையும் 1930ல் “சுய சரிதை” என்னும் நூலையும் “இந்தியாவின் கண்டுபிடிப்பு” என்னும் நூலையும் எழுதினார்.

இவை அனைத்தும் நேருவை எழுத்தாளனாக்கியது. அத்தோடு பெருமைகளையும் நற்பெயர்களையும் பெற்றுத்தந்தது.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்

இந்தியா சுதந்திரம் அடைந்தபின் முதலாவது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்த பெருமை ஜவஹர்லால் நேருவை சாரும். இவர் உயிருடன் இருக்கும் வரை 16 ஆண்டுகள் தொடர்ந்து பிரதம மந்திரியாக பதவியேற்றார்.

ஆகஸ்ட் 15 1947ல் புது டெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்குக் கிடைத்தது. இவரது ஆட்சிக்காலத்தில் இந்தியா முன்னேற்ற பாதையில் பயணித்தது.

சுதந்திர இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டத்தை 1951இல் இவர்தான் முதலில் உருவாக்கினார். இலவசக் கல்வித் திட்டத்தை உருவாக்கி நூற்றுக்கணக்கான பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை உருவாக்கினார்.

நேருவின் இறப்பு

1964 ஆம் ஆண்டு நேரு உடல்நிலை மோசமாகிறது. இதனால் காஷ்மீரில் தங்கி கட்டாய ஓய்வு எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

1964 ஆம் ஆண்டு மே27 ஆம் திகதி மாரடைப்பினால் மரணம் அடைந்தார். இவரது உடல் யமுனை நதிக்கரையில் உள்ள சாந்தி வனத்தில் தகனம் செய்யப்பட்டது.

முடிவுரை

இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்திய மண்ணின் புனித சொத்து என்றே கருத வேண்டும். நேரு தனது ஆட்சிக்காலத்தின் போது பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டார்.

இவரின் பெருமை இன்றுவரை பேசப்படுகின்றது எனின் இவரின் ஆட்சியின் சிறப்பும் சுதந்திர போராட்டத்தில் செய்ய தியாகமுமே காரணமாகும்.

You May Also Like:

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு

விடுதலைப் போரில் பகத்சிங்