கற்றவன் தலைவன் கல்லாதவன் கயவன் என்று கூறுவார்கள். இந்த பதிவில் “கல்வி கவிதைகள் வரிகள்” பற்றி பார்க்கலாம்.
- கல்வி கவிதைகள் வரிகள்
- கல்வி பற்றிய கவிதைகள்
- Kalvi Kavithaigal in Tamil
கல்வி கவிதை வரிகள்
1.இருளில் இருந்து வெளிச்சத்தை
நோக்கி பயணிப்பதே கல்வி.
2. கல்வி என்பது கடல்
அதை கற்றுக் கொடுப்பது
தொழில் அல்ல தவம்..
நம்பிக்கை கை விட்டாலும்
நீ கற்ற கல்வி என்றும்
உன்னை கை விடாது.
3. கல்வியின் நோக்கம்
வெற்று மனதை
திறந்த மனதாக
மாற்றுவதாகும்.
4. எப்படிக் கற்றுக்கொள்வது என்பது
வாழ்க்கையின் மிக முக்கியமான
திறமை.
5. கல்வியின் மிக உயர்ந்த
குணமே சகிப்புத்தன்மை.
6. கற்றலை நிறுத்தும் எவரும்
வயதானவராகி விடுவார்கள்..
இருபது வயதானாலும் என்பது
வயதானாலும்..
கற்பதை தொடரும் எவரும்
இளமையாக தான் இருப்பார்கள்..
உங்கள் மனதை இளமையாக
வைத்திருப்பது தான் வாழ்க்கையின்
மிகப்பெரிய ரகசியம்.
7. குறைவான கற்றல்
ஒரு ஆபத்தான விஷயம்.
8. கற்பதை நிறுத்தாதீர்கள்..
நீங்கள் தினமும்
ஒரு புதிய விஷயத்தை
கற்றுக்கொண்டால்..
உங்கள் வாழ்க்கையில் நிச்சயம்
உயர்ந்த நிலையை அடைவீர்கள்.
9. தொடர்ச்சியான கற்றல் என்பது
எந்தவொரு துறையிலும்
வெற்றிபெற குறைந்தபட்ச தேவை.
10. கல்வியின் அழகான விஷயம்
என்னவென்றால்..
கல்வியை உங்களிடமிருந்து
யாரும் பறிக்க முடியாது.
11. நாம் கற்கவில்லை..
நாம் கற்றல் என்பது அழைப்பது
நினைவுகூரும் செயல் மட்டுமே.
12. கற்றலின் போது பிழைகள்
மற்றும் தோல்விகள் இல்லாமல்
கல்வி இல்லை.
Kalvi Kavithaigal in Tamil
13. கல்விச்சாலை ஒன்றை திறப்பவன்
சிறைச்சாலை ஒன்றை மூடுபவன்.
14. சிறந்த கல்வியின் வெற்றி என்பது
எதையும் கோபப்படாமலும்..
தன்னம்பிக்கையை இழக்காமலும்
ஒரு செயலை செய்து முடிக்கும் திறன்.
15. மனிதர்களிடம் இருந்து
திருட முடியாத மிகப்பெரிய
சொத்து கல்வி.
16. ஒழுக்கம் இல்லாத கல்வியால்
எந்த பயனும் இல்லை.
17. ஒரு மனிதனை பெரிய பணக்காரனாக
மாற்றுவது சிறந்த கல்வி அல்ல..
அவனை நல்ல மனிதனாக மாற்றுவதே
உண்மையான கல்வி.
18. கல்வி ஒன்றே தாழ்ந்து கிடக்கும்
மக்களை மேலே உயர்த்தும்.
19. கற்றபடி வாழ்க்கையை வாழ்ந்தால்
கல்வி உன்னை சிறந்த முறையில்
வாழ்க்கையில் உயர்த்தும்.
20. கல்வி எனும் வித்து
அழிக்க முடியாத சொத்து..
அள்ள முடியாத முத்து.
21. அள்ள அள்ள குறையாதது..
தெள்ள தெள்ள தெளிவது..
சொல்ல சொல்ல புளிக்காதது..
மெல்ல மெல்ல திகட்டாதது கல்வி.
22. கல்வி இல்லையேல்
காரியம் இல்லை..
காரியம் இல்லையேல்
ஊதியம் இல்லை..
ஊதியம் இல்லையேல்
வாழ்க்கை சாத்தியம் இல்லை.
23. கல்வியால் வளர்வது மதி..
மதியால் வளர்வது திறன்..
அந்த திறனால் வளர்வது கலை..
அந்த கலையால் வளர்வது ஆற்றல்.
24. விதியை மதியால் வெல்லலாம் என்று
நம் முன்னோர்கள் கூறியது
வெறும் வார்த்தை அல்ல..
வாழ்க்கை அனுபவம்.
25. கற்றவன் வாழ்வு வெளிச்சம்..
கல்லாதவன் வாழ்வு இருள்..
இதை கூறுகின்றது உலகியல்.
மேலும் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..
தமிழ் மோட்டிவேஷனல் Quotes: Motivational Tamil