கக்கன் வாழ்க்கை வரலாறு

Kakkan History In Tamil

இந்த பதிவில் “கக்கன் வாழ்க்கை வரலாறு” கட்டுரை பதிவை காணலாம்.

அரசியலில் நேர்மை எளிமை என்பது இன்று வியப்பான ஒன்றாகவும் அரிதான ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது. எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டான அரசியல் தலைவராக பெருந்தலைவர் காமராசர் பார்க்கப்படுகின்றார். அந்த காமராசர் வரிசையில் கக்கனும் ஒருவராவார்.

கக்கன் வாழ்க்கை வரலாறு

அறிமுகம்

தமிழகம் கண்டெடுத்த தூய்மை தலைவன் கக்கன் ஆவார். அப்பளுக்கற்ற அரசியல் செய்த நேர்மையான அரசியலின் அடையாளம். என்றும் தமிழகமே கொண்டாடும் தியாகி ஆவார்.

இவர் ஓர் விடுதலைப் போராட்ட வீரன்⸴ இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பன்முகத் தன்மையை கொண்டவர். அரசியலில் பல பதவிகளை வகித்தாலும் எளிமையாக வாழ்ந்து மறைந்த காமராசர் போன்ற தலைவர்களுள் கக்கனும் ஒருவராவார்.

பெயர்:பி. கக்கன்
பிறப்பு:ஜூன் 18, 1908 (தும்பைப்பட்டி)
பெற்றோர்:பூசாரி கக்கன் (தந்தை) – குப்பி (தாய்)
துணைவியார்:சுவர்ணம் பார்வதி
பணி:அரசியல்
அரசியல் கட்சி:காங்கிரஸ்
இறப்பு:23 டிசம்பர்,1981

தொடக்க வாழ்க்கை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி எனும் கிராமத்தில் பூசாரி கக்கன்⸴ குப்பி தம்பதியினருக்கு 1909ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் திகதி மூத்த மகனாகப் பிறந்தார். இவர் உடன்பிறந்தவர்கள் 5 பேராவர்.

இவரது தந்தையார் திரு கக்கன் அவர்கள் கோயில் அர்ச்சகராக (பூசாரியாகப்) பணி புரிந்தார். தொடக்கக் கல்வியை வேலூரில் பயின்றார். படிப்பில் இவருக்கு ஆர்வம் இருந்தாலும் வறுமை காரணமாக படிப்பை மேற்கொண்டு தொடர முடியாத சூழல் உருவானது.

இதனால் பள்ளியில் இருந்து வெளியேறினார். அப்போது வயது 12ஆக இருந்தது. குடும்ப வறுமையை நீக்கும் முயற்சியாக படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு பண்ணையில் வேலைக்குச் சேர்ந்தார். இருப்பினும் படிப்பில் ஆர்வம் கொண்டவராகவே இருந்தார்.

மகனின் கல்வி ஆர்வத்தைக் கண்ட தந்தை தன் வசம் இருந்த நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து கக்கனை மேற்படிப்பு படிக்க வைத்தார்.

1932ஆம் ஆண்டு பொதுவுடமை சிந்தனையாளர் ஜீவானந்தம் தலைமையில் மதுரையில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த சொர்னம் பார்வதியைத் திருமணம் செய்து கொண்டார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு

சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த காலகட்டத்தில் மாணவப் பருவத்தில் இருந்த கக்கனும் சுதந்திர வேட்கை கொண்டிருந்தார். இதனால் அப்போராட்டத்தில் ஈடுபாடு காட்ட விரும்பினார். காந்தியும் காங்கிரசும் தான் கக்கனுக்கான ஈர்ப்பு சக்திகளாக இருந்தன.

படிக்கும் நேரம் தவிர எஞ்சிய நேரங்களில் அரசியலில் ஆர்வம் காட்டினார். காந்தியும் காங்கிரசும் அறிவிக்கும் போராட்டங்களில் தவறாது பங்கேற்றார். இதன் காரணமாக மதுரைக்கு வரும் தலைவர்களுடன் அறிமுகமானார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் ஹரியனசேவா சங்கம் என்ற அமைப்பு இருந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதனால் கக்கனை ஹரியனசேவா சங்கத்தில் மூத்த காங்கிரஸ் தலைவராக வைத்தியநாதன் சேர்த்துவிட்டார்.

சுப்புராமன் என்ற காங்கிரஸ் தலைவர் காந்தி மதுரைக்கு வந்தபோது கக்கனுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அப்போது காந்திக்கு உதவியாக இருக்க சுப்பராமன் தேர்வு செய்தது கக்கனையாகும்.

தமிழகத்தில் பல இடங்களிலும் காந்திக்குத் துணையாகச் சென்று வந்தார். காந்தியுடன் பழகிய முதலான நாளிலிருந்து காங்கிரஸ் மீதான பற்றும் கட்சித் தொண்டின் மீதான ஆர்வமும் கக்கனுக்கு அதிகரித்தன.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலய தாழ்த்தப்பட்டவர் போராட்ட பிரவேசத்தை வைத்தியநாத ஐயர் நடத்தியபோது அந்தப் போராட்டத்தில் கக்கன் பங்கேற்று தாழ்த்தப்பட்டவர்களுடன் சேர்ந்து கோயிலுக்கு சென்றார்.

கட்சிப் பணியில் இவர் காட்டிய ஆர்வத்தின் காரணமாக 1940 ஆம் ஆண்டு மதுரை மேலூர் வட்டார காங்கிரஸ் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதான் காங்கிரஸில் வகித்த முதல் பணியாகும்.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோகித்த போது பிரிட்டிஷ் அரசு கக்கனை கைது செய்தது. 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதுவே இவரின் முதல் சிறைவாசம் ஆகும்.

1952 முதல் 1957 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக பதவி வகித்தார். 1950 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.

இந்நிலையில் 1957ஆம் ஆண்டு ஏப்ரல் 13ல் கக்கன் அவர்கள் பொதுப்பணித்துறை⸴ ஆதிதிராவிடர் நல்வாழ்வு பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளில் அமைச்சராக பொறுப்பேற்றார். 1962 இல் முதல் வணிக ஆலோசகர் குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து 1963ல் மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று 1961 வரை பணியாற்றினார்.

சுதந்திரப் போராட்டத்தில் கக்கன் ஆற்றிய பணிகள்

சுதந்திர போராட்டத்தில் தீவிரம் காட்டிய கக்கன் தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் காந்தி அழைப்பு விடுத்தபோது அதனை ஏற்றுக்கொண்ட தமிழர்களில் கக்கன் முக்கியமானவர். இப்போராட்டத்தின் காரணமாக பிரிட்டிஷ் அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்த சிறைவாசத்தின் பின்னர் கக்கனுக்கு கட்சியில் பதவி உயர்வு கிடைத்தது. 1942இல் காந்தியால் அறிவிக்கப்பட்ட போராட்டம் வெள்ளையனே வெளியேறு போராட்டமாகும். சுதந்திர வேட்கை மிகுந்த அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற கக்கனைக் கைது செய்ய காவல்துறை முயற்சி செய்தது. இதன் காரணமாகத் தலைமறைவாக இருந்தார்.

தலைமறைவாக இருந்த போதும் போராட்டத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். சில சமயங்களில் பெண் வேடமிட்டு உலாவினார். இவரை கைது செய்தால் இவர் இருக்கும் பகுதியில் போராட்டத்திற்கான வீரியம் குறையும் என கருதிய காவல்துறை தேடுதலைத் தீவிரப்படுத்தி அவரைக் கைது செய்தது.

இதன்பின் போராட்ட தலைவர்களின் தகவல்களை இவரிடம் காவல்துறை கேட்டது. ஆனால் கக்கன் அதனைக் கூற மறுத்துவிட்டார். இதனால் கக்கனின் மனைவியை அழைத்து வந்து மனைவி முன்னிலையில் கக்கனை அடித்து துன்புறுத்தினர்.

ஆனாலும் சுதந்திர வேட்கை கொண்ட கக்கனிடமிருந்து எந்தத் துப்பையும் பெறமுடியவில்லை. ஆத்திரமடைந்த பிரிட்டிஷ் அரசு அலிப்பூர் சிறையில் கக்கனை அடைத்தது. கேப்பைக்கூழ் குடித்தும்⸴ மூட்டைப் பூச்சிகளுக்கு மத்தியில் படுத்துறங்கியும் 18 மாதங்கள் கடும் சிறைவாசம் அனுபவித்தார்.

தொடர்ச்சியாக நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தின் பலனாக 1948 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் கிடைத்தது⸴ பிரிட்டிஷ் இந்தியா சுதந்திர இந்தியாவாக பரிணாம வளர்ச்சி பெற்றது.

இறப்பு

முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட கக்கன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் தனியார் மருத்துவமனைக்கு பணம் செலுத்த முடியாத காரணத்தால் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக் குறைவால் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எளிமையின் சின்னமாகத் திகழ்ந்தவரும் மக்கள் பணியாற்றியவருமான கக்கன் அவர்கள் 1981ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாள் தனது 73-ஆம் வயதில் காலமானார்.

கௌரவிப்புக்கள்

இவரின் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999ஆம் ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.

தமிழக அரசு சார்பில் மதுரையில் முழு உருவ வெண்கல சிலை மற்றும் கக்கனின் சொந்த ஊரான தும்பைப்பட்டியில் தியாக சீலர் கக்கன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டி 13.02.2001 அன்று திறந்து வைக்கப்பட்டது.

You May Also Like:

விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி