அறம் செய்ய விரும்பு கட்டுரை

Aram Seiya Virumbu Katturai In Tamil

இந்த பதிவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அவ்வை பாட்டி சொல்லி சென்ற அறம் செய்ய விரும்பு கட்டுரை பதிவை காணலாம்.

அறம் என்பதற்கு தானம் என்பது மட்டும் பொருள் அல்ல. அற வழியில் நிற்றல், ஒழுங்கான தர்ம வழியில் செல்லுதல் என்று பொருள்.

  • அறம் செய்ய விரும்பு
  • Aram Seiya Virumbu Katturai In Tamil
முயற்சி திருவினையாக்கும் கட்டுரை

அறம் செய்ய விரும்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. அறம் எனப்படுவது
  3. தர்மம் தலைகாக்கும்
  4. அதர்மம் தலைதூக்கம் தற்காலம்
  5. முடிவுரை

முன்னுரை

மனித வாழ்வில் அறம் செய்வது பெரும் பாக்கியமாகும். அறம் செய்ய விரும்புதல் எனும் கருத்தியல் அடுத்தவர்க்கு கொடுத்தல் மற்றும் நல்ல விடயங்களில் ஈடுபடுதல் என்பது பொருள் ஆகும்.

நாம் இப்பிறவியில் ஆற்றும் அறச்செயல்கள் எமக்கு மறுமையில் துணைநிற்கும் என்பது இறை நம்பிக்கை. இதனை திருவள்ளுவர் அறத்துப்பாலில் “ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்” என்று பாடுகிறார்.

அறம் செய்ய விரும்புபவர்கள் இவ்வுலகில் கொடுப்பதனால் கிடைக்கும் இன்பத்தை அடைவார்கள். மற்றையவர்கள் அச்செல்வத்தை இழந்து துன்பம் அடைவார்கள் என்பது பொருள்.

இக்கட்டுரையில் அறம் எனப்படுவது, தர்மம் தலைகாக்கும், அதர்மம் தலைதூக்கும் தற்காலம் அழிவே அதன் விளைவு ஆகிய விடயங்கள் நோக்கப்படுகின்றன.

அறம் எனப்படுவது

அறம் எனப்படுவது யாதெனில் “அறு” என்ற வினா அடியில் இருந்து தோன்றியதே அறம் ஆகும். மனிதனொருவன் தனக்கென வரையறுத்து கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுப்பே அறம் எனப்படுகிறது.

பிறவியில் மனிதனை தொற்றி கொண்ட தீவினைகளை அறுத்தெறிவதே அறம் எனவும் கூறலாம்.

அறம் என்பதற்கு திருவள்ளுவர் வரைவிலக்கண படுத்துகையில் “அழுக்காறு அவாவெகுழி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்” என்கிறார்.

அதாவது அடுத்தவர்களை துன்பமடைய செய்யும் துஷ்ட எண்ணம், பேராசை, அவச்சொல் பேசுதல் இவைபோன்ற தீய குணங்களை ஒழிப்பது தான் அறம் என்கிறார்.

அறத்தினை எம்மால் செய்யமுடியாது போனாலும் அறம் செய்ய விரும்ப வேண்டும் என்பதனையே ஒளவையார் “அறம் செய்ய விரும்பு” என்று ஆத்தி சூடியில் தெரிவித்துள்ளார்.

மனதில் எழும் தீய எண்ணங்களை இல்லாது ஒழிக்க ஒருவன் முயல்வானே ஆனால் அதுவே அற வாழ்வு எனலாம்.

தர்மம் தலைகாக்கும்

நாம் செய்கின்ற புண்ணிய செயல்களுக்கு ஏற்ப எமது வாழ்வில் உயர்வு வரும் என்பது உண்மை இதனால் தான் “இட்டு கெட்டவர் யாரும் இல்லை” என்று ஒரு பழமொழி தமிழில் வழங்கப்படுகிறது.

கொடுத்தார்க்கு குறையில்லை” என்பது போல் நன்னீர் ஊற்றுள்ள ஒரு கிணறு எவ்வாறு நீரை அள்ள அள்ள குளிர்ச்சியும் தெளிவும் பெறுகிறதோ அது போல நாம் அறம் செய்ய தலைப்படுவதனாலே நம் வாழ்வும் அர்த்தப்படும்.

மகாபாரதத்திலே கர்ணன் கொடைக்கு இலக்கணமானவன் இரப்பவர்ற்கு தன்னுயிரையும் தானமாய் அழிக்கம் தாராள மனம் கொண்டவனாகையால் தான் என்றைக்கும் மங்காத புகழ் கொண்டவனாய் விளங்குகிறான்.

“கெட்டாலும் வள்ளல் கரம் எப்போதும் வீழாதே” எனும் அளவிற்கு அறம் செய்தல் இம்மைக்கும் மறுமைக்கும் புகழ் சேர்ப்பதாய் அமையும்.

அதர்மம் தலைதூக்கும் காலம்

இன்று மனிதர்கள் அறம் செய்ய விரும்புவதில்லை நல்வழியில் நடப்பவர்கள் சமூகத்தில் குறைந்துள்ளதோடு அதர்மமும் தீமைகளும் அநியாயமும் இன்று அதிகரித்துள்ளது.

நேர்மையாக வாழ்பவர்களை ஏளனமாகவும் வாழ தெரியாதவர்கள் எனும் பார்வையில் சமூகம் பார்க்கும் விசித்திரம் இன்றைக்கு இருக்கிறது.

தவறுகளை செய்தும் தவறான வழிகளில் தான் இன்றைக்கு உழைத்து பலரும் சதிபடைத்தவர்களாய் வாழ்கின்றனர். இது பலபேரின் கண்ணீருக்கும் இறப்புக்கும் காரணமாக அமைகிறது.

இந்த நிலையை தட்டி கேட்பவர்களும் போராடுபவர்களும் மேலும் மேலும் துன்பமடைய செய்யப்பட்டு தோல்வியடைய செய்யபடுகின்றனர்.

ஏனென்றால் இன்று அறம் செய்பவர்களை விட அநியாயம் செய்பவர்கள் அதிகரித்து விட்டனர் என்பது வேதனைக்குரிய உண்மையாகும்.

முடிவுரை

கொடுக்கின்றதும் பிறரை வாழவைக்க வேண்டும் என்கின்ற எண்ணம் பலமாக இருந்தால் அது அவர்கள் இறந்த பின்னும் நிலைநின்று நிறைவேறும்.

எனவே இன்னா செய்வாரை பொறுத்து நாமாவது அறம் செய்ய தலைப்படுவோம். நடப்பவை நடக்கட்டும் என்றேனும் இந்த உண்மையை உலகம் புரிந்துகொள்ளும்.

தவறான செயல்கள் அழிவை உண்டாக்குவது நிச்சயம். உண்மை பேசுதல் நெறியாக வாழ்தல் அடுத்தவருக்கும் கொடுத்தல் ஆகிய எல்லாம் அடங்கிய ஓரே வார்த்தையான அறத்தை செய்வோம் இன்புற்று வாழ்வோம்.

You May Also Like:

ஓதுவது ஒழியேல் கட்டுரை

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் கட்டுரை