விவசாயம் காப்போம் கவிதை

Vivasayam Kappom Kavithai In Tamil

உலகில் உள்ள அனைத்து விவசாயிகளுக்குமான “விவசாயம் காப்போம் கவிதை” தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.

மீட்டெடுக்க வேண்டும் விவசாயத்தை விரைந்து வாருங்கள்.

  • விவசாயம் காப்போம் கவிதைகள்
  • விவசாயம் கவிதை வரிகள்
  • விவசாயி கவிதை வரிகள்
  • Vivasayam Kappom Kavithai In Tamil

விவசாயம் காப்போம் கவிதை

விவசாயம் நம் இதயம்
விவசாயிகள் நம் தெய்வம்..
சிற்பங்கள் அழிந்து விட்டால்
கோவிலுக்கு சிறப்பில்லை..
சிற்பிகளே அழிந்து விட்டால்
கோவிலுக்கு பிறப்பில்லை..
விவசாயம் அழிந்து விட்டால்
உண்ண கூட வழியில்லை..
விவசாயி அழிந்து விட்டால்
வருந்தி பின் பயனில்லை.

சினிமா பார்ப்பவர்கள் எல்லாம்
சினிமாவில் நடிக்க ஆசைப்படுவார்கள்..
ஆனால் சோறு சாப்பிடும் நாமெல்லாம்
விவசாயம் செய்ய ஆசைப்படுவதில்லை.

விவசாயி சேற்றில்
கால் வைத்தால் தான்
நாம் அனைவரும் சோற்றில்
கை வைக்க முடியும்.

தான் உழைத்த பணத்தை வங்கியில்
போடாமல் உன் உணவுக்காக
மண்ணில் போடுகிறான் விவசாயி.!
விவசாயத்தை துறந்த நாடும்
விவசாயியை மறந்த நாடும்
ஒருபோதும் உருப்பட முடியாது.

நான் என்னதான் பட்டம்
படித்திருந்தாலும் என் அப்பாவின்
வியர்வை என் இரத்தத்தில்
கலந்ததாலோ என்னவோ
தெரியவில்லை..
விவசாயத்தை விட்டுக்கொடுக்க
முடியவில்லை.

போலியான மருத்துவர்..
போலியான பொறியாளர்..
என்று கேள்விப்பட்டிருப்போம்
ஆனால் எங்கேயும்
“போலியான விவசாயி” என்று
கேள்விப்பட்டதில்லை. ஏனென்றால்
விவசாயிகளுக்கு போலியாக
இருக்கவும் தெரியாது..
போலியாக நடிக்கவும் தெரியாது.

பணம் இருந்தும் பட்டினி இருக்கும்
நாள் வரும்.. அப்போது தான்
விவசாயிகளின் அருமை உணர்வீர்கள்.

காட்டில் வேலை செய்பவனை
கேவலமாகவும்.. கணினியில் வேலை
செய்பவனை கௌரவமாகவும்
நினைப்பவர்களுக்கு தெரியவில்லை..
“அரிசியை” இன்டெர்நெட்டில்
டவுன்லோட் செய்ய முடியாது என்று.!

கால்வயிறு கஞ்சி குடித்துவிட்டு
இவர்கள் விவசாயம் செய்வதால்தான்..
நீ மூன்று வேலையும் சுடு சோறு
சாப்பிடுகிறாய் என்பதை
மறந்து விடாதே.!

Vivasayam Kappom Kavithai In Tamil

தகுதி பார்க்கும் மக்களே..
விவசாயிகளின் கால்பட்ட
அரிசியை தான் கழுவி உண்கிறீர்கள்
என்பதை மறந்து விட வேண்டாம்.

தான் உழைத்த பணத்தை
வங்கியில் போடாமல்..
உன் உணவுக்காக மண்ணில்
போடுகிறான் விவசாயி.

படித்தால் தான் வேலை,
கை நிறைய சம்பளம் என்று
சொல்லித்தரும் சமூகம்
விதைத்தால் தான் சோறு என்று
சொல்லித்தர மறந்து விட்டது..
அதனால் தான் விவசாயம்
அழிந்து கொண்டிருக்கிறது..
விவசாயம் காப்போம்.!

ஒருநாள் அரசனும் ஆண்டி ஆவான்,
வரும் நாள் உழவனும் அரசன் ஆவான்..
வீழ்வது நாமாக இருந்தாலும்
வெல்வது விவசாயமாக இருக்கட்டும்.!

உழைக்கும் எண்ணமோ உயர்வு தரும்..
உழவன் எண்ணம்
நமக்கு உணவு தரும்..
விவசாயம் காப்போம்.!

உழவு செய்ய தெரிந்திருந்த
விவசாயிக்கு ஊழல்
செய்ய தெரிந்திருந்தால் இன்று
அவனும் மதிக்கப்பட்டிருப்பான்.

என் குலத்தவன் செய்த விவசாயம்
கல்லையும் கரைய செய்தது,
மண்ணையும் மணக்க செய்தது.

பசியை நீக்கியவள் தாய் என்றால்..
என் விவசாயியும் தாயே
விவசாயத்தை காப்போம்,
எதிர்காலத்தை மீட்போம்.

விவசாயத்தை காப்போம்..
விவசாயிகளை மதிப்போம்.!

மேலும் பதிவுகளை படியுங்கள்..

விவசாயம் பற்றிய பொன்மொழிகள்

கடவுள் பற்றிய பொன்மொழிகள்