இந்த பதிவில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் கட்டுரை” பதிவை காணலாம்.
திறமை உள்ள ஒரு போர்வீரன் தனக்கு தேவையான ஆயுதத்தை எதிரிகளிடம் இருந்தே பெற்று எதிரிகளை தோற்கடிக்கும் ஆற்றலை பெற்றிருப்பான்.
முயன்றால் நம்மால் முடியாதது என்று எதுவுமில்லை. வெற்றி தோல்விகளை கடந்து நாம் முதலில் முயற்சி செய்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
- வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
- Vallavanukku Pullum Aayudham Katturai In Tamil
வேற்றுமையில் ஒற்றுமை கட்டுரை
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வல்லமை என்பது வரலாற்றில் இருந்து.
- இயலாமை
- வலியது பிழைத்திருக்கும்
- முடிவுரை
முன்னுரை
வல்லமை பொருந்தியவர்களுக்கு புல் கூட ஒரு ஆயுதம் என்கிற பழமொழியானது பல கருத்துக்களை பதிவு செய்கிறது.
மனதில் வலிமை வேண்டும் என்று கூறுவார்கள். மனத்தில் உறுதி உடையவர்கள் தன்னம்பிக்கை அதிகம் வாய்க்கப்பெற்றவர்கள் தம்மிடம் உள்ளவற்றை கொண்டே எவ்வாறான காரியங்களையும் சாதித்து விடுவார்கள் என்பது இதன் பொருள்.
முயற்சி, பயிற்சி, வெற்றி என்கின்ற விடயத்தை நாம் இங்கு அவதானித்து கொள்ள முடியும். வலியன பிழைக்கும் என்பது விதி.
இக்கட்டுரையில் வல்லமை என்பது வரலாற்றில் இருந்து, இயலாமை மற்றும் வலியது பிழைக்கும் ஆகிய விடயங்கள் நோக்கப்படுகின்றன.
வல்லமை என்பது வரலாற்றில் இருந்து
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்கின்ற பழமொழி உருவாக இதிகாசங்களில் இரு கருத்தியல்கள் காணப்படுகின்றன.
அதில் ஒன்று தான் இராமாயணத்தில் சீதையினை காயப்படுத்திய காக்கை வடிவம் கொண்ட காக்காசுரனனை இராமர் புல்லை ஆயுதமாக்கி அவனின் ஒரு கண்ணை பறித்தமையும் பிற்காலத்தில் இவ்வாறு வழங்கல் ஆயிற்று இவ்வாறு வலிமை மிகுந்தவர்கள் எதனையும் சாதிப்பார்கள் என்பது கருத்தாகும்.
இயலாமை
“முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்” என்கிறார் திருவள்ளுவர்.
அதாவது தன்னை தாழ்வாக எண்ணி எந்த விடயங்களிலும் முயன்று பார்க்காமல் ஒருவன் விடுவானே ஆனால் அவன் துன்பத்தில் உளர நேரிடும் என்கிறார்.
முயன்று தோற்று போதல் கூட ஒருவகையில் அனுபவமாக இருக்கும் பல நாள் முயற்சி ஒரு நாள் வெற்றியளிக்கும் சவால்களையும் வலிகளையும் யார் தாங்கி முயற்சி செய்கின்றனரோ அவர்கள் வெற்றியடைவார்கள்.
இயலாமை எனப்படுவது மனதினை பொறுத்தது இயலும் என முயன்றால் இவ்வுலகில் சாத்தியமாகாகதது என்று எதுவும் இல்லை.
வலியது பிழைத்திருக்கும்
இவ்வுலகத்தில் எது வலிமையானதோ அதுவே பிழைக்கும் வலிமை இழந்தவர்களை வலிமையானவர்கள் அழித்து அவர்கள் வாழ்வது தான் இங்கு நியதி.
காடுகளை எடுத்து கொண்டால் சிங்கம் ஏனைய விலங்குகளை அது வேட்டையாடும் அதன் பிடியில் இருந்து தவறவேண்டுமானால் பிற விலங்குகள் போராடியாக வேண்டும் என்பது விதி.
அது போலதான் மனிதர்களில் எவர் ஒருவர் முயற்சி, கடின உழைப்பு, உயர்ந்த இலட்சியம் உடையவர்களாக இருக்கின்றனரோ அவர்களே வாழ்வில் சாதிக்க முடியும்.
எனவே ஒளவையார் அருளியது போல “உடலினை வலிமை செய்து மனதினை திடமாக்கி ரௌத்திரம் பழகுவோம்“.
முடிவுரை
“வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே” என்று பாடுகிறார் பாரதியார். வல்லமை கொண்டு நல் பதவிகள் வாய்க்கப்பெற்று நம்மையும் நம் சமுதாயத்தையும் தேசத்தையும் முன்னேற்ற நம் அனைவரும் ஒன்றுபட்டு போராடவேண்டும்.
சமூகத்தில் இன்று தலைதூக்கும் சமூக சீர்கேடுகளை தடுக்க வல்லமை மிக்க வாய்மையான கேள்வி கேட்கின்ற தலைமுறை உருவாக வேண்டும். அப்போது தான் இந்த தேசமும் இந்த மக்களும் நிம்மதியாக வாழ முடியும்.
You May Also Like: