இந்த தொகுப்பு “மனைவி கவிதை | Manaivi Kavithai in Tamil” பற்றியது.
- மனைவி கவிதை வரிகள்
- Manaivi Kavithai in Tamil
- கவிதை மனைவிக்கு
- கவிதை மனைவி
மனைவி கவிதை | Manaivi Kavithai in Tamil
கடவுளே என் வாழ்வு முடியும்
போது இவளையும் என்னுடன்
அழைத்துச் செல்லும் வரம் கொடு,
என்னை நம்பி வந்தவளை தனியே
விட்டுச் செல்ல எனக்கு மனமில்லை.
ஒரு ஆணுக்கு தன்னோட அம்மா
போல பாசம் காட்டும் மனைவி
கிடைத்தால்.. அவன் தான் இந்த
உலகின் மிகப் பெரிய அதிஷ்டசாலி..
அந்த அதிஷ்டம் எனக்கு
கிடைத்திருக்கின்றது.
சண்டை போட்ட அடுத்த நிமிடமே
வந்து மன்னிப்பு கேட்பதை விட,
மார்பில் சாய்ந்து… கோபமா..?
என கேட்கும் துணை தான்
வாழ்வின் வரம்.
எனக்கு என் தாய், தந்தை எவ்வளவு
முக்கியமோ அந்த அளவு எனக்காக
தன் குடும்பத்தை விட்டு வந்த என்
மனைவியும் முக்கியம்.
எவ்வளவு விலை உயர்ந்த
தலையணையாக இருந்தாலும்
என் அன்பு மனைவியின் மடிக்கு
ஈடாக முடியாது.
மனைவி கடவுள் தந்த வரம் தாய்
கடவுளுக்கு நிகரான வரம்..!
உன் மனதில் இடம் பிடித்து விட்டேன்
இனி மரணமும் திகைக்கும் ஒரு
உடலில் இரு உயிர்
வாழ்வதைக் கண்டு..!
மனைவியின் குறைகளுக்காக
மனதை குழப்பிக் கொள்ளாமல்..
அவளின் நிறைகளைக் கண்டு
இன்பம் கானுபவன் தான்
உண்மையான காதல் கணவன்.
மனைவி வீட்டில் இல்லை
நிம்மதி என்று நகைச்சுவையாக
கூறினாலும்.. வீட்டில் நுழைந்தவுடன்
மனைவியை தேடும் கண்களையும்
மனதையும் கட்டுப்படுத்த முடியாது.
தன் கணவனை சந்தோசமாக வைத்து
அவன் மகிழ்வதை பார்த்து ரசிக்கும்
மனைவி அமைவதெல்லாம் யாருக்கும்
கிடைக்காத வரம்.
யாரும் தன் முதல் காதலை
மறப்பதில்லை.. அப்படி முதல்
காதலை மறக்கும் அளவிற்கு ஒரு
பெண் மனைவியாக அமைந்தால்
அந்த ஆணை விட அதிஷ்டசாலி
யாரும் இருக்க முடியாது.
நான் அழகில்லை என்று நினைக்கும்
ஒவ்வொரு ஆணையும் அழகாகிறாள்
ஒரு பெண் மனைவியாக வந்த பின்பு.
தன் பிரசவ மயக்கம் தெளிந்ததும் ஒரு
பெண் முதலில் பார்க்க விரும்புவது
தன் முதல் குழந்தையாகிய அவள்
கணவனையே..!!
ஒரு பெண் மனைவியாக மாறும்
போது கணவனுக்காக பல
உறவாக மாறுகிறாள்.
தாயைப் போல அன்பு காட்ட
எனக்கு நீயும், தந்தையை போல
பாதுகாக்க உனக்கு நானும் கடைசி
வரை இருந்தால் போது வாழும்
போதே சொர்க்கம் தான்.
நொடிக்கு நொடி மூச்சுக் காற்றாய்
என் இதயத்தை உரசிச் செல்கிறது
உன் நினைவுகள்.
ஒரு பெண் பிள்ளைகளுக்கு
மட்டுமல்ல சிலவேளை தன்
கணவனுக்கும் தாயாகின்றாள்
என்பதை உன்னிடம் உணர்ந்தேன்.
மனைவி என்பவள் நம் வாழ்வின் பொக்கிஷம் இதை புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களால் மட்டுமே மனைவியின் மகத்துவத்தை உணர முடியும்.
மேலும்