இந்த பதிவில் “நெகிழி தீமைகள் கட்டுரை” பதிவை காணலாம்.
பயன்படுத்த கூடிய நன்னீரையும் மாசுபடுத்த கூடிய ஆபத்தான பொருளாக நெகிழி காணப்படுகின்றது.
நெகிழி தீமைகள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நெகிழி உருவாக்கம்
- நீர்மாசடைதல்
- மண் மாசடைதல்
- நெகிழி மேலாண்மை
- முடிவுரை
முன்னுரை
எமது அன்றாட வாழ்வில் தவிரக்க முடியாத ஒரு பாவனை பொருளாக நெகிழி இருந்து வருகின்றது. நாம் கையாளுகின்ற பொருட்கள் பாவிக்கின்ற தளபாடங்கள் பாத்திரங்கள் பொதி செய்கின்ற பைகள் என நாம் பாவிக்கின்ற நெகிழி பொருட்கள் ஏராளம் உள்ளன.
இவை எமக்கு அதிகம் உபயோகமாக இருந்தாலும் பின்னாளில் எமக்கே ஆபத்தாக முடிகின்றது.
இவை இலகுவில் மக்காது இதனால் பல சூழல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது. இக்கட்டுரையில் நெகிழியின் தீமைகள் தொடர்பாக நோக்குவோம்.
நெகிழி உருவாக்கம்
வருடம் தோறும் உலகில் 80 மில்லியன் தொன் பொலித்தீன் ஆனது உற்பத்தி செய்யப்படுகின்றது. “பொலி எதிலீன்” எனப்படும் இரசாயன பதார்த்தம் மூலமாகவே பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் என்பன உருவாக்கப்படுகின்றன.
இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் ஆயுதங்களை செய்ய நெகிழி முதன் முதலில் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மலிவான விலையில் பாவனை பொருட்களை உருவாக்க இது உதவுவதனால் உலகமெங்கும் அதிகம் பரவலாக பயன்படுத்தப்படுகின்றது.
நீர்மாசடைதல்
நெகிழி பொருட்களை பாவித்து விட்டு அதனை தூக்கி வீசுவதனால் அது நீர்நிலைகளை சென்றடைகின்றது. அங்குள்ள நீர்வாழ் உயிரினங்கள் உயிர் வாழ முடியாத அளவிற்கு அங்கு சேரந்து நீரின் தரத்தை கெடுக்கிறது.
உலக நாடுகள் தங்கள் பிளாஸ்ரிக் கழிவுகளை சமுத்திரங்களில் கொட்டுவதால் அதிகளவான நீர்வாழ் உயிரினங்கள் அழிவடைந்து வருகின்றன.
நகர பகுதிகளில் அதிக நெகிழி பொருட்கள் கால்வாய்களில் சென்று அடைப்பதனால் நீர் வழிந்தோட முடியாமல் பல நோய்கள் உருவாகவும் இது காரணமாக அமைகின்றது.
பயன்படுத்த கூடிய நன்னீரையும் மாசுபடுத்த கூடிய ஆபத்தான பொருளாக நெகிழி காணப்படுகின்றது.
மண் மாசடைதல்
அதிகளவான மக்கள் தாம் பாவித்து முடிந்த நெகிழி பொருட்களை வீதி ஓரங்களில் வீசுவதனால் அவை எப்படியோ நிலத்தில் நீண்டகாலம் தங்குகின்றன.
உக்கலடையாத இரசாயன பதார்த்தம் என்பதனால் நீணடகாலம் மண்ணில் காணப்படும் இவை மழை நீரை ஊடுவடிய விடாமல் தடுக்கும் மற்றும் தாவரங்களின் வேரை மண்ணிற்குள் ஊடுபுக விடாமல் செய்யும் இதனால் விவசாய நிலங்கள் கூட தரிசு நிலங்களாக மாறுகின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது.
மண் வளமிழந்தால் பயிர்ச்செய்கை வெகுவாக பாதிக்கப்படும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இந்த பாதகங்களை நெகிழி இன்று உருவாக்கி கொண்டிருக்கின்றது.
நெகிழி மேலாண்மை
பலவிதமான சூழல் சார்ந்த பிரச்சனைகளை நெகிழி ஏற்படுத்தி வருகின்றது. இவற்றினை நாம் தடுத்து நிறுத்தாவிடில் பாரிய பிரச்சனைகளை எதிர்காலங்களில் நாம் எதிர்கொள்ள நேரிடும் என சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
நெகிழி பொருட்களை மேலாண்மை செய்வதற்காக வளர்ந்த நாடுகள் மீள்சுழற்சி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. அவற்றை நாம் பின்பற்றலாம் அல்லது நெகிழி பொருட்களுக்கு தடை விதிக்கலாம்.
நெகிழி பொருட்களுக்கு மாறாக இயற்கை மூலப்பொருட்கள் மூலமாக உருவாக்கப்படுகின்ற பொருட்களை பாவிப்பது மிகவும் சிறந்த விடயமாகும்.
முடிவுரை
இன்றைய உலகம் எதிர்கொள்கின்ற மிகவும் பாரதூரமான பிரச்சனைகளில் நெகிழி சார் பிரச்சனைகள் முக்கியமானதாகும். இவை மிகவும் ஆபத்தானதும் கூட நெகிழி பொருட்களினால் உயிர்பல்வகைமை ஆனது மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றது.
மனிதர்கள் சிந்திக்காமல் செய்கின்ற செயல்கள் அனைவரதும் எதிர்காலத்தையும் கேள்வி குறியாக மாற்றி கொண்டிருக்கின்றது.
ஆகவே நெகிழி பொருட்களின் பாவனையை குறைப்போம் எமது சூழலை பாதுகாக்க எம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம்.
You May Also Like : |
---|
நெகிழி குப்பை இல்லாத எதிர்காலம் கட்டுரை |
உணவே மருந்து கட்டுரை |