இந்த பதிவில் “நான் ஒரு வானூர்தி ஆனால் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டுள்ளது.
நான் ஒரு வானூர்தி ஆனால் கட்டுரை – 1
நான் ஒரு வானூர்தி ஆனால் என்னுடைய கனவுகளுக்கு அப்பாற்பட்ட இந்த பரந்து விரிந்த அழகிய வானில் அழகாக பறந்து செல்வேன். இந்த அழகிய உலகத்தின் எந்தவொரு பகுதிக்கும் என்னால் பறந்து செல்ல முடியும். அதுவும் மிகுவும் விரைவாக காற்றை கிழித்து கொண்டு லாவகமாக பறந்து செல்லும் இந்த பறவைகள் போல நானும் வானில் பறப்பேன்.
பறக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இல்லை. இந்த முகில்களை உரசி கொண்டு பனியிலும் மழையிலும் நனைந்து இந்த அற்புதங்களை ரசித்து கொண்டு நான் பறப்பேன்.
தமது கனவு பயணங்களை மேற்கொள்பவர்களை சுமந்து கொண்டு நாடுகளுக்கு நாடு நான் பறந்து செல்வேன். மக்களுக்கு தேவையான பொருட்களையும் நான் சுமந்து செல்வேன்.
இயற்கையயை ரசிக்க, உலகமெங்கும் சென்று வேலை செய்ய மற்றும் வாழ்வதற்கும், கல்வி கற்பதற்கும் செல்கின்ற எத்தனையோ மனிதர்களை நான் சுமந்து செல்கின்றேன். அவர்களது வாழ்க்கையை நான் மாற்றி இருக்கின்றேன்.
இந்த உலகில் எத்தனையோ ஆச்சரியங்கள் இருக்கின்றன. வெவ்வேறுபட்ட மனிதர்கள் வாழ்கின்றார்கள். பல்வேறு கலாச்சாரங்கள் காணப்படுகின்றன. பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
மனிதர்கள் தமது வீட்டுக்குள் இருப்பதனால் இவற்றை காணும் வாய்ப்புக்கள் இல்லாமல் போய் விடுகின்றன. ஆனால் இவற்றை நான் சாத்தியமாக்கி காட்டியிருக்கின்றேன்.
எத்தனை அழகிய ஊர்கள் பிரமிப்பூட்டும் நகரங்கள் என நான் எல்லா இடங்களுக்கும் பறந்து செல்வேன். ஒரு வானூர்தியாக மனிதன் எட்ட நினைக்கின்ற கனவுகளை நான் சாத்தியமாக்கி காட்ட நான் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.
நான் ஒரு வானூர்தி ஆனால் கட்டுரை – 2
இந்த வாழ்வு எத்தனை வினோதங்கள் நிறைந்தது அதனை போல நிலையில்லாத இந்த வாழ்வை அழகாக்கி காட்ட வல்லது இந்த பயணங்கள் தான்.
தேங்கி நிற்கின்ற மனித உணர்வுகளை ஓட்டமடைய செய்ய கூடியது. பல புதிய அனுபவங்களை தந்து வாழ்வை புத்துணர்வடைய செய்ய கூடியதாகும்.
இந்த பயணங்களை இன்னும் ஒரு படி உயரச்செய்வதாக நான் இருப்பேன். ஆம் நான் ஒரு வானூர்தி ஆவேன்.
நான் தான் இன்று மனிதர்களது மிக வேகமான போக்குவரத்து சாதனமாக இருக்கின்றேன். முன்பெல்லாம் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு செல்ல பல நாட்கள் எடுத்தது. அதிகளவான மனித நேரம் வீணாக்கப்பட்டது.
ஆனால் நான் சில மணித்தியாலங்களில் எந்த நாடுகளுக்கும் சென்றடைய கூடியவாறு பறந்து செல்வேன். என்னில் பயணிக்கின்ற மக்களை பாதுகாப்பாகவும் சகல வசதிகளோடும் நான் சுமந்து செல்கின்றேன்.
ஆம் நான் ஒரு விஞ்ஞானத்தின் விந்தை. என்னை பாரத்து வியக்காத மனிதர்களே இல்லை. மனிதனது கண்டுபிடிப்புக்களில் நான் வியந்து பார்க்க கூடிய படைப்பாகும். நான் போக்குவரத்து துறையில் ஒரு பாரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறேன்.
மிகவும் விரைவாக இயங்கி கொண்டிருக்கின்ற இந்த உலகத்தில் எனது பங்கு மிகவும் அவசியமானதாகும். நான் ஒரு வானூர்தியானால் இந்த ஏழை எளிய மக்களையும் சுமந்து சென்று அவர்களது ஆசைகளையும் நிறைவேற்றுவேன்.
நான் மக்களுக்க பாதுகாப்பானதும் மகிழ்ச்சிகரமானதுமான பயண அனுபவத்தை வழங்குன்ற ஒரு சிறந்த வானூர்தியாக இருக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள் ஆகும்.
You May Also Like: