இந்த பதிவில் அமெரிக்காவில் பிறந்த மிகப்பெரிய கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான விஞ்ஞானி “தாமஸ் ஆல்வா எடிசன் பொன்மொழிகள்” தொகுப்பை காணலாம்.
- தாமஸ் ஆல்வா எடிசன் பொன்மொழிகள்
- Thomas Alva Edison Quotes In Tamil
தாமஸ் ஆல்வா எடிசன் பொன்மொழிகள்
1.என் முயற்சிகள் என்னைப் பல முறை கைவிட்டதுண்டு. ஆனால் நான் ஒரு முறைகூட என் முயற்ச்சியை கை விட்டதில்லை.!
2. சில சமயம் முட்டாளாய் காட்சியளிப்பது அறிவுள்ள செயல்.
3. வியாபாரத்தில் துணிவு தான் முதலாவது. பிறகு இரண்டாவது மூன்றாவது எல்லாம் அதுவேதான்.
4. வெற்றி என்பது என்ன? ஒரு சதவிகிதம் சிந்தனையும், தொண்ணூற்றோன்பது சதவிகித உழைப்பும் சேர்ந்ததுதான்.
5. பணிவு என்பது தாழ்மையின் சின்னமல்ல, அது உயர்ந்த பண்பின் அறிகுறி.
6. கவலைக்கு நிவாரணமாக, விஸ்கியைவிட, வியர்வையைச் சிந்தி உழைப்பது எவ்வளவோ மேல்.
7. வெற்றி என்பது ஒரு சதவிகித குறிக்கோள், 99 சதவிகித உழைப்பால் உருவாகக்கூடியது.
8. நான் தோல்வி அடையவில்லை, வெற்றியடைய முடியாத பத்தாயிரம் வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறேன்.
9. நட்பு நல் இன்பத்தைப் பெருக்கி, துன்பத்தைக் குறைக்கிறது.
Thomas Alva Edison Quotes In Tamil
10. நூல் நிலையம் இல்லாத வீடு உயிர் இல்லாத உடம்பு போன்றது. வீட்டிற்கு ஒரு நூலகம் தேவை, மனிதன் ஓய்வு நேரங்களில் நூல்களைப் படித்து அறிவைப் பெருக்க வேண்டும். தொழில் செய்து ஓய்ந்திருக்கும் போது அவனது உள்ளத்திற்கு கிளர்ச்சி தரக்கூடியது நூல்களே.
11. வியாபாரம் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஏமாற்று வேலை.
12. திருப்தியின்மை, ஏக்கம் ஆகிய இரண்டும் வளர்ச்சிக்கு அவசியமானவை.
13. மனிதரின் சங்கடங்களுக்கெல்லாம் செயல்புரியாமல் சோம்பியிருப்பது தான் முக்கிய காரணம்.
14. ஒரு செயலைச் சிறப்பாக செய்வதற்கு சிறந்த வழி, அதனை தேடிக்கண்டறிவதே.
15. மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் இல்லை, விடா முயற்சியினால்தான்.
16. ஒரு யோசனையின் மதிப்பு அதை பயன்படுத்துவதிலேயே இருக்கின்றது.