இந்த பதிவில் காடுகளின் பயன்கள் கட்டுரை பதிவை காணலாம்.
“காட்டின் வளமே நாட்டின் வளம்” , “காடழிந்தால் நாடழியும்” போன்ற பழமொழிகள் காட்டின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன.
உயிரங்கள் வாழ உயிர் காற்றை தருபவையாகவும், பூமியின் வெப்பத்தை குறைத்து மேகத்தை உருவாக்கி மழையை தருபவையாகவும் காடுகளே இருக்கின்றன.
- காடுகளின் பயன்கள்
- Kadukalin Payangal Katturai
உலக வெப்பமயமாதல் கட்டுரை
காடுகளின் பயன்கள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- காடுகளின் பரம்பல்
- காடுகளின் பயன்கள்
- காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்
- முடிவுரை
முன்னுரை
காட்டு வளமே நாட்டு வளம் காடழிந்தால் நாடழியும் என்பது ஆன்றோர் வாக்கு பூமியின் நிலப் பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு காடுகளால் சூழப்பட்டு இருக்க வேண்டும்.
காடுகள் வெறுமனே இட பரம்பலை மாத்திரம் கொண்டு காணப்படும் ஒரு வளம் அல்லாமல் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வாய்ப்புகளை வழங்கும் அதி உன்னத பசுமை நிறைந்த இயற்கை வளம் என்றால் அது மிகையாகாது.
இயற்கையின் கொடையாக காணப்படும் காடுகள் இன்று மானிட ஆதிக்க வாதத்தின் விளைவாக அழிவடைந்து செல்லும் போக்கு காணப்படுகின்றது.
ஆதலால் காடுகளின் பயன்கள் மற்றும் அழிவுகள் என்பவற்றினை இக்கட்டுரையில் நோக்கலாம்.
காடுகளின் பரம்பல்
இன்று உலகில் மிகப் பெரிய காடாக தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் காடு காணப்படுகின்றது.
பிமேரி ரஷ்யாவில் உள்ள மிகப் பெரிய காடு ஆகும். மியன்மார் வெப்ப மண்டல மழை காடுகள், ஆபிரிக்காவில் உள்ள கொங்கோ காடுகள், இலங்கை சிங்கராஜவனம்,
இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் உள்ள காடுகள் பெரிய காடுகளாக காணப்படுகின்றன.
காடுகளின் பயன்கள்
காட்டுவளம் முழுவதும் பயன்கள் மாத்திரமே தருகின்றன இதனால் தீமை என்று எதனையும் குறிப்பிட்டு கூற முடியாது.
இக்காடுகள் அதிகம் காணப்படுவதனால் பூமியின் வெப்பநிலை குறைக்கப்படுவதுடன் வறட்சி, மண்சரிவு அனர்த்தங்கள் குறைக்கப்பட்டு முனைவு பகுதிகளில் பனிக்கட்டி உருகுதல் செயற்பாடு குறைவடைந்து செல்லும். இதனால் தீவுகள், கரையோரங்கள் என்பன பாதுகாக்கப்படுகின்றன.
உலகின் சுவாசப்பை என காடுகள் அழைக்கப்படுகின்றன. ஏனெனில் சுவாசத்திற்கு தேவையான ஒட்சிசன் வாயு போதியளவு கிடைக்கின்றமேயாகும்.
அதிகம் காடுகள் காணப்படுவதனால் மழைவீழ்ச்சிக்கு தேவையான ஆவியுயிர்ப்பு மேற்கொள்ளப்பட்டு அதிக மழைவீழ்ச்சி பூமிக்கு கிடைப்பது இறைவன் கொடுத்த வரம் என்று குறிப்பிடலாம்.
அதுமட்டுமல்லாமல் எரிபொருளாகவும், உயிரினங்களின் பாதுகாப்பு அரணாகவும், தளபாட உற்பத்திக்காகவும் காடுகளின் பயன்கள் இன்றியமையாததாக காணப்படுகின்றது.
சுற்றுலாவிற்கு ஒரு கண்கவர் பிரதேசமாக இக் காட்டு பிரதேசங்கள் காணப்படுவதுடன் பல அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், பூக்கள் என்பவற்றினை காணக்கூடிய ஒரு இடமாகவும் காட்டுப் பிரதேசம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீண்ட ஆயுளை இக் காடுகள் தருகின்றது. அத்துடன் காடுகள் இருப்பதனால் நிலச்சரிவு, மண் சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றது.
இவ்வாறு காடுகளின் பயன்கள் சொல்லற் கரிய பல பயன்களை எமக்குத் தருகின்றது.
காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்
காடுகளை அழிப்பதனால் மழை வீழ்ச்சி குறைவு, வெப்பநிலை அதிகரிப்பதுடன் பனிக்கட்டிகள் உருகி சிறிய தீவுகள், கரையோரங்கள் என்பன நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுகின்றது.
அத்துடன் காடுகளை அழிப்பதனால் வரட்சி, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களும் மனித சுவாசத்திற்கு தேவையான ஒட்சிசன் கிடைக்காமலும் போகின்றது.
இன்று இந்தியாவில் 33 சதவீதமாக காணப்பட்ட காடுகள் 22 சதவீதமாக குறைந்துள்ளது.
பலநாடுகள் மேற்கூறப்பட்ட விளைவுகளை சந்தித்து வருகின்றன. ஆதலால் காடுகளை வளர்த்து அதிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வோம்.
முடிவுரை
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது நாட்டிற்கு தரும் நன்கொடை ஆதலால் நாம் மரம் நடுவதன் மூலம் மழைவீழ்ச்சி அதிகரிப்பதுடன் எம்மை இயற்கை அழிவுகளிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
ஆதலால் காடுகளை அழிக்காமல் காட்டு வளத்தினை பாதுகாத்தால் மனித வளமும் பாதுகாப்பாக வாழ முடியும்.
You May Also Like: