இந்த பதிவில் “உடைந்த தொலைபேசியின் சுயசரிதை கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டு அமைந்துள்ளன.
அன்றாடம் எமது தொடர்பாடல்களை மேற்கொள்ள பெரும் உறுதுணையாக இருப்பது இந்த தொலைபேசிகள். இன்று தொழிநுட்பத்தின் வளர்ச்சியால் பல வடிவங்களில் எமக்கு கிடைக்கின்றன.
உடைந்த தொலைபேசியின் சுயசரிதை கட்டுரை – 1
இன்று உடைந்த நிலையில் இருக்கின்ற ஒரு தொலைபேசி தான் நானாவேன். வெகுதொலைவில் இருந்த பல உறவுகளை குரல் வழியாக இணைத்து அந்த உறவுகளுக்கு பாலமாக இருந்தவன் நான்.
என்னுடைய கடந்த காலத்தை என் மனதுக்குள் மீட்டி பார்த்து கொள்கின்றேன். நான் கடந்த பத்து வருடங்களாக எனது சேவையினை அந்த குடும்பத்தவர்களுக்கு வழங்கி வந்தேன். என்னை ஒரு தொலைபேசி என்பதனை தாண்டி அந்த குடும்பத்தில் ஒரு அங்கத்தவர் போலவே அவர்கள் பாவித்தனர்.
அவர்களை தேடி வருகின்ற மகிழ்ச்சியான செய்திகளானாலும் அவசர அழைப்புக்களானாலும் அவர்களுக்கு முதலில் தெரியப்படுத்துவது நான் தான். வெளியூரில் இருக்கின்ற தமது உறவுகளோடு நீண்ட நேரம் அவர்கள் உரையாடி கொள்ளும் போது அவர்கள் தமது அருகில் இருப்பது போன்ற உணர்வை நான் அவர்களுக்கு கொடுப்பேன்.
வெளியூர்களில் இருந்து தங்கள் வருகையினை விருந்தினர்கள் அறிவிக்கும் போதெல்லாம் அவர்களது மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. இவ்வாறு அவர்களது தொடர்பாடலில் ஒரு கருவியாக நான் பங்களித்து கொண்டிருந்தேன்.
அழைப்பு ஏற்படும் போது சத்தமாக நான் மணி எழுப்புகையில் எங்கிருந்தாயினும் யாரேனும் ஒருவர் ஓடி வந்து அழைப்பை எடுத்து பேசுவார்கள். அந்த குடும்பத்தின் சிறுவர்கள் தமது நண்பர்களுக்கு அழைத்து அரட்டையடித்து கொண்டிருப்பார்கள்.
நண்பர்களுக்கிடையான எத்தனையோ அன்பையும் நட்பையும் நான் பரிமாறி கொண்டிருப்பேன். இவ்வாறு எனது இறுதி காலம் வரையில் எனது சேவையினை நான் வழங்கினேன்.
அன்றொரு நாள் தவறுதலாக கீழே விழுந்து நான் உடைந்து போக இன்று இந்த நிலையில் கைவிடப்பட்டபவனாக தொடர்பற்று கிடக்கின்றேன்.
உடைந்த தொலைபேசியின் சுயசரிதை கட்டுரை – 2
ஒரு நாளைக்குள் பல தடைவைகள் ஒலித்து ஓய்ந்து போவேன். எனக்கு இன்று நன்றாக வயதாகி விட்டது. எனது உடல் பாகங்கள் சிதைவடைந்த நிலையில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு தொலைபேசி பழுது பார்க்கும் கடையில் கிடக்கின்றேன்.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு அலுவலகத்தின் கடமைகளுக்காக அந்த அலுவலக மேசையினை அலங்கரித்தவன் நானாவேன். நாள் முழுவதும் தமது சேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக பல மனிதர்கள் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி பேசி கொள்வார்கள்.
அதன் மூலம் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். நீண்ட காலமாக இந்த மக்களுக்காக நான் அரசசேவை ஆற்றி கொண்டிருந்தேன். ஓய்வு இல்லாமல் பல கடமைகளை ஆற்றுவதனாலோ என்னவோ எனக்கும் வயதாகி விட்டது போன்ற ஒரு உணர்வு.
என் வாழ்நாளில் நான் அதிகளவான மக்களின் அழைப்புகளை இந்த அதிகாரிகளிடம் கொண்டு போய் சேர்த்திருக்கின்றேன். அவர்களது சந்தேகங்களுக்கும் நல்ல தீர்வுகளை அவர்களுக்கு பெற்று கொடுத்திருக்கின்றேன்.
அது போலவே அந்த அலுவவலகத்தில் பணி புரிபவர்களுடைய கடைமையை அவர்கள் சரியாக செய்ய நான் ஒரு முக்கியமான பங்கினை வழங்கி இருக்கின்றேன். இவ்வாறு சில வருடங்களின் பின் எனது சேவை முடிவுக்கு வந்தது.
ஒரு நாள் அலுவலகத்தினை ஒழுங்கு படுத்துகையில் நான் தவறுதலாக கீழே விழுந்து உடைந்து போனேன் இதனால் என்னால் சரியாக இயங்க முடியாமல் போனது.
இதனை கருத்தில் கொண்ட அதிகாரிகள் என்னை அங்கிருந்து அகற்றி ஒரு பழுதுபார்க்கும் கடையில் கொடுத்தனர். அங்கு இன்னும் திருத்தப்படாத நிலையில் இன்று எனது வாழ்க்கை சென்று கொண்டிருக்கின்றது.
You May Also Like: