ஐக்கிய அமெரிக்கா நாட்டை சேர்ந்த அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர், அரசியல் தலைவர், எழுத்தாளர் என பல முகங்களைக் கொண்ட “பெஞ்சமின் பிராங்கிளின் பொன்மொழிகள்” தொகுப்பை பார்க்கலாம்.
- பெஞ்சமின் பிராங்கிளின் பொன்மொழிகள்
- Benjamin Franklin Quotes In Tamil
பெஞ்சமின் பிராங்கிளின் பொன்மொழிகள்
1.வாழ்க்கையில் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் இல்லாமல், சாதனை மற்றும் வெற்றி போன்ற வார்த்தைகளுக்குப் பொருள் இல்லை.
2. நேரம் என்பது சட்டைப் பையில் உள்ள பணம் மாதிரி அதை இழக்கவும் கூடாது, பத்திரமாக செலவும் செய்ய வேண்டும்.
3. சீக்கிரமாக படுக்கைக்கு செல்வதும் சீக்கிரமாக படுக்கையைவிட்டு எழுவதுமே ஒரு மனிதனின் ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், அறிவையும் உருவாக்குகின்றது.
4. நம்பிக்கை எனும் கண்கொண்டு பார்க்க வேண்டுமானால் பகுத்தறிவுக் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும்.
5. ஒருவருடன் நட்புக்கொள்வதற்கு முன் ஐந்து முறை யோசித்து முடிவு செய். நட்பை முறித்துக் கொள்வதற்கு முன் பத்து முறை யோசித்து முடிவுக்கு வரவேண்டும்.
6. வருமானத்துக்கு குறைவாக செலவு செய்ய நீங்கள் கற்றுக்கொண்டால் உங்களை விட செல்வந்தர் யாருமில்லை.
7. மனநிறைவே தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் மந்திரக்கோல்.
8. சகிப்புத் தன்மையின் மறுபெயர் பொறுமை. இதை நீ மந்திரமாக கையகப்படுத்திக் கொண்டால் சாம்ராஜ்ஜியங்கள் கூட நீ சொல்வதைக் கேட்கும்.
9. உன் மனசாட்சிக்கு மறுபெயர்தான் கடவுள். உனக்குள் இருக்கும் உள்ள இந்தக் கடவுளை நீ வணங்கினால் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்வாய்.
Benjamin Franklin Quotes In Tamil
10. உனது மனசாட்சிக்கு மறுபெயர்தான் கடவுள். உன் உள்ளேயே உள்ள தெய்வத்தைப் பூஜித்தால் தவறுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
11. கண்ணாடி, மானம் ஆகியவை வெகு சுலபமாக உடைந்து போகக்கூடியவை. மீண்டும் முன்போல் உருவாக்க முடியாதவை.
12. நீ எதைச் செய்ய வேண்டுமென்று கருதுகிறாயோ அதையே தீர்மானம் செய்துகொள். தீர்மானம் செய்த பிறகு ஒத்தி போடுவது நல்லதல்ல.
13. வருமானம் என்பது தற்காலிகமானது; நிச்சயமற்றது. ஆனால் செலவு என்பதோ உங்கள் வாழ்நாள் முழுவதும் நிலையானது, நிச்சயமானது.
14. செய்த தவறுகளுக்கும் செய்யத் தவறிய கடமைகளுக்கும் பொறுப்பை இறைவன் மீது சுமத்திவிட்டு தப்பிவிட கண்டுபிடித்த சதிதான் விதி.
15. நல்ல மதிப்பை பெறுவதற்கு பல நல்ல செயல்கள் தேவைப்படுகிறது ஆனால் அதை இழப்பதற்கு ஒரே ஒரு மோசமான செயலே தேவைப்படுகிறது.
16. தேவையில்லாதபோது வாயை மூடிக்கொள்ளுங்கள், சரியான சந்தர்ப்பம் வரும்போது சொல்லுங்கள். சொல்வதை தீப்பொறி எழச் சொல்லுங்கள்.
17. நீ வாழ்க்கையை காதலிக்கிறாயா? அப்படியானால் நீ நேரத்தை வீணாக்காதே. ஏனென்றால் வாழ்கையின் மூலப்பொருளே நேரம்தான்.
18. சிறிய செலவுகளில் கவனமாக இருங்கள், ஒரு சிறு துளையானது எவ்வளவு பெரிய கப்பலையும் மூழ்கடித்துவிடும்.
19. செய்வதை இன்றே செய்யுங்கள்; ஏனென்றால் நாளை உங்களுக்கு எவ்வளவு இடையூறுகள் ஏற்படுமென்பது உங்களுக்குத் தெரியாது.
20. வாழ்க்கையில் முன்னேற வேண்டுமெனில் மனதில் உள்ள அழுக்குகளை முதலில் நீக்குங்கள்.
21. எங்கெல்லாம் கட்டுப்பாடு அதிகமாகிறதோ, அங்கெல்லாம் கள்ளத்தனம் தானாகவே குடியேறிவிடும்.
22. அறிவுள்ளவர்களுக்கு ஆலோசனை தேவையில்லை, முட்டாள்கள் ஆலோசனையை கேட்கப் போவதில்லை.
23. கடந்த காலம் என்பது உண்மையிலேயே கடந்த காலம் அல்ல, நிகழ்காலத்தை உணரச் செய்யக்கூடியது.