இந்த பதிவில் “நான் ஒரு கைக்கடிகாரம் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரை தொகுப்பை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டு காணப்படுகின்றன.
நான் ஒரு கைக்கடிகாரம் கட்டுரை – 1
மனிதர்களுடைய வாழ்விலே முன்னோக்கி ஓடிக்கொண்டிருப்பது நேரம். இது நல்ல நேரமாகவும் அமையலாம். மாறாக கெட்ட நேரமாகவும் அமையலாம். ஆனால் யாருக்காகவும் எந்த சந்தரப்பத்திலும் காத்திருக்காது. இதனால் தான் நேரத்தை மனிதர்கள் பொன் போன்றது என்று கூறுவார்கள்.
இந்த நேரத்தை காட்டுவது தான் எனது வேலை. ஒரு நாளின் துவக்கத்தில் இருந்து அந்த நாள் முடிகின்ற வரையில் நேரத்தை அடிப்படையாக கொண்டு தான் மனிதர்கள் தமது வாழ்க்கையை திட்டமிடுகின்றனர்.
சரியாக திட்டமிடுகின்றவர்கள் வாழ்வில் வெற்றி பெறுகின்றனர். தவறாக நேரத்தை திட்டமிடுபவர்கள் வாழ்வில் தோல்வி அடைகின்றார்கள்.
அதிகாலையில் எழுந்து தமது கடமைகளை முடித்து வேலைக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்லவும் கல்வி கற்பவர்கள் பாடசாலையை நோக்கி செல்லவும் நான் அவர்களுக்கு உந்துதலாக இருக்கின்றேன்.
வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக உழைத்து விட்டு உண்ணவும் ஓய்வெடுக்கவும் உரிய நேரத்தை நானே காட்டுகின்றேன். நாள் முழுவதும் உழைத்து களைத்த மனிதர்கள் தமது வேலைகள் முடிந்ததும் என்னை பார்த்து மகிழ்வோடு தமது வீடுகளை நோக்கி ஓடுவார்கள்.
இந்த அவசரமான உலகத்தின் வாழ்க்கை முறைகளில் மனிதர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களை இயக்கி கொண்டிருப்பவன் நான் தான். என்னை பார்த்து தான் விழித்து கொள்வார்கள், என்னை பாரத்து தான் இலக்கை நோக்கி ஓடுகிறார்கள், என்னை பார்த்து தான் ஓய்வெடுக்கின்றார்கள்.
இவ்வாறு என்னால் முடிந்த வரையில் மனிதர்களது வாழ்வில் நான் ஒரு நண்பனை போல அவர்களோடு இருந்து அவர்களது இலக்குகளை நோக்கி அவர்களை நான் ஓட வைக்கின்றேன்.
நான் ஒரு கைக்கடிகாரம் கட்டுரை – 2
நான் ஒரு கைக்கடிகாரம் ஆவேன் எனது தொழில் நேரத்தை காட்டுவதாகும். என்னை மனிதர்கள் காலம் தவறாமல் இருப்பதற்காக கையில் அணிவார்கள். என்னை அவர்களது கம்பீரமான தோற்றத்துக்காகவும் கைகளில் அணிந்து கொள்வார்கள்.
பொதுவாக நான் மூன்று முட்களை கொண்டு இருபத்திநான்கு மணித்தியால நேரத்தை காண்பிப்பேன். எனது உதவியுடன் மனிதர்கள் நேரத்தை அறிந்து அதற்கு ஏற்ப தமது கடமைகளை ஆற்றுவார்கள்.
நான் பல வர்ணங்களில் காட்சி அளிப்பேன். வெள்ளை, கறுப்பு, நீலம், வெள்ளி, தங்கம் போன்ற பல நிறங்களில் இன்று உருவாக்கப்படுகின்றேன். என்னை இன்று நவீன முறைகளில் உலோகங்கள் இன்றி பிளாஸ்ரிக்கை பயன்படுத்தியும் உருவாக்கின்றார்கள்.
இன்று என்னை டிஜிட்டல்(இலத்திரனியல்) கைக்கடிகாரங்களாகவும் உருவாக்குகின்றார்கள். நான் வெறுமனவே நேரத்தை காட்டுவது மட்டுமல்லாது. திசைகாட்டியாகவும் உடல் நிலையை கவனிக்க கூடிய உணர்திறன் மிக்கதாகவும் ஒரு சிறிய தொலைபேசியினை போலவும் இன்றை நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்படுகின்றேன்.
சிறிய விலைகளில் இருந்து அதிக உயர்ந்த விலைகள் வரையில் என்னை கடைகளில் விற்பனை செய்கின்றனர். இருப்பினும் நான் அனைவருக்கும் ஒரே நேரத்தை தான் காண்பிக்கின்றேன்.
நேரத்தை சரியாக மதித்து அதற்கேற்ப தமது கடமைகளை ஆற்றுகின்ற சிறந்த மனிதர்கள் எப்போதும் என்னை தமது கைகளில் அணிந்திருப்பார்கள். நானும் அவர்களுக்கு ஒரு சிறந்த நண்பனாக இருந்து அவர்கள் வாழ்வில் முன்னேறி செல்ல உதவுகின்றேன்.
என்னை அணிந்து கொள்வதனால் நான் மனிதர்களுக்கு நேரத்தின் அவசியத்தினை உணர்த்தி கொண்டே இருப்பேன். ஏன் என்றால் எமக்கான நேரம் குறைந்து கொண்டே செல்கின்றது என்பதுவே தெளிவான உண்மையாகும்.
You May Also Like: