இந்த பதிவில் “நான் ஒரு ஓவியர் ஆனால் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டு அமைந்துள்ளன.
நான் ஒரு ஓவியர் ஆனால் கட்டுரை – 1
பார்த்தவுடன் மனதை கவர்கின்ற அற்புதமான ஒரு சக்தி ஓவியங்களுக்கு இருக்கின்றது. என் மனதிலே எழுகின்ற பல எண்ண ஓட்டங்களையும் கற்பனைகளையும் நான் அழகான ஓவியங்களாக நான் படைப்பேன்.
என்னுடைய மொழி இந்த அழகிய வர்ணங்களாகும் அதற்கான கருவி இந்த தூரிகைகளும் பென்சில்களும் ஆகும். எனக்கு கற்பனை செய்து பார்க்கவும் புதிய கோணங்களில் சிந்திக்கவும் எனக்கு பிடிக்கும். இதனால் தான் எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டானது.
நான் எனது ஓய்வு நேரங்களில் பெயர் தெரியாத புதிய ஊர்களுக்கு பயணம் செய்வேன். அங்கே பல புதிய மக்களை சந்திப்பேன் அங்குள்ள இயற்கை அம்சங்களான காடுகள், மலைகள், குளங்கள், அருவிகள் என்று அனைத்தையும் பார்த்து இரசிப்பேன் மக்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்ற நகரங்களையும் பார்ப்பேன்.
பின்பு பயணத்தை முடித்து கொள்வேன் பின்பு நான் பார்த்து இரசித்த அந்த அழகான காட்சிகளை மனதில் மீட்டி பார்த்து கொள்வேன். அவற்றில் என்னை கவர்ந்த காட்சிகளை ஓவியமாக வரைவேன். இது எனக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.
எனது பயணங்களை அர்த்தமடைய செய்வதாகவும் இருக்கும். இவ்வாறு நான் எனது ஓவியங்களை வர்ணங்களாகவும் கறுப்பு வெள்ளை நிறங்களாகவும் வரைவேன்.
அவற்றில் மிகவும் பிடித்த ஓவியங்களை பத்திரப்படுத்தி வைப்பேன் இந்த ஓவியங்களை பார்க்கின்றவர்கள் அதனை வாங்கி சென்று தமது வீடுகளில் வைக்க ஆர்வத்தோடு வருவார்கள் எனக்கும் அவற்றை விற்பதனால் ஒரு தொகை பணம் எனக்கு கிடைக்கும் இவ்வாறு இந்த ஓவியம் வரைகின்ற கலை எனக்கு ஒரு சிறந்த தொழிலாகவும் மன நிறைவான வாழ்வாகவும் இருக்கும்.
நான் ஒரு ஓவியர் ஆனால் கட்டுரை – 2
உலகத்தில புகழ் பெற்ற கலைகளில் ஓவியக்கலையும் ஒன்றாகும். நான் ஒரு ஓவியரானால் இந்த உலகம் முழுவதும் பயணம் செய்து பல புதிய நாடுகள் புதிய ஊர்கள் புதிய மனிதர்களை சந்தித்து அங்கே எனக்கு கிடைத்த பல புதிய அனுபவங்களை சிறந்த புகழ் பெற்ற ஓவியங்களாக நான் வரைவேன்.
ஓவியங்கள் பல ஆழமான கதைகளை அழகாக சொல்ல கூடியன. எனவே நான் வரைகின்ற ஓவியங்கள் ஒவ்வொரு புதிய இடங்களில் காணப்படுகின்ற பல புதிய கதைகளை வெளிப்படுத்தும் ஓவியங்களாக வரைவேன்.
அழகான கலைப்படைப்புக்கள், அற்புதமான நகரங்கள், எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகள், பிரபல்யமான மனிதர்கள், வினோதங்கள் நிறைந்த விலங்குகள் என பார்வையில் படுகின்ற விடயங்களை நான் ஓவியமாக வரைவேன்.
வெறுமனே அழகியலை மட்டும் வெளிப்படுத்துவது ஓவியம் ஆகாது. எனவே நான் இந்த உலகத்தில் நிகழ்கின்ற அநியாயங்கள், கொடுமையான யுத்தங்கள், பாதிக்கப்படுகின்ற மக்கள் இவை போன்ற வேதனையான நிகழ்வுகளையும் ஓவியமாக வரைந்து இந்த மக்களுக்கு போய் சேரும் படி செய்வேன்.
ஒரு ஓவியன் பக்கசார்பின்றி நேர்மையாக தனது படைப்புக்களை வெளிக்கொணர வேண்டும் ஆகவே நானும் நேர்மையாக நடந்து கொள்வேன்.
இந்த சமூகத்தில் வாழ்கின்ற மனிதர்களுக்கு பல விதமான தவறான எண்ணங்கள் உள்ளன. அவற்றுக்கு எனது வண்ணங்களால் நான் பதில் அளிப்பேன். எனது ஓவியங்கள் மூலமாக அவர்களது எண்ண ஓட்டங்களை மாற்ற முயல்வேன்.
இந்த இயற்கையையும் சக மனிதர்களையும் நேசிக்கின்ற ஒரு கலைஞனாக நான் இருப்பேன். இதுவே எனக்கு ஒரு சிறந்த ஓவியன் என்ற எண்ணத்தை உருவாக்கி தரும் என்று நம்புகின்றேன்.
You May Also Like: