ஓசோன் படலம் பாதுகாப்பு கட்டுரை

ozone pathukappu katturai in tamil

இந்த பதிவில் வளி மண்டலத்தின் பாதுகாப்பு கவசமாகிய “ஓசோன் படலம் பாதுகாப்பு கட்டுரை” பதிவை காணலாம்.

நாம் வாழ்வதற்கு அவசியமான வாயுக்களை உள்ளடக்கிய கண்ணுக்கு தெரியாத படையாக ஓசோன் படலம் தொழிற்படுகின்றது.

ஓசோன் படலம் பாதுகாப்பு கட்டுரை

ஓசோன் படலம் பாதுகாப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. அவசியம்
  3. தொழிற்பாடு
  4. தேய்வதற்கான காரணங்கள்
  5. தடுக்கும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

நாம் வாழ்கின்ற பூமியினுடைய பாதுகாப்பு கவசமாக தொழிற்படுவது வளி மண்டலமாகும். இதுவே நாம் வாழ்வதற்கு அவசியமான வாயுக்களை உள்ளடக்கிய கண்ணுக்கு தெரியாத படையாக தொழிற்படுகின்றது.

வளி மண்ணடலத்தில் மிகவும் முக்கியமான படையாக ஓசோன் படையானது விளங்கி வருகின்றது. இந்த படையானது அண்மைக்காலமாக அழிவடைந்து வருதாக விஞ்ஞானிகளால் எச்சரிக்கப்பட்டு வருகின்றது.

இதனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் அதற்கான வழிமுறைகள் என்பன தொடர்பாக இக்கட்டுரையில் காண்போம்.

அவசியம்

இந்த ஓசோன் படையானது மூன்று ஒட்சிசன் மூலக்கூறுகள் இணைவதனால் உருவாக்கப்படுகின்றது. இந்த வலுவான பிணைப்பு தான் சூரியனில் இருந்து வருகின்ற ஆபத்தான கதிர்வீச்சுக்களை தடுத்து பூமியில் உள்ள உயிரினங்களை பாதுகாக்கின்ற வேலையினை செய்கின்றது.

இது இல்லையென்றால் ஆபத்தான கதிர்களால் இங்குள்ள உயிரினங்கள் யாவும் அழிந்துவிடும் என்கிறார்கள் இதன் வாயிலாக இதன் அவசியமானது புலனாகின்றது.

தொழிற்பாடு

இந்த ஓசோன் படையானது பூமிக்குள் வருகின்ற அலைநீளம் கூடிய ஆபத்தான கதிர்களான புறஊதாகதிர்கள் போன்றவற்றை அகத்துறிஞ்சி ஒரு வடிகட்டியாக தொழிற்படுகின்றது.

அவ்வாறே பூமிக்கு தேவையான நல்ல கதிர்களையும் சூரிய ஒளியையும் உள்ளே அனுமதிக்கும் வேலையினை செய்கின்றது. சமீப காலங்களாக இந்த படையானது தேய்வடைந்து வருவதனால் பூமிக்குள் ஆபத்தான கதிர்வீச்சுக்கள் உள்வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேய்வதற்கான காரணங்கள்

இந்த படையானது தேய்வடைவதற்கான காரணங்களாக ஊக்கிகளாக தொழிற்படும் வாயுவான குளோரோ புளோரோகாபன் மற்றும் நைத்திரக் ஆக்சைட் ஆகிய வாயுக்கள் காணப்படுகின்றன. இவை ஓசோன் படலத்தை சிதைவடைய செய்து வருகின்றன.

இந்த குளோரோ புளோரோ காபன் வாயுவானது மனிதர்கள் பயன்படுத்துகின்ற குளிர்சாதன பெட்டிகளில் இருந்து அதிகம் வெளியேறுகின்றது எனவும் கூறப்படுகின்றது. மற்றும் மனிதர்களால் வெளியிடப்படும் தொழிற்சாலை, வாகன கழிவுகள் தான் இந்த ஓசோன் படையினை அழிவடைய செய்து வருகின்றன.

ஓசோன் படை தேய்வடையவதனால் பூமியில் மனிதர்களுக்கு பல வகையான பிரச்சனைகள் உருவாகின்றன. கண் சார்ந்த, தோல் சார்ந்த நோய்கள் உருவாகவும் பல ஆபத்தான புற்று நோய்கள் ஏற்படவும் காரணமாக உள்ளன.

தடுக்கும் வழிமுறைகள்

இந்த நிலையினால் உலகமே ஆபத்தான நிலையினை உணர்ந்து வருகின்றது. குறிப்பாக துருவ பகுதிகளை அண்டி வாழ்கின்ற நாடுகளான நோர்வே, பின்லாந்து, சுவீடன், கனடா போன்ற நாடுகள் ஓசோன் படை தேய்வினால் பல நேரடியான பாதிப்புக்களை எதிர்கொள்கின்றன.

சூழல் நேய செயற்பாடுகளே இந்த பாதிப்பை தடுக்கும் வழி முறையாக உள்ளது. இதற்காகவே ஐக்கிய நாடுகள் சபையானது பல மாநாடுகளை நடாத்தி ஓசோன் தொடர்பான விழிப்புணர்வை உலக மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றது.

முடிவுரை

இன்றைய காலகட்டத்தில் மனிதர்களிடையே இயற்கை மீதான அக்கறை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் தான் பல வகையான சூழல்சார் பிரச்சனைகள் தோன்றி வருகின்றன.

இவை எமது இயல்பு வாழ்க்கையை மேலும் சவால் நிறைந்ததாக மாற்றியுள்ளன. எனவே நாம் சிந்தித்து சரியாக செயலாற்றுவதன் வாயிலாக இந்த பாதிப்புக்களில் இருந்து விடுபட முடியும்.

You May Also Like :
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை
நெகிழி தீமைகள் கட்டுரை