Tamil Kamarajar Katturai – காமராஜர் கட்டுரை

Tamil Kamarajar Katturai

இந்த பதிவில் Tamil Kamarajar Katturai – காமராஜர் கட்டுரை பதிவை காணலாம்.

மனிதர்கள் மறைந்தாலும் சில மனிதர்கள் வரலாற்றில் இருந்து மறைவதில்லை அத்தகைய பெருந்தலைவர் கர்மவீரர் என்று அழைக்கப்படும் காமராஜர்.

இவர் மக்களை நேசித்து அவர்களுக்காக செய்த சேவைகள் அளப்பெரியவை.

  • Tamil Kamarajar Katturai
  • Tamil Kamarajar Katturai – காமராஜர் கட்டுரை
  • காமராஜர் கட்டுரை
தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் கட்டுரை

Tamil Kamarajar Katturai

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பிறப்பும் வாழக்கை முறையும்
  3. அரசியல் பணிகள்
  4. ஆற்றிய பணிகள்
  5. முடிவுரை

முன்னுரை

இந்திய வரலாற்றில் என்றும் மறக்க முடியாத தலைவர்கள் பலர் வாழ்ந்து பல சேவைகளை ஆற்றி அடுத்த தலைமுறைக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து சென்றிருக்கிறார்கள்.

சுதந்திர போராட்ட வரலாற்றில் தமிழகத்தில் உருவான மகத்தான மக்கள் தலைவர் தமிழகத்துக்கு பல மகத்தான தலைவர்களை பிற்காலத்தில் உருவாக்கிய சிற்பி இவராவார்.

இவரை “கரும வீரர்” என்று சிறப்பாக அழைப்பார்கள். இவரே இன்றைக்கும் மக்களால் போற்றப்படும் ஆக சிறந்த தலைவராக மனிதாபிமானமும் சமுதாய நன்மை கருதி செயற்பட்ட ஒப்பற்ற மனிதராவார்.

இவருடைய பிறப்பு, வாழ்க்கை முறை, அரசியல் பணி மற்றும் இவர் ஆற்றிய பணிகள் ஆகிய விடயங்களை இக்கட்டுரை காண்கிறது.

பிறப்பு மற்றும் வாழ்க்கைமுறை

தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான அன்றைய இராமநாதபுரத்தின் விருதுப்பட்டி கிராமத்தில் 15 ஜூலை 1903 இல் தந்தை குமாரசாமி தாயார் காமாட்சி அம்மையார்க்கு மகனாக பிறந்தார்.

சிறுவயதிலேயே தந்தை இறந்தமையால் பள்ளிக்கூடம் செல்லமுடியாமல் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை காமராஜருக்கு ஏற்பட்டது. தனது மாமனார் கறுப்பையா என்பவருடைய துணிக்கடையில் வேலைபார்க்கும் போதே இந்திய அரசியலை கற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

சுதந்திர போராட்டம் கொந்தளிப்போடு இடம் பெற்றுகொண்டிருந்த காலகட்டம் அக்காலத்தில் காங்கிரஸ் கட்சி பிரபல்யமானது. இதனோடு இணைந்த அவர்களது அரசியலை உள்வாங்க துவங்கினார்.

அக்கட்சியின் தொண்டனாக தனது அரசியல் பணியை துவங்கினார். இவருக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்தால் அவர் அரசியலில் இருந்து விலகிவிடுவார் என உறவினர்கள் விரும்பினர்.

ஆனால் அவர் தனக்கு விரும்பிய அரசியலால் திருமணம் கூட செய்து கொள்ளவில்லை. இவ்வாறு தனது வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாது நாட்டுக்கும் மக்களுக்கும் இவர் சேவை செய்தார்.

அரசியல் பணிகள்

இவர் 1937 இல் தேர்தலில் பங்குபற்ற துவங்கினரார். காமராஜர் கட்சி பணி, மக்கள் பணி இரண்டிலும் இவர் தீவிரம் காட்டினார். 1940 இல் இடம்பெற்ற காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

1942 இல் ஆகஸ்ட் புரட்சிக்காக மும்பையில் இருந்து நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல்களை ரயில் மூலம் பொலிஸ் கண்ணில் படாமல் கொண்டு வந்து சேர்த்தமையால் பலராலும் பேசப்பட்ட தலைவரானார்.

கண்ணியமான மனிதராகவும் கடுமையான உழைப்பாளியாகவும் அரசியலில் வலம் வந்தார். நேர்மையான வழியில் மக்களுக்கு சேவையாற்றுவதை தனது நோக்கமாக கொண்டவர்.

இவர் தமிழ்நாட்டின் தலைவர்களை தீர்மானிக்கும் அளவுக்கு பலம் பொருந்திய அரசியல் செல்வாக்குடைய தலைவராக இருந்தவர்.

1954 இல் முதலமைச்சர் ஆக பதவியேற்றார் பின்பு தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களையும் தனது அமைச்சரவையில் அமர்த்திய பெருமைக்குரியவர்.

ஆற்றிய பணிகள்

இவர் அரசியலோடு சேர்ந்து மக்களுக்காக பல பணிகளை ஆற்றிய பெருந்தலைவர் ஆவார். அமைதி வழியில் மக்கள் நலனுக்காக பணியாற்ற கூடிய எளிமையான தலைவராவார்.

இவர் தமிழ்நாட்டின் பெரும் விவசாய திட்டங்களை விரிவுபடுத்தும் முகமாக பல நீர்த்தேக்கங்களை உருவாக்கினர். கிருஸ்ணகிரி நீர்த்தேக்கம், சாத்தனூர் நீர்தேக்க திட்டம், அமராவதி நீர்தேக்க திட்டம் என ஏராளமான திட்டங்கள் இவரது காலத்தில் செயல் வடிவம் பெற்றன.

தொலைநோக்கு பார்வை உடையவராக மத்திய அரசிடம் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி தமிழ்நாட்டில் பல திட்டங்களை நடைமுறைபடுத்தினார்.

ஏழை குழந்தைகளும் கல்விகற்க வேண்டுமென பாடசாலைகளில் மதிய உணவு திட்டம் ஆரம்பித்தார். ஏராளமான பள்ளிகளை உருவாக்கினார். இலவச கல்வியை விரிவுபடுத்தினார்.

அகில இந்தியளவிலான உற்பத்தி தொழிற்சாலைகளை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தார். மாநிலத்தின் தொழில் வளர்ச்சியில் முன்னின்று செயற்பட்டார். விவசாயிகளுக்கு ஏற்ற பல திட்டங்களை இவர் அமுல்படுத்தினார்.

எதிர்கட்சிகள் கூட பெருமையாக பேசும் வகையில் இவரது பணிகள் காணப்பட்டன.

முடிவுரை

இன்றைக்குள்ள அரசியல் களம் மிகப்பெரிய சாக்கடையாக மாறியுள்ளது. மக்களது நலன்களும் கவனிப்பாரற்று கிடக்கிறது.

இன்றைய ஆட்சியாளர்கள் தம்மையும் தமது குடும்பங்களையும் மட்டும் வாழ்வித்து கொண்டிருக்கும் இக்காலத்தில் காமராஜர் ஆற்றிய ஆட்சிகாலம் என்றைக்கும் பொற்காலமாகும்.

இவரை போன்ற தலைவர்கள் உருவாகின்ற போது தான் இம் மண்ணும் இம் மக்களும் நிம்மதியாக வாழ்வார்கள்.

You May Also Like:

இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்கு கட்டுரை

அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை