இந்த பதிவில் புகழ் பெற்ற வங்காள பல்துறை அறிஞரும் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவருமான “ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்” தொகுப்பை காணலாம்.
- ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்
- ரவீந்திரநாத் தாகூர் சிந்தனைகள்
- தாகூர் தத்துவங்கள்
- Rabindranath Tagore Quotes In Tamil
ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்
1.செபமாலையை உருட்டிக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருக்காதே. நீ விரும்பும் கடவுள் இங்கேயில்லை. அதோ புழுதிபடிய வியர்வை வடிய நிலத்தை உழுது பாடுபடுகிறானே விவசாயி அவனிடம் இருக்கிறார்.
2. உயர்ந்த பண்பாடு என்ற சிறைக்குள் அடைப்பட்டு அதைப்பயில நேர்மை, ஒழுக்கம் என்னும் சட்டதிட்டங்களை நமக்கு நாமே எற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்வதில் பொருள் இருக்க முடியும்.
3. குழம்பிற்கு மிளகாய் எப்படி அவசியமோ அப்படி காதல் வாழ்க்கையிலும் சற்று கோபதாபம் அவசியம் வேண்டும். இல்லாவிடில் அது ரசிக்காது.
4. உங்கள் அன்பை இரகசியமாக வைத்திருக்காதீர்கள்.
5. மனிதன் உள்ளதை உள்ளபடி நோக்கும் ஆற்றல் உடையவனாக இருக்க வேண்டும். தன் சொந்தத் தேவைக்கென்று அமைந்ததாக எதையும் கருதாமல் இயற்கையோடு ஒட்டி வாழத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
6. முயற்சி என்பது இதயத்துள் மூளும் வெறும் உணர்வு மட்டுமல்ல ஆற்றலைக் கிளப்பும் ஒரு தூண்டுகோல் அது.
7. பெண்களிடம் ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது. இந்தச் சக்தியை மதித்து உபயோகிப்பதில்தான் பெருமை இருக்கிறது.
8. சீர்தூக்கிப் பார்க்கும் ஆற்றல் நமக்கு இல்லாவிட்டால் அதனால் விளையும் தீங்கை வட்டியும் அசலுமாக நாம் அனுபவித்துதான் ஆக வேண்டும்.
9. உண்மையான மகிழ்ச்சி நாம் எவ்வளவு பொருளை ஈட்டுகிறோம் என்பதில் இல்லை அந்தப் பொருளில் எவ்வளவு தர்மம் செய்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.
10. வீட்டுக்கு ஒளி தரும் விளக்கே வீட்டை எரிக்கவும் செய்யும்.
Rabindranath Tagore Quotes In Tamil
11. எல்லோரும் தம்மை விட்டுவிட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயல்கின்றனர்.
12. எல்லோரும் தம்மை விட்டுவிட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயல்கின்றனர்.
13. ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம். ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!
14. மனிதன் உலகோடு தனக்குள்ள உறவை உணராவிட்டால் அவன் வாழும் இடம் சிறைக்கூடம்.
15. மனிதன் தன் எண்ணங்களை நல்ல வழியில் செலுத்தினால் அவனது போக்கு உலகின் போக்குடன் பொருந்தும் அப்போது அவனது வாழ்வில் இனிமையும் அமைதியும், அழகும் மிளிரும்.
16. துன்பம் என்பதை ஏதோ அற்பமானது என்று எண்ண வேண்டாம். ஐயோ இதை நாம் எப்படி வெல்வது? என்றும் வருந்த வேண்டாம். திறந்த மனதுடன் தலைநிமிர்ந்து அதை ஏற்று வாழ்வதே உண்மையான மனிதனுக்கு அழகு.