இந்த பதிவில் “மனித மனம் பொன்மொழிகள்” பார்க்கலாம்.
- மனித மனம் பொன்மொழிகள்
- Manam Quotes In Tamil
மனித மனம் பொன்மொழிகள்
1. மனிதர்கள் மனம் போன போக்கில் வாழ்வு நடத்துவது வருந்தத்தக்கதாக உள்ளது. இதை தவிர்க்க வேண்டும்.
2. மனம் தூய்மையானதாக இருந்தால், எதைக் கண்டும் பயப்படத் தேவையிருக்காது.
3. மனதில் பகையுணர்வு இருந்தால் யாரையும் வாழ்த்த முடியாது. வாழ்த்திப் பழகிவிட்டால் பகையுணர்வு நீங்கும்.
4. கவலைப்படுவதால் மனதின் ஆற்றலும், உயிரின் சக்தியும் வீணாகிறது. எதிலும் அளவறிந்து வாழப் பழகினால் சிக்கலுக்கு இடமிருக்காது.
5. பிரச்சனை குறுக்கிடும் போது, மனம் தளர்வது கூடாது. நேர்வழியில் துணிவுடன் போராட வேண்டும்.
6. மனிதனின் வெற்றி, மதிப்பு எல்லாம் அவனுடைய மனதைப் பொறுத்தே அமைகிறது.
7. மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.
8. உண்மையில் எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால், மனதில் எழும் ஒழுங்கற்ற எண்ணங்களே.
9. வாங்கும் கடனும், தேங்கும் பணமும் ஒருவரிடமே வளரக் கூடாது. இல்லாவிட்டால் மனநிம்மதி குறையும்.
10. மனம் தான் வாழ்வின் விளைநிலம். அதன் தன்மையைப் பொறுத்தே ஒருவரின் வாழ்வு அமைகிறது.
11. தேவைகளைப் பெருக்குவது நல்லதல்ல. இதனால் சமநிலை இழந்து மனம் பாவத்தில் ஈடுபடுகிறது.
12. பயனுள்ள பொழுதுபோக்கில் ஆர்வமுடன் ஈடுபட்டால் மனதிலும், உடம்பிலும் புத்துணர்ச்சி உண்டாகும்.
13. மனதுடன் போர் நடத்தாதீர்கள். தியானத்தால் ஒருநிலைப்படுத்துங்கள். இதுவே மகிழ்ச்சிக்கான வழி.
14. பத்து வகை புண்ணியத்தை செய்வதை விட, ஒரு தவறை உணர்ந்து மனம் வருந்தி உண்மையிலேயே திருந்துவது உயர்ந்தது.
15. உடல் வலிமை மிக்கவனாக இருந்தாலும் மனதை அடக்குவது கடினம். அதற்கு விடாமுயற்சியும், பயிற்சியும் அவசியம்.
Manam Quotes In Tamil
16. அடிமையாக கிடப்பதும், சுதந்திரமாக வாழ்வதும் அவரவர் மனநிலையைப் பொறுத்ததே.
17. அலைபாயும் மனதை தியானப் பயிற்சியின் மூலம் ஒருமுகப்படுத்தி வலிமையுள்ளதாக மாற்ற முடியும்.
18. திறந்த மனதுடன் மற்றவர்களிடம் பழகுங்கள். எண்ணம், செயலில் நேர்மையைப் பின்பற்றுங்கள்.
19. மனதை தூய்மையாக வைத்திருங்கள். ஏனென்றால் மனமே எண்ணத்தின் உற்பத்தி ஸ்தானமாக இருக்கிறது.
20. உள்ளத்தில் பணிவு இருந்தால் மூவுலகையும் ஆளும் வலிமையைப் பெற முடியும்.
21. முதலில் நல்ல எண்ணத்தை மனதில் வித்திட வேண்டும். அந்த எண்ணம் என்னும் விதையில் இருந்து நற்செயல் என்னும் மரம் முளைக்கத் தொடங்கிவிடும்.
22. கண்கள் நல்லதையே பார்க்கட்டும். காதுகள் நல்லவிஷயங்களையே கேட்கட்டும். மனம் நல்லதையே சிந்தித்திருக்கட்டும்.
23. உங்களது தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். எளிமையில் ஈடுபாடு கொள்ளுங்கள். மனதிருப்தியே இன்ப வாழ்வு என்பதை உணருங்கள்.
24. எண்ணம் போலவே வாழ்வு அமைகிறது. எப்போதும் உயர்ந்ததை மட்டுமே சிந்தியுங்கள்.
25. முதலில் மனதில் திட்டமிடுங்கள். அதையே சிந்தித்து செயல்படுத்துங்கள். வெற்றிக்கான வழி இதுவே.
26. மனதால் பிறருக்கு நல்லதையே எண்ணுங்கள். அப்போது நீங்கள் உயர்ந்த மனிதனாக மாறிவிடுவதை உணர்வீர்கள்.
27. செல்வம், புகழ் இருந்தால் வெளியுலகில் வேண்டுமானால் உற்சாகமாக இருப்பது போல் காட்டிக் கொள்ளலாம். ஆனால், தூய்மையான மனம் இருந்தால் தான் நிம்மதி இருக்கும்.
28. மனதில் எப்போதும் அமைதியும், சந்தோஷமும் நிறைந்திருக்கட்டும். அமைதியே அகவாழ்வையும், புறவாழ்வையும் இணைக்க வல்லது
29. மனதைக் கெடுக்கும் பொழுதுபோக்குகளில் ஈடுபடாதீர்கள். தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உணவு, உடை, பழக்கவழக்கங்கள் அனைத்திலும் எளிமையைக் கடைபிடியுங்கள்.